16 March 2015

ஜாக்கெட்டிலே இருந்த ஜன்னல் ,இனி :)

         ''டைரக்டர் சார் ,ஹீரோயினுக்காக  வாங்கி  வந்த சேலையில் ஓட்டை இருக்கே ,என்ன பண்றது ?''

         '' அந்த ஓட்டையில் தொப்புள் தெரியுற மாதிரி கட்டி விடுங்க ,ஜன்னல் சாரின்னு விளம்பரம் பண்ணிக்கலாம் !''


சர்க்கரை நோய் இருந்தா இங்கே வேலை நிச்சயம் !

       ''அந்த ஸ்வீ ட் ஸ்டால்லே வேலைக்கு ஆள் எடுக்கிறாங்கலாமே ,
என்ன தகுதி வேணுமாம் ?''
            ''அவசியம் சர்க்கரை நோய் இருக்கணுமாம் !''

அட ஒரு நாலஞ்சு விசயங்களை ஒன்றாக போடுங்களேன். அநியாயத்திற்கு ரெண்டு வரிக்கெல்லாம் ஒரு பதிவா?.
  1. இன்றைக்கு இது இரண்டாவது பதிவு , நீளமாய் பதிவு போட ஆசைதான் நேரமின்மைதான் காரணம் ..அவ்வப்போது சற்று நீளமாய் பதிவு வருவதைப் படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன் !
    ஆலோசனைக்கு நன்றி !
  2. 16.௦3.15 இன்றைய குறிப்பு ...சகோ ,ஜோதிஜி அவர்களின் அன்றைய கருத்து என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது .பதிவின் நீளத்தைக் கூட்ட வேறுவழி இன்றி இப்போதைய வடிவத்திற்கு கொண்டு வந்தேன் ,இதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ...மீண்டும் அவருக்கு என் நன்றி !
  3. விரலில் மையைத் தவிர 'இது 'வும் உண்டு வாக்காளனுக்கு !

    ''வாக்குச் 'சாவடி'ன்னு பெயர் வைத்தவன் தீர்க்கதரிசி !''
    ''ஏன்?''
    ''நம்ம வாக்கை வாங்கிட்டு ,இந்த அரசியல்வாதிங்க நம்மையே 'சாவடி'க்கிறாங்களே !''
  4. புருசனை நல்லாப் புரிஞ்சுகிட்டுமா இப்படி ?

    ''உன் வீட்டுக்காரரை  ரொம்ப 'டார்ச்சர் 'பண்ணாதேடி! ஆண்டியாப் போயிடப் போறார் !''
    ''அவரைப் பற்றி எனக்குத் தெரியாதா ?ஆண்டியாப் போறதுக்குப் பதிலா ,வேற 'ஆன்டி 'யை வேணா தேடித் போவார் !
  5. 'வாடா 'என்று உரிமையில் அழைப்பவள் உண்மையில் வாடா மலரா ?

  6. உன்னை மலர் என்று சொல்ல மனம் வரவில்லை ...
  7. வாடா மலர்கூட வாடி உதிர்வதால் !



  8. தாலி ,கணவனுக்கு தரும் 'லைசென்ஸ் ':)
    சல்லாப லீலைகள் தாலி கட்டியவளுடன்  என்றால்   ...
    மாலை  மரியாதையே , தனிதான்  !
    தாலி கட்டாமல் செய்யத் துணிந்தால் ..
    மானபங்க  வழக்குதான் ,களி தான் !





33 comments:

  1. 01. நம்ம பொம்பளைங்க மனசை படிச்ச டைரக்டரு.....
    02. அவன் திங்காமல் வீட்டுக்கு பார்சல் கொண்டு போக மாட்டானா ?
    03. சரியாச்சொன்ன, அந்த தீர்க்கதரிசி வாயில வாக்கரிசிதான் போடனும்.
    04. ஆண்டியை சரியாய் புரிஞ்சுக்கிட்ட ஆன்ட்டிதான்.
    05. வாடா மருதப்பானு சொல்லலாமோ....
    06. கதகளிதான் போங்க...

    ReplyDelete
    Replies
    1. 1.எதை எதை தொடர்வது என்ற விவஸ்தையே இல்லாத ...............:)
      2.வேட்டியை உருவி இல்லே செக் பண்ணி வெளியே அனுப்புவார் :)
      3.வாக்கரிசியும் சீரகசம்பா பிரியாணி அரிசியா இருந்தா தேவலே :)
      4.அந்த ஆண்டி ...ஆனாக்கா இந்த மடம்,ஆகாட்டி அந்த மடம் தேடுகிறவர் மேடத்துக்கும் புரிஞ்சுபோச்சோ :)
      5.மல்லிக்கு எதிர்ப்பதம் மருதப்பாவா :)
      6.எங்கே கேரளாவுக்கு :)

      Delete
  2. ஜன்னல் சாரி, வாக்குச் சாவடி, தாலி லைசென்ஸ் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜோக்குகள்.
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்கவும் வைக்குதா ,அவ்வ்வ்வ்வ்:)

      Delete
  3. சேலைத் துளை
    சர்க்கரை நோய்
    சாவடி
    ஆண்டி - ஆன்டி
    வாடாமலர்
    எல்லாம் ரசனைகளாக உள்ளன
    மகிழ்ச்சி சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மகிழ்ச்சிக்கு நன்றி :)

      Delete
  4. வணக்கம்
    ஜி
    சேலையில் யன்னல் வைப்பது இப்ப பேஷன்..... என்ன செய்வது காலம் செய்த கோலம்... சேலையில் யன்னல் இல்லாவிட்டால் அந்த படமேதோல்வி..... அதனால் யன்னல் வைக்கத்தான் வேண்டும் மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஜன்னலைச் சாத்தாமல் ஆதரித்ததிற்கு நன்றி :)

      Delete
  5. 1. என்ன ஒரு ஐடியா! ஹா...ஹா..ஹா..

    2. என்ன ஒரு பாதுகாப்பு! ஹா..ஹா..ஹா...

    3. என்ன ஒரு வார்த்தை ஜாலம்! ஹா...ஹா..ஹா...

    4. என்ன ஒரு கவித....

    5. என்ன ஒரு அறிவுரை! ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. 1.இப்பவே வெள்ளி விழா கியாரண்டீ :)
      2.ஐந்தடுக்கு பாதுகாப்பு தோற்றது :)
      3.தீர்க்கதரிசி ,வாய்க்கரிசி போலவா :)
      4.ஒரு வரி அல்ல ,இருவரிக் கவித:)
      5.மனதை அரித்தவுரையா:)

      Delete
  6. Replies
    1. உங்கள் ரசனையே தனி நண்பரே :)

      Delete
  7. இன்னுமொரு வேண்டுகோள்... ஏன் வரிகளுக்கு பின்னால் வண்ணம்...? (Background Colour) நேற்று வரை இல்லையே ஜி...?

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஜி படிப்பதற்க்கு கஷ்டமாக இருக்கிறது.

      Delete
    2. எனக்கும் அப்படித்தான்..!

      Delete
    3. இப்போ கலர் ஃபுல்லா இருக்கு ஸூப்பர்.

      Delete
    4. இன்னொரு வேண்டுகோள் இங்கே இருக்கு ,முதல் வேண்டுகோள் எங்கே இருக்கு ஜி :)

      Delete
  8. டைரக்டரு ..நல்லாவே சிந்திக்கிறாரு....!!!!

    ReplyDelete
    Replies
    1. தொப்புள்ளே ஆம்லேட் வெந்ததைப் பார்த்தவராச்சே :)

      Delete
  9. இந்த வடிவம் நல்லாயிருக்கு...
    தொடருங்கள்.
    ரசிக்க வைத்தது...

    ReplyDelete
    Replies
    1. வடிவழகியாய் தெரிகிறதா :)

      Delete
  10. ஒவ்வொரு தலைப்பும் சிரிக்க வைக்கிறது. எல்லாம் அருமை என்னும் டெம்ப்லேட் காமெண்ட் போடுகிறேன். இல்லாவிட்டால் பலரும் சொன்னதையே நானும் சொல்ல வேண்டும். பின் புல நிறம் வேண்டாமே.

    ReplyDelete
    Replies
    1. நானும் என் செல்லில் பார்த்தேன் ,எழுத்துக்கள் கூனிக் குறுகி இருப்பதைப் போல் இருந்தது ,மாற்றிவிட்டேன் ,இப்போ சரியாய் இருக்கா :)

      Delete
  11. சர்க்கரை நோய் இருந்தா இங்கே வேலை நிச்சயம் ! சர்க்கரை நோய், எனக்கு உண்டு! வேலை கிடைக்குமா!

    ReplyDelete
    Replies
    1. எத்தனை வருட சர்க்கரை ,சர்டிபிகேட் உடன் கொண்டு வரவும் :)

      Delete
  12. ஹஹஹஹஹ் பகவான் ஜி! வார்த்தைகள் செமையா விளையாடுது! சாவடி, ஆண்டி, வாடா......ஹஹஹஹ் மிகவும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. விளையாட்டை ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  13. "பதிவின் நீளத்தைக் கூட்ட வேறுவழி இன்றி இப்போதைய வடிவத்திற்கு கொண்டு வந்தேன்." என்பதில் நன்மை உண்டு.
    புதியவர்களுக்குப் பழசையும் படிக்க
    இரு வரியெனச் சோர்வோருக்குப் பல வரி படிக்க
    இதே வடிவத்தைத் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இது பாஸ்ட் புட் யுகம் ,மிக நீண்ட பதிவும் எல்லோருக்கும் பிடிக்காது தானே :)

      Delete
  14. உங்களுடைய ஆசையை எப்படி எல்லாம் வெளிப்படுத்துறீங்க.

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,நானும் இயக்குனராகும் தகுதி பெற்று விட்டேனா:)

      Delete
  15. டைரக்டர் சமயோசிதமான ஆளு போல! பிழைச்சுக்குவாரு! குட் ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இல்லாட்டி போட்டிகள் நிறைந்த உலகத்தில் நிலைத்து நிற்க முடியுமா :)

      Delete