11 March 2015

மனைவி மாவு வாங்கி வரச் சொல்லும் காரணம் :)

            ''உங்க மனைவி  தோசை மாவு பாக்கெட் தானே வாங்கி வரச் சொல்றாங்க ,ஏன் முடியவே முடியாதுன்னு சொல்றீங்க ?''
             ''வாங்கி வந்தா ,நீங்களா வந்து தோசை சுட்டுத் தருவீங்க ?''


கள்ளத் தொடர்புக்கு இந்த தண்டனை சரிதானே ?

      ''நம்ம ராஜா ,ராணிக்கு சிரச்சேதத் தண்டனைக் கொடுத்துட்டாரா ,
ஏன் ?''
       ''மந்திரி வேஷத்திலே ராஜா அந்தப்புரம் போனாராம் ...வந்திருக்கிறது 
ராஜான்னு தெரியாம 'வாங்க மந்திரியாரே ,வந்து ரொம்ப நாளாச்சே 'ன்னு ராணி  வரவேற்றாங்களாமே!''
துரை செல்வராஜூ11 March 2014 at 08:39
அப்போ.. மந்திரிக்கு!...
அந்தப் புரத்திலேயே சமாதிதான் !
டிபிஆர்.ஜோசப்11 March 2014 at 12:37
அப்போ இதெல்லாம் அந்த காலத்துலருந்தே நடந்துக்கிட்டிருக்குன்னு சொல்றீங்க!..
இதிலென்ன சந்தேகம் ,அரசனா இருந்தாலும் புருஷனா பெண்டாட்டிக்கு செய்ய வேண்டியதை செய்யவில்லை என்றால் இந்த கூத்துதானே நடக்கும் ?

 கஞ்சப் பிசினாறிக்கு கண்ணாடி எதுக்கு ?

''தூரத்தில் வர்ற பஸ் நம்பர் தெரியலைன்னா .கண்ணாடி வாங்கி மாட்டிக்க வேண்டியதுதானே ?''
''பஸ் பக்கத்திலே வராமலா போயிடும் ?நம்பர் தெரியாமலா
போயிடும் ?''

செல் இல்லையெனில் பைத்தியமாகக் கூடுமோ !

செல்போனும் காதுமாகவே இருப்பவரைப் பார்த்தால் ...
கர்ணனின் நினைவுதான் வருகிறது ...
பிறக்கும் போதே கர்ணனின் காதில் கவசக் குண்டலம் இருந்ததாம் !


28 comments:

  1. 01. வீட்டு விசயத்தை வெளியிலில சொல்லாதீங்க ஜி
    02. ஆக மொத்தம் மந்திரியை மந்திரிச்சு விட்டுப்புட்டாளா ?
    03. இவண் இன்னைக்கு பஸ் ஏறினது மா3தான்.....
    04. அப்படிப்பார்த்தால் ரோட்டிலே போறவன் அப்புட்டுப்பேரும் கர்ணன்தான் ஜி

    ReplyDelete
    Replies
    1. 1.நான் பட்ட கஷ்டம் யாரு,ம் படக்கூடாதேங்கிற நீங்களும் படக்கூடாதுன்னுதான் :)
      2.மன்னர் மந்திரத்தில் மயங்க வில்லைன்னா இப்படித்தான் :)
      3.இவன் மேலே பஸ் ஏறாமயிருந்தா சரிதான் :)
      4.நவீன கர்ணன்கள்:)

      Delete
  2. தோசை மாவுத் தண்டனை
    சிரச்சேதத் தண்டனை
    கண்ணாடி மாட்டிய தண்டனை
    எல்லாமே
    தண்டனையாப் போச்சே!

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தண்டனைகள் எல்லாம் (என் பதிவைச் சொல்லலே )அனுபவிக்கிறதைத் தவிர வேற வழியில்லையே :)

      Delete
  3. வணக்கம்
    எல்லாம் ஒரு ஒத்தாசைதான்..... மற்றவைகளை இரசித்தேன் த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஒத்தாசையாத் தெரியலே ,ஒப்பாத ஆசையா இருக்கே :)

      Delete
  4. 1. சட்னியாவது அரைப்பாங்களா?!! :)))))))))

    2. ஐயே..... :)))))))))))))

    3. பஸ் பக்கத்தில் வராமலா போயிடும்?... ஆமாமாம்... ஆனா போயிடுமே ஏறத்துக்குள்ள! :)))))))))))))))

    4. :))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. 1.அது செய்ய முடிஞ்சா தோசையும் சுட்டுட மாட்டாங்களா :)
      2.இதுவும் அந்தப்புர ரகசியம்தானே :)
      3.பக்கத்தில் வந்தால்தான் தெளிவாய் தெரியுமே அவருக்கு :)
      4.ஒரு சிலர் ,காதில் வைத்த செல்லில் மணிக்கணக்கில் பேசுவதைக் கண்டால் எரிச்சலா வருதா ,இல்லையா:)

      Delete
  5. கண்ணாடி நகைச்சுவையை அதிகம் ரசித்தேன். ஏனென்றால் இறக்கப் போகவுள்ளவருக்காக நாம் பரிதாபப்படவேண்டியிருக்குமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. இறங்குபவர் ஆணென்றால் பரிதாபப்பட வேண்டியிருக்காதே :)

      Delete
  6. First : எல்லா வேலையுமா...? ஹா... ஹா...

    Last : இப்படியே போனால் கேட்"காது"...

    ReplyDelete
    Replies
    1. இதுதான் first and last வார்னிங் போலிருக்கே :)

      Delete
  7. சரியான கேள்விதான்---நீங்களா வந்து தோசை சுட்டுத் தருவீங்க ?'

    ReplyDelete
    Replies
    1. சுட்டுத் தந்தா வேணாம்னா சொல்லப் போறீங்க :)

      Delete
  8. பகவானே !

    அந்தப்புற சமாதி என்றதும் மந்திரி நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பாரோ..?!!!

    அப்பறம்,

    ஹ ஹ ஹா

    என் பதிவிற்கான உங்களின் பின்னூட்டம்.......:)))

    வாழ்க்கையில் முன்னெப்போதும் இந்த அளவு சிரித்ததில்லை.

    பதிவின் கடைசியில் நீங்கள் வாங்கிய பல்பு எரியாமல் போய்விட்டதற்காக வருந்தி பதிவின் இறுதியில் கொஞ்சம் ஒட்ட வைத்துவிட்டேன்..

    இனிமேல் பல்பு விற்பதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன். :))))

    நன்றி.

    த ம கூடுதல் 1

    ReplyDelete
    Replies
    1. சமாதி எந்தப் புறமா இருந்தாலென்ன ,இதிலுமா ஒரு கிளுகிளுப்பு :)

      நீங்கள் ஓட்ட வைத்த பின் பல்பு நன்றாக எரிகிறது ,நீங்கள் பல்பு வியாபாரத்தைத் தாராளமாய் தொடரலாம் :)

      Delete
  9. மாவாட்ட சொல்லாம,மாவை வாங்கி வரச் சொல்றாங்களேன்னு சந்தோஷப்பட வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. என் நிலைமையே பரவாயில்லே போலிருக்கே ,ஆழ்ந்த அனுதாபங்கள் சொக்கன் ஜி :)

      Delete
  10. இன்று அனைத்துமே சரவெடிச்சிரிப்பை வரவவைத்துவிட்டது அண்ணா .

    தம+

    ReplyDelete
    Replies
    1. சரவெடியா இருக்கா , நீங்க இன்னும் மாவாட்ட ஆரம்பிக்கலே போலிருக்கே :)

      Delete
  11. அனைத்துமே சிரிப்பான சிரிப்புகள்!

    ReplyDelete
    Replies
    1. நிஜாமே சொன்னா ,நிஜமாத்தான் இருக்கும் என்று எண்ணி மகிழ்கிறேன் :)

      Delete
  12. இதுக்குத்தான் ஒரு பழமொழி சொல்லுவாங்க.. பகல்ல அக்கம் பக்கம் பாத்து பேசனும். ராத்தரியில அதுவும் பேசக்கூடாதுன்னு பாவம் ராணிக்கு தெரியாம போச்சு...

    ReplyDelete
    Replies
    1. ராணிக்கு மட்டும்தானா :)

      Delete
  13. ஹஹ்ஹஹஹ் ஜி அதுதான் ஊருக்கே தெரிந்த ரகசியம் தானே.....மாவாட்டறதையும் சேர்த்துக்கங்க ஜி.....ஹஹஹ்

    சங்க காலத்துல இருந்து இந்த கம்ப்யூட்டர் காலம் வரை அதே கதைதானே ஜி.....காதலும் காமமும் மனிதனிடமிருந்து தொலையப் போவதில்லையே!

    ReplyDelete
    Replies
    1. சரி ,உங்க வீட்டிலே டில்டிங் கிரைண்டரா ,அல்லது ...:)

      இரண்டுமே தொலைந்து விட்டால் மனித' நாய் ' பிறந்துதான் என்ன லாபம் :)

      Delete
  14. ஹாஹாஹா! ஜோக்ஸ் அனைத்தும் கலகல! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கு என் நன்றி :)

      Delete