-----------------------------------------------------------------------------------------
மின்சார மந்திரிக்கு பிடிச்ச பூச்சி :)
''நம்ம மின்சார மந்திரி அடிக்கடி தன்னோட பேச்சிலே மின்மினிப் பூச்சியை உதாரணம் காட்டுறாரே ,ஏன் ?''
''ஒரு பூச்சிக் கூட தன் தேவைக்கு வெளிச்சத்தை தானே உண்டாக்கிக் கொள்ளும்போது ,மனுஷனாலே ஏன் முடியாதுன்னு மறைமுகமா
கேட்கிறாரோ!''
கேட்கிறாரோ!''
துணை (எழுத்து ) எவ்வளவு முக்கியம்னு இப்ப புரியுதா :)
''என்ன மெக்கானிக் ,பஸ்ஸை எடுக்க வர்ற என்கிட்டே வேப்பிலைக் கொத்தை ஏன் கொடுக்கிறீங்க ?''
''பிரேக் பிடித்தால் வண்டி முன்னால் 'பேய் 'நிற்கிறது என்று புகார் நோட்டிலே நீங்கதானே எழுதி இருந்தீங்க ,அதான் !''
''பிரேக் பிடித்தால் வண்டி முன்னால் 'பேய் 'நிற்கிறது என்று புகார் நோட்டிலே நீங்கதானே எழுதி இருந்தீங்க ,அதான் !''
சைதை அஜீஸ்22 March 2014 at 11:30
கால் இல்லையென்றால்தானே பேய் '?..
துரை செல்வராஜூ22 March 2014 at 11:37
எப்படிங்க!?
|
|
Tweet |
01. பவர் ஃபுல்லா இருப்பாரோ......
ReplyDelete02. துணையெழுத்து தலையெழுத்தையே மாற்றிடுச்சே....
03. கண்ணதாசன் கவிதையோ....
04. எமனும் லஞ்சம் வாங்குவாரோ....
1.யூனிட்டுக்கு எவ்வளவு என்று பணம் கொட்டுகிறது ,பவர் ஃ புல்லா தானே இருப்பார் :)
Delete2.வேப்பிலை அடித்து பேயை ஓட்டிட்டாரா:)
3.கவியரசருக்கும் மேலே :)
4.சமூக விரோதிகள் சிலர் ,நீண்ட ஆயுளுடன் வாழ்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது :)
புளிய மரத்தின் கீழே
ReplyDeleteபேய் ஒண்ணு ஆடுது என்றாங்க
நீங்க
வேப்பிலைக் கொத்தைக் கொடுத்து
பேய் ஒண்ணு நிற்குது என்கிறீங்க
டிரைவருக்கு வண்டியை ஒட்டுறதா ,பேயை ஒட்டுறதா என்று ஒன்றும் புரியலே :)
Deleteyamahaa... haa... haa...
ReplyDeleteஎமகா இல்லே ,யமஹா :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி :)
Deleteஹஹஹஹ எல்லாமே......பனுமாதி என் பெண்டாட்டி ,காலை எங்கே வேணும்னா போடுவேன்னு சொன்ன உங்க முக்கா தோஸ்து அவங்க மேல கால போட்டாருனு வைங்க உங்க தோஸ்துக்கு சமாதிதான், பனுமாதிகிட்டருந்து...ஹஹஹ்
ReplyDeleteயமஹா...ஹஹ்ஹஹ்..தான்
அப்படின்னா பனுமாதி பன்னுமாதிரி லேசா இருக்க மாட்டாங்களா :)
Deleteஎப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.? இருந்தாலும் இந்தக் கால் போன கதைகள் என்றைக்குமே நகைக்க வைக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகால் போன போக்கில்தான் போகக்கூடாது ,கால் போன கதைகளை தாராளமா படிக்கலாம் :)
Deleteகாலை ஒடித்தும் சிரிப்பு வருகிறதே..!
ReplyDeleteஓஒ அது என் கால் இல்லையே :))
ஹ ஹ ஹா
அவனவனுக்கு கால் ஓடிஞ்சாதான் வலி தெரியும் ,அப்படித்தானே :)
Deleteதுணை (எழுத்து ) எவ்வளவு முக்கியம்னு இப்ப புரியுதா :) நன்று!
ReplyDeleteஎழுத்து மட்டுமா வாழ்க்கையில் ,துணையும் முக்கியம்தானே :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
அரசியலில் இலை யெல்லாம் சாதாரணம்... இப்படி வெளிச்சம் போட்டு காட்டினால்தான் தான் செய்த சேவை வெளியில் தெரியும்.. மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தனக்கு வரும் கமிஷன் குறையும் என்று தெரிந்தாலும் ,மின்சாரத்தில் தன்னிறைவு அடையணும்னு நினைக்கிற மந்திரி நல்ல மனிதர்தானே :)
Deleteமிக மிக நன்றி :)
ReplyDeleteமந்திரி பேய் டாஸ்மாக் யமாகா எல்லாமே அருமை...
ReplyDeleteதம பாஸ்வேர்ட் பிராப்ளம்..... மன்னிக்கவும்.
உங்கள் தளத்தை உயிர் பெற வைப்பதற்குள் உயிர் போயிட்டது போலிருக்கே :)
Deleteஎனக்கு புரிஞ்சது, துணையெழுத்து எவ்வளவு முக்கியம்னு..!!!
ReplyDeleteத ம 9
உங்களுக்கும் புரிஞ்சு போச்சா ,சரிதான் :)
Deleteதுணை எழுத்து முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன். நன்றியுடன் தொடருகிறேன்.
ReplyDeleteதுணை எவ்வளவு முக்கியம்னும் புரிந்து இருக்கணுமே :)
Deleteஅப்படி பார்த்தா, பாம்பை பாம்பு என்று சொல்வதில் இலக்கணப்பிழை உள்ளதே பகவான்ஜீ!
ReplyDelete(பாம்புக்கு தான் கால் கிடையாதே, அப்போ பாம்பை பம்பு என்று தானே சொல்லவேண்டும்?)
இதென்ன வாம்பா ...தப்பு தப்பு ... வம்பா போச்சு :)
Deleteபாம்பை தாராளமா பம்புன்னு சொல்லலாம் ,பம்பை என்னான்னு சொல்றது :)