24 March 2015

தூக்கம் கெட்டது உன்னால்தானடி !

-------------------------------------------------------------------

நேர்மறைச் சிந்தனை என்பது இதுதானோ :)

                   ''டி வி யில் வர்ற தொடர்களை ராத்திரி ஒருமணி வரைப்  பார்ப்பதால் ,தூக்கம் கெடுதுன்னு மனைவியை திட்டிக்கிட்டே இருந்தீங்களே ..இப்போ எப்படி ?''
                      ''நானும் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தேன் ,பத்தே நிமிடத்தில்  தூக்கம் நல்லாவே வருது !''

இந்த தைலம் அவருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு !

                 ''அதோ ,அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா  இருக்கே ,எப்படி ஆச்சு ?''        
           ''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம்  !''
கோமதி அரசு24 March 2014 at 09:24
பக்கவிளைவு இல்லாத மருந்து என்று சொல்லவில்லையோ!




  1. அதையும் போய் கேட்டாரே ,கோடியில் ஒருத்தருக்கு இப்படி 'பக்கா 'விளைவு ஆயிடுது ,ஒரு ஆறுமாசம் எங்க லேப்புக்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்தா மாற்று மருந்து கண்டு பிடிச்சிடலாம் இல்லேன்னா கரடியாவே மாத்திடலாம் ,வர்றீங்களான்னு கேட்டதா ,கடைசியா வந்த தகவல் !.
  2. துரை செல்வராஜூ24 March 2014 at 15:23
    முழுக் கரடியா?.... என்னா... ஒரு வில்லத்தனம்!?....




    1. தலயிலே முடியை நடுற விஞ்ஞான காலமாச்சே இது !
    2. துரை செல்வராஜூ24 March 2014 at 15:27
      நிஜம் தான்..
      நாத்து முடிய நடுறதுக்கு கிராமங்கள்..ல ஆள் கிடைக்கல..
      நடுவுல - நவீன விஞ்ஞானம் புகுந்து தலை முடிய நட்டு வெக்கிது!
    3. இதற்குஆகும் செலவுக்கு அஞ்சி பலரும் இன்றும் வழுக்கையராகவே வலம் வருவது வேதனைதான் !

    4. இதுவும் ஒரு நல்ல பொறுத்த 'மே ':)

      ''அதெப்படி, நான்  பொறந்த மாசம் 'மே 'ன்னு சரியா கண்டுபிடிச்சே ?''
      ''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன்  'ஆட்டு  மூளை 'யை வச்சுத்தான் !''

    5. தூக்கம் கெட்டது உன்னால்தானடி !



      உன்னைக் கண்டதுமே 
      எனக்குப் புரிந்த உண்மையை ...
      ஆராய்ச்சியாளர்கள் இப்போதுதான் கண்டுபிடித்து இருக்கிறார்கள் ...
      சாக்லேட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் 
      தூக்கத்தைக் கெடுக்குமாம் !



18 comments:

  1. நல்ல பதிவு ... பக்கவிளைவு பக்கா விளைவா மாறிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. சின்ன தலைவலியை போக்க மருந்தைச் சாப்பிட்டா ,பக்க விளைவுகள் பெரிய தலைவலியா இருக்கே :)

      Delete
  2. தூக்கம் வரும் - கெட்ட கெட்ட கனவுகளோடு...!

    ReplyDelete
    Replies
    1. கனவுதானே கெட்டது என்ன ,நல்லது என்ன :)

      Delete
  3. ஒரே தொடர் ஆணுக்கு ஒரு மாதிரியும், பெண்ணுக்கு ஒரு மாதிரியும் பக்க விளைவை ஏற்படுத்துகிறது!

    ஒரே மருந்து எங்கு எதை வளர்க்க வேண்டுமோ அங்கு அதை வளர்க்காமல் வேறு இடத்தில் வளர்க்கிறது!

    பகவான்ஜியின் விஞ்ஞான ஜோக் வியக்க வைக்கிறது.
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. நான் விஞ்ஞான ஜோக் மட்டும்தான் போட்டேன் ,நீங்க ,ஓசோன் பக்க விளைவுகளைப் பற்றி எழுதியிருந்ததை படித்து ரசித்தேன் :)

      Delete
  4. சாக்லேட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் சாப்பிடாதவர்களும் தூக்கம் வராமல் அல்லாடுகிறர்களே.....அதற்கு காரணம் என்னங்க....நண்பரே.........

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கலையேங்கிற ஏக்கம்தான் :)

      Delete
  5. தூக்கம்கெட்டது என்று சொல்லும் போது அவளைப் புகழ்கிறீர்களா இல்லை குறை சொல்லுகிறீர்களா.?அப்போ மேயில் பிறந்தவர்களுக்கு ஆட்டு மூளையா வழுக்கைத் தலை உள்ள பெண்கள்(இருக்கிறார்களா) அந்தத் தைலம் உபயோகித்தால் என்னாகும்.?

    ReplyDelete
    Replies
    1. குறை என்று நினைத்தால் மனதாலும் நீங்கள் கிழடாகி விட்டீர்கள் என்று அர்த்தம் :)
      நானும் mayயில் பிறந்தவன் என்ற அனுபவத்தில் எழுதியுள்ளேன் :)
      வழுக்கை மணிகளைப் பார்த்துள்ளேன் ,பெண்மணிகளை நானும் பார்த்ததில்லை ,ஆராய்ச்சி எப்படி செய்றது :)

      Delete
  6. 01. டி.வி.சீரியல் எடுக்கிறவங்களாலே டாக்டர்கள் பொழப்புல மண்ணு விழுந்திடாம..
    02. டூ இன் ஒன்
    03. நல்லவேளை நான் மே மாதம் பிறக்கவில்லை.
    04. ஐஸ்க்ரீம் கம்பெனியை மூட வச்சுருவீங்களோ ?

    ReplyDelete
    Replies
    1. 1.தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள்தான் டாக்டர்களுக்கு படி அளப்பவர்களா :)
      அது சரி ,என் பதிவும் உங்களை நல்லா தூங்க வைத்து விட்டதா ,லேட்டா வந்து இருக்கீங்களே:)
      2.தேவை இல்லாத டூ இன் ஒன்:)
      3.உங்களை யார் மே மாதம் என்று சொன்னது ,பிறக்கவில்லை நீங்கள் சொல்ல :)
      4.இள வயது இளிச்சவாயர்கள் இருக்கும் வரையில் ஐஸ் கம்பெனிகளுக்கு ஆபத்தில்லை :)

      Delete
  7. டீவி சிரியல்கள் பார்க்கும் போது தூக்கம் வருவது ஜோக் இல்லை உண்மைதான்! எங்க வீட்ல இதுமாதிரி நடப்பதுண்டு! மற்ற எல்லா ஜோக்குமே கலகல! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அனுபவம் பேசுதே :)

      Delete
  8. டீ வி சீரியலா....ஆஅ! ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்!

    ஹஹஹஹாஹஹ்....ஹவ்....டீவி சீரியல்ன உடனேயே கண்ணைக் கட்டுதே...அதாங்க எழுத முடில...

    இப்படி நல்ல வந்த தூக்கத்தைக் கெடுத்துட்டீங்களே ஜி!

    ஹஹஹ் ரசித்தோம் ஜி....

    ReplyDelete
    Replies
    1. நமக்கு இப்படி ,ஆர்வமாய் சீரியல் பார்ப்போரைப் பார்த்தால்,டி வி யிலேயே நுழைந்து விடுவார்கள் போலிருக்கே :)

      தூக்கம் போக ,என் பதிவு என்ன ஐஸ் கிரீமா ,சாக்லேட்டா :)

      Delete
  9. வணக்கம்
    தூக்கத்துக்கு நல்ல மருத்து கண்டு பிடிப்பு போல...... மற்றவைகளை இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இதைதான் விரும்பி போனால் விலகிப் போகும்னு சொல்றாங்களோ:)

      Delete