4 March 2015

பெருமையா சொல்லிக்க புருஷன் சாப்ட்வேர் என்ஜீனியரா என்ன :)

  பையன் கேட்டதில் தப்பிருக்கா :)

                ''மாடுகளுக்கு  ஆடத் தெரியுமா ,பாடத் தெரியுமான்னு ஏண்டா கேட்கிறே ?''
                ''ஆடறமாட்டை ஆடிக் கறக்கணும் ,பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்னு  சொல்றாங்களே !''

பெருமையா சொல்லிக்க புருஷன் சாப்ட்வேர் என்ஜீனியரா என்ன :) 

              ''புருஷன் பஸ்லே வேலைப் பார்க்கிறதா அவ பீற்றிக்கிறாளே ,
யூனிபார்ம் டிரஸ்ஸை அவர் போட்டுக்கிற மாதிரி தெரியலையே ?''
                    ''பிக்பாக்கெட் வேலைக்கு யூனிபார்ம் எதுக்கு ?''
முட்டா நைனா4 March 2014 at 07:51
சாப்ட்டுவேர் இஞ்சினியர் மாறி இவரு அண்டர்வேர் இஞ்சினியர்பா... :-)
Bagawanjee KA4 March 2014 at 07:52
 சரியாச் சொன்னீங்க ,முட்டா நைனா !
அப்போ மத்ததை மாமூல்பார்ம்ன்னு வெச்சிரலாமா.

கோபாலன்



  1. யூனிபார்ம் போட்டுகிட்டு மாமூல் வாங்கிறவங்களை கேட்டுகிட்டு முடிவு எடுக்கலாம் கோபாலன் ஜி !
  2. மனைவியின் சமையலும் வெறுத்து போச்சா ?

               ''என்னங்க ,ஊற வச்சாலே சோறாகும் அரிசியை அசாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சு இருக்காங்களாமே ?''

                ''அப்படியே காய்கறியையும் கண்டு பிடிக்கச் சொல்லு !கண் காணாத இடத்துக்குப் போய் நானே சமைச்சு  சாப்பிட்டுக்கிறேன் !''
  3. 'டயாபெடிக் 'காரனின் மனநிலை :)
  4. இரத்த சர்க்கரை அளவு கண்ட்ரோலில் 
    இருப்பது தெரிந்ததும் ...
    இனிப்பாக ஒரு கப் காபி சாப்பிடத் தோன்றும் !

25 comments:

  1. 01.அப்படினா ? ஓடுற மாட்டை
    02. இவண் பஸ்ஸுல மட்டும்தான் பிட்பாக்கெட் அடிப்பானோ ? நல்ல பாலிஸி
    03. ஊறவச்சா சோறாகுமா ? பெரிய கண்டு பிடிப்புதான்
    04. காப்பியே குடிக்காதவனுக்கு என்ன தோனும் ?

    ReplyDelete
    Replies
    1. 1.நல்ல வேளை,படுத்திருக்கிற மாட்டை ..என்று கேட்காம போனீங்க :)
      2.பாலிசி பெயர் ,ஈசி பஸ் சோர் என்று கேள்விபட்டேன் :)
      3.புதிய சோறாவது அதிசயம்தான்,அதை பழைய சோறாக்குவது எப்படி :)
      4.கழனித் தண்ணி இஷ்டம்னா அதைக் குடிக்கத் தோணும்:)

      Delete
  2. 'டயாபெடிக் 'காரனின் மனநிலை :)

    இரத்த சர்க்கரை அளவு கண்ட்ரோலில்
    இருப்பது தெரிந்ததும் ...
    இனிப்பாக ஒரு கப் காபி சாப்பிடத் தோன்றும் !
    எனது மனநிலையை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டீர்களே!
    எப்படி அறிந்தீர் அறியலோமோ?

    த ம 1

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இது உங்கள் அனுபவம் மட்டுமல்ல ...இரத்தம் மாதிரி எடுத்ததுமே சாப்பிடத் தோன்றுதே எனக்கு :)

      Delete
  3. 1.சரியான கேள்வி
    2. ஹா..ஹா..ஹா...
    3. அடப்பாவமே
    4. அடக்கு... மனதை அடக்கு!

    ReplyDelete
    Replies
    1. 1.அப்பன்காரன் அரண்டு போயிருப்பாரோ :)
      2.ஜாக்கிரதை 'பஸ் சோர்'களிடம் :)
      3.அடுத்து , வாயிலே போட்டதும் சோறாகிற அரிசியைக் கண்டு பிடிப்பாங்களோ :)
      4.அடக்கு அடக்குன்னு சொல்றீங்க ,எப்படி அடக்குறதுன்னு சொல்லுங்க ஜி :)

      Delete
  4. ஆடுறமாட்டை, பாடுற மாட்டை
    கட்டியாளத் தெரிந்தவரே
    புத்திசாலி

    ReplyDelete
    Replies
    1. அந்த வித்தை தெரிந்தவர் நம்ம ஊர்லே கிராமராஜன் மட்டும்தான் :)

      Delete
  5. 1. எப்படியெல்லாம் கேவி கேக்க தெரியுது...
    2. பிக்பாக்கெட் அடிப்பதற்கு இப்போது யூனிபார்ம் வந்து விட்டதாம்.
    3. சீக்கிரம் கண்டுப்பிடிக்க சொல்லுங்கள்...
    4. உண்மையான மனநிலையை படம் பிடித்துக் காட்டிட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. 1.கேட்கத்தானே செய்வான் ,எந்த மாடும் மானாட ,மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதிரி தெரியலியே :)
      2.வந்தால் ,நல்லாவே வருவாங்க :)
      3.நீங்களும் என்னை மாதிரிதான் போலிருக்கு :)
      4. வெற்றியை கொண்டாட வேண்டாமா :)

      Delete
  6. வெவரமான பையன் ஜி...

    எனக்கு அந்த மனநிலை இல்லை...!

    ReplyDelete
    Replies
    1. மாடும் நல்ல பாடும்னா சூப்பர் சிங்கரில் ஏன் வரவில்லைன்னு வேற கேட்கிறானே :)

      காபியே சாப்பிடலைன்னா எப்படி வரும் :)

      Delete
  7. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நன்றிக்கும்,............க்கும் நன்றி :)

      Delete
  8. பையன் கேட்டதில் தப்பே இல்லை..சரியான கேள்விதான்.

    ReplyDelete
    Replies
    1. அவங்கப்பனுக்கு விரோதி வேறெங்கேயும் இல்லை போலிருக்கே :)

      Delete
  9. சபாஷ் சரியான கேள்வி......
    தம+1

    ReplyDelete
    Replies
    1. அந்த கால வீரப்பா டயலாக் மாதிரி இருக்கே :)

      Delete
  10. வார்த்தை விளையாட்டு என்பது, உங்கள் பதிவுகளில் நகைச்சுவையாக புகுந்து விளையாடுகிறது.
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி இப்படி விளையாடினாலும் போரடிக்கும் ஆபத்து உள்ளதை அறிவேன் :)

      Delete
  11. நன்று! வேற என்ன சொல்ல!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் வேறென்ன வேண்டும் ,இது போதுமே :)

      Delete
  12. ஹஹஹஹ்ஹ அதானே!!! பையனின் கேள்வி அருமையான கேள்வி!

    ஹஹஹஹஹ் மற்றவையும்....கண்டுபிடிச்சா சூப்ப்ரதான்...

    இனிப்பா அதெல்லாம் பழகிரும் ஜி!

    ReplyDelete