18 March 2015

microsoft ல் பணி புரிபவர்கள் விரும்பும் பிரியாணி :)

-----------------------------------------------------------------------------------------

 பாரதிநேசன் இப்படி மோசம் செய்யலாமா :)    
               ''என்னங்க ,நம்ம வீ ட்டிலே குடியிருக்கிறவர்...  பாரதியார் கவிதைகளை ரொம்பவும் விரும்புவராச்சே ,அவரைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க ?'' 
                   ''வாடகையைக் கேட்டால் 'நாம் இருக்கும் வீடு நமதென்று அறிந்தோம் 'என்று சொல்லுறாரே !''
 microsoft ல் பணி புரிபவர்கள் விரும்பும் பிரியாணி :)

              ''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,

இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
               ''My crow soft பிரியாணி கடைதான் !''

காமக்கிழத்தன்18 March 2014 at 08:01
இனி பிரியாணி சாப்பிடப் போனா கடைப் பெயரையும் பார்க்கணுமோ?.




  1. இப்படி 'சிம்பாலிக் 'காய் எதுவும் சொல்லி இருக்காங்களான்னு அவசியம் தெரிஞ்சிக்கணும் !
  2. அஞ்சு லட்டுக்கு ஆசைப்படும் மாமனார் !

              ''வரப் போற மருமகளுக்கு கூந்தல் நீளம்,திருப்பதிக்குப் போனா அஞ்சு லட்டு தேறும் அளவிற்கு இருக்கணுமா,ஏன் ?''
                ''நீளமான முடிக் காணிக்கை செலுத்தினா அஞ்சு லட்டு இலவசமா தர்றாங்களாமே !

  3. கூல் ஆகணும்னா கூழ் குடிங்க !



    கூழ் என்ன கோந்தா ?
    மீசையில் ஒட்டிக்கொண்டால் வராது என்பதற்கு ...
    ஒட்டிக்கும்  என்று பயந்து கூழைக் குடிக்காமல் இருக்கமுடியுமா ?
    கூழுக்கும் ஆசைப்படலாம் ...பசித்தால் !
    மீசைக்கும் ஆசைப்படலாம் ...ஆண் என்றால் !

24 comments:

  1. 01. இனி குடி வைக்கும்போதே பய டேட்டா கேட்கனும் போலயே...
    02. உண்மையைத்தான் எழுதியிருக்கான்.
    03. இந்த லட்டு வாங்க போய்வர்ற செலவு எவ்வளவு ?
    04. அடடே ஸூப்பர் ஜி அதானே ஒட்டினால் கழிவிட்டுப்போக...

    ReplyDelete
    Replies
    1. 1.பயடேட்டாவில் என்ன தெரியப் போகிறது :)
      2.எங்கே போர்டிலா :)
      3.நீளமா முடியில்லைன்னா அஞ்சு லட்டும் கிடைக்காதே :)
      4.அடடா ,எழுதும் போது உங்க மீசை நினைவுக்கே வரலையே :)

      Delete
  2. அடாடா, வாடகை கொடுக்காமல் இருப்பதற்கு இப்படி ஒரு வழி இருக்கா!!!
    இதை படிச்சுட்டு நிறைய பேர் வாடகை கொடுக்காமல் இருக்க போறாங்க.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து ,வீட்டை விற்று வாடகை தருகிறேன் என்றும் அவர் சொல்லக்கூடும் :)

      Delete
  3. ஹா ஹா . அனைத்தும் அருமை அண்ணா .
    தம

    ReplyDelete
  4. ஜி... பாரதிநேசனுக்கா வீட்டை வாடகைக்கு விட்டீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. அவர் நேசன் அல்ல ,பாரதிப் 'பித்தன் ' என்று இப்போதான் புரிகிறது :)

      Delete
  5. வணக்கம்
    ஜி
    எல்லாவற்றையும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி...த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மீசைக்கும் ஆசைப்படுவதில் தவறில்லைதானே ஜி :)

      Delete
  6. ''வாடகையைக் கேட்டால்
    'நாம் இருக்கும் வீடு நமதென்று அறிந்தோம்'
    என்று சொல்லுறாரே!''
    அப்படிப் போட்டு
    இப்படி வீட்டுக்காரரை
    வாட்டலாமோ?

    ReplyDelete
    Replies
    1. அந்த ஓரமா கிடக்கிற கட்டில்லே படுத்துக்குங்கன்னு சொல்லாம போனாரே :)

      Delete
  7. வாடகை வீடு! பிடித்தது

    ReplyDelete
    Replies
    1. வீடு பிடிச்சது ,அவர் பேச்சுதான் பிடிக்கலே :)

      Delete
  8. வாடகை வீடு! பிடித்தது..!1

    ReplyDelete
    Replies
    1. இப்படி காபி பேஸ்ட் பண்றதுதான் ,Technology Developers வேலையா :)

      Delete
  9. பிரியானி என்றால் பினாயில் கூட குடிப்போம் அல்லவா? அருமை.

    ReplyDelete
    Replies
    1. பினாயில் குடிச்சாதான் பிரியாணின்னு எந்த மகராஜன் சொன்னார் :)

      Delete
  10. ஒரு சினிமாவில் விவேக் ஏதோ ஒரு கடையில்காக்கா பிரியாணி சாப்பிட்டு காக்கா போல் கரைவது நினைவுக்கு வந்ததுபறவைகளின் பிரியாண்யில் அவற்றை அடையாளம் தெரியுமா? வாடகை கொடுத்தால் அவர் வீடுதானே. பாரதியை நேசிப்பவர் இப்படி பாடலாமா.?

    ReplyDelete
    Replies
    1. பாரதி பெயரைச் சொல்லி நாட்டிலே பலரும் இப்படித்தான் ஏமாத்துறாங்க ,அவர் வாடகையைக் கொடுத்துட்டு இப்படி சொன்னாலும் பரவாயில்லே :)

      Delete
  11. 'நாம் இருக்கும் வீடு நமதென்று அறிந்தோம் 'என்று சொல்லி வாடகையும் கொடுக்காமா ..வீட்டையும் காலி பண்ணாமா இருந்த ஒருத்தர...... நம்ம நண்பன் போலீசு பின்னி பெடல் எடுத்திருந்த தகவல் பாரதிக்கு தெரியுமா...தலைவரே...

    ReplyDelete
    Replies
    1. சிவில் கேசில் நம்ம நண்பன் தலையிட்டு இருக்கார்னா அது சட்ட மீறல் என்பதும் பாரதிக்கு தெரியுமே :)

      Delete
  12. Replies
    1. அன்புடன் நன்றி :)

      Delete