---------------------------------------------------------------------------
ஆறிலும் சாவில்லை நூறிலும் சாவில்லை :)
''இந்த மருத்துவ மனையில் ரூம் நம்பர் ஆறும் ,நூறும் இல்லையே ,ஏன் ?''
இதுக்கு டாக்டர்தானே காசு தரணும்:)
''இந்த மாத்திரை சாப்பிட்டு ரெண்டு நாள்லே காய்ச்சல் போயிடும்னா ,
எதுக்கு டாக்டர் மறுபடியும் வரச் சொல்றீங்க ?''
''அடுத்தவங்களுக்கு கொடுக்கலாமா வேண்டாமான்னு நான்
''அடுத்தவங்களுக்கு கொடுக்கலாமா வேண்டாமான்னு நான்
தெரிஞ்சுக்கத்தான் !''
சுனாமி ஸ்ரீன்னு மனைவியை அழைப்பாரோ ?
''சுனாமி வந்த அன்னைக்கிதான் எனக்கு
கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன் !''
''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப் பாதிப்பில்
இருந்து உன்னாலே இன்னும் மீள முடியலையா .ஏன் ?''
''சுனாமி வந்த அன்னைக்கிதான் எனக்கு
கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன் !''
தெய்வத்தை தொலைத்த கோவில்கள் !
அரசு அலுவலகங்களில் ...
செய்யும் தொழிலே தெய்வம்னு எழுதலாம் ...
அங்குதான் இருக்கின்றன ...
அட்வான்ஸ் காணிக்கையில்
அருள் பாலிக்கும் தெய்வங்களும் ...
- 1. ஆராய்ச்சியும் நம்மிடமே.. ஆதாயமும் நம்மிடமே!.. ரெண்டு கால் எலி தானே நாம்!..
2. சுனாமிக்கு பினாமியோ!?..
3. பேய்கள் இருக்கும் இடம் கோயிலாகாது. நிறையாத உண்டியல்கள் - குறையாத பாவங்கள்!.. - Bagawanjee KASat May 10, 09:21:00 a.m
- 1.ஆனால் ,அவர்தானே ஊரிலே கைராசி டாக்டர் ?
- 2.அவருக்கு என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் பாதிப்புக்கு ஈடாகுமா ?
- 3.பேய்களை விரட்ட அரசு முழுமுயற்சி எடுப்பதாக தெரிய வில்லையே !
-
|
|
Tweet |
6, 100 செம:))
ReplyDeleteஆறிலும் சாவு ,நூறிலும் சாவு ,கிளினிக்கை காப்பது கடமையடான்னு நினைச்சு ,டாக்டர் இப்படி நம்பர் கொடுத்து விட்டாரோ :)
Deleteஅனைத்தும் அருமை ஜி...
ReplyDeleteஇன்று எனக்கும் எல்லாமே அருமையாத் தான் இருக்கு ஜி ,ஆனால்,நேற்று,நான் மறுமொழி கூற reply பட்டன் வேலைச் செய்யவில்லை ,சென்ற வாரத்திலும் ,ஒரு முறை இப்படியானது ,ஏனென்று தெரியலே :)
Deleteஆறிலே செத்தா அறியாத வயசு ,நூறிலே செத்தா அனுபவிச்ச வயசுன்னு வந்த சினிமா டயலாக் நினைவுக்கு வந்திருக்குமே :)
ReplyDeleteகவிதையைக் கழட்டி வாட்சப்பில் போட்டிருக்கிறேன்..
ReplyDeleteதம +
வாட்சப்பில் அரங்கேறச் செய்ததற்கு நன்றி :)
Deleteஆறும் நூறும் ரூம் இல்லையா...? இவனுக்குத் தண்ணியில கண்டமுன்னு ஜாதகத்தில எழுதியிருக்கு... அதையாவது உண்மையாக்குவோம்... நா... ஆத்துக்குப் போறேன்... ஆத்துக்குப் போறேன்...!
ReplyDeleteசரிங்க டாக்டர்... நா உயிரோட இருந்தா அவசியம் வர்றேன்...!
சுனாமிதானே இந்த அனாமிகா...!
‘கொடுத்தவனும் எடுத்தவனும் மாட்டிக்கொண்டான்டி... விலங்கை மாட்டிக்கொண்டான்டி’ காலம் மாறுது...!
த.ம. ஆ(ற்)றில்
டாஸ்மாக் தண்ணீயில் கண்டம்ன்னு யாருக்கும் எழுதி இருக்கிற மாதிரி தெரியலியே :)
Deleteஉயிர் இல்லேன்னா ,போஸ்ட் மார்ட்டம் செய்து பார்த்திடலாம்:)
அனாமிகா என்றால் பெயர் இல்லாதவள் ,அதுவே பெயரா :)
கோடியில் ஒருத்தன் மாட்டிக்கிட்டா ,காலம் மாறுதா :)
ஈற்றில் ஆறா,மகிழ்ச்சி :)
ஜோக்கும் கவிதையும் அருமை.ஆறும் நூறும் அசத்தல்
ReplyDeleteஇப்போ வெளியாகிக் கொண்டிருக்கும் பொதுப் பணித்துறை ஊழல்களைப் பார்த்தீர்களா ,கமிசனே 45 சதவீதமாம் ,நாடு உருப்படுமா :)
Deleteமனைவியை மறக்காத கனவன்..
ReplyDeleteமறந்தும் இருக்க முடியுமா,மறந்து விட்டார் என்றால் மண்டையைப் போட்டு விட்டார் என்று அர்த்தம் :)
Deleteமிகவும்முன் யோசனை உள்ள ஆஸ்பத்திரி.டாக்டருக்கும் அவரது கை ராசி/ மருந்து ராசி தெரிய வேண்டுமே. மனைவிக்கு இவர் சுனாமி ஸ்ரீமானோ.
ReplyDeleteநோயாளிக்கு எந்த மருந்து பொருந்தும் என்பதை விட மருந்து ராசி /கைராசி ரொம்ப முக்கியம்தான் :)
Deleteமிஸஸ் சுனாமியின் சுவாமி இவர்தான் :)
எல்லா டாக்டர்களும் தம்மிடம் மருத்துவம் பார்த்த எல்லோரையும் இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று சொல்வதன் ரகஸ்யம் இப்போது தெரிந்து கொண்டேன். – நல்ல நகைச் சுவை.
ReplyDeleteத.ம.10
சுகமாகிவிட்டால் மீண்டும் போக வேண்டியதில்லை தானே :)
Delete01. 108 இருந்தால் சரிதான்.
ReplyDelete02. இவண்தான் முதல் போணியா ?
03. இதுக்கு மீள்வே கிடையாதே...
04. கோயில் உண்டியல் ஒரே இடத்தில் இருக்கும் இந்த உண்டியல் நகர்ந்து கொண்டே இருக்கும்.
1.ஆறும் நூறும் சேர்ந்தால் 106,108க்கு பகாதில் வந்து விட்டதே :)
Delete2.பன்னாட்டு கம்பெனியின் புது மருந்துக்கு இவன்தான் எலி :)
3.சுனாமியில் சிக்கி மீள முடிந்தால் ,மறு ஜென்மம்தான் :)
4.அது அசையா சொத்து ,இது அசையும் சொத்து ,அப்படித்தானே :)
அனைத்துமே அருமை. சுனாமி நகைச்சுவை மனதில் சுனாமியை உண்டாக்கியது.
ReplyDeleteகவலைப் படும் அளவிற்கு பாதிப்பு ஒன்றும் இல்லையே:)
Deleteஆறிலிருந்து நூறுவரை சிரிக்க வேண்டுமென்றால் இங்கு வந்துவிடாலாம்.:)
ReplyDeleteவரலாம் ,சிரித்து சிரித்து வயிற்று வலி வந்தால் சிகிச்சைக்கு எங்கே போறது :)
Deleteஎதுவும் சோடையல்ல! அனைத்துமே அருமை!
ReplyDeleteஎனக்கும் திருப்தி ,எப்போன்னா ....நாலு கடலையில் எதுவும் சோடை போகலைன்னா :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
அனைத்தும் அருமையாக உள்ளது.. இரசித்தேன்.த.ம 13
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துக்கும் 13க்கும் நன்றி :)
Deleteஆறும் நூறும் - நன்று!
ReplyDeleteசுனாமி ஸ்ரீ - நல்ல பெயரா இருக்கே! :) அடுத்த கதாநாயகிக்கு இந்த பெயர் வைச்சுடப் போறாங்க!
ஆலும் வேலும் என்பதைப் போலவா :)
Deleteநடிகைக்கு பொருத்தம்தான் ,ரசிகர்களின் மனதை அடித்து செல்வதால் :)
ஆறிற்கும் நூறிற்கும் சாவுக்கும்
ReplyDeleteநல்ல முடிச்சுப் போட்டிருக்கிறியளே!
ஆ(ற்)றிலே விழுந்து செத்தவனும் இருக்கான் ,நூறு மில்லி பாலிடாலைக் குடிச்சி பிழைத்தவனும் இருக்கான் ,நான் முடிச்சு போட்டு என்ன ஆகப் போவுது :)
Deleteஆறு நூறு அருமை!
ReplyDeleteடாக்டருங்களுக்கே தங்கள் மருத்துவத்தில் நம்பிக்கை இல்லையோ ஜி!!!
இருந்தால் ,எல்லாம் அவன் செயல் என்று சொல்வார்களா :)
Delete