25 May 2015

காதலிக்கையில் சொன்னதை காத்துலே விடலாமா :)

        '' பிள்ளையை உடனே பெத்துக்க மாட்டேன்னு  காதலிக்கும் போது சொல்லிட்டு ,இப்போ ஏன் உடனே வேணும்னு சொல்றே ?''

                          ''ஒரு பேரப் பிள்ளையைப் பார்த்துட்டேன்னா  நிம்மதியா  போய் சேர்ந்துடுவேன்னு  உங்கம்மா சொல்றாங்களே !''


படிக்கிற காலத்திலேயே அப்படின்னா ...!

        ''தலைவர் ஒன்பதாவது வரை படித்ததை நிரூபிக்க தலைமை 
ஆசிரியரை மேடைக்கு கூட்டிட்டு வந்து பேசச் சொன்னது தப்பாப் போச்சா ,ஏன் ?''
        ''படிக்கிற காலத்திலேயே கஞ்சா அடித்து அடி வாங்கியதும் ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்துவிட்டார் !''


உயிர் இருக்கிறதான்னு இப்படியும் செக் செய்யலாமா ?

           '' நோயாளிக்கு உயிர் இருக்கான்னு செக் பண்ற 

விதத்திலேயே அவர் போலி டாக்டர்ன்னு தெரிஞ்சுப் 

போச்சா ,எப்படி !''

            ''பொணத்து இடுப்புலே 


கிச்சுகிச்சு மூட்டிப் பார்க்கிறாரே !''

என்றும் வாழும் TMS !

என்றும் வாழும் TMS !
நம் நெஞ்சங்களை எல்லாம் தன் வசீகரக் குரலால் மகிழ்வித்துக் கொண்டிருந்த TMS  வர்களின் உயிர் கடந்த 25.05 .2013 அன்று ஓய்வுப் பெற்றது !காற்றுள்ள வரைக்கும் அவர் குரல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் !
சில வருடங்களுக்கு முன்னால் எதிர்ப்பார்க்காமல் அவரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது ... 
என் உறவினர் ஒருவர் மதுரை கீழவாசல் அருகில் உள்ள கிளினிக்கில் அட்மிட் ஆகியிருந்தார் .அந்த கிளினிக் இருக்கும் இடத்தை யாரிடம் விசாரிப்பது என்று பார்த்தபோது ...சிக்னல் அருகே ஒரு வீட்டில் ,ஈசி சேரில் ஒரு பெரியவர் சாய்ந்து அமர்ந்து இருந்தார் ,அவரிடம் சென்று என் மனைவி விலாசம் கேட்டு வந்தார் .டூ வீலரில் வெளியே நின்று இருந்த என்னிடம் வந்து 'அந்த பெரியவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது 'என் மனைவி சொல்லவும் நான் அவரை பார்த்தேன் ...அதிசயமாய் இருந்தது ,,அவர் அய்யா TMS தான் !மிகவும் எளிமையாக மேல்சட்டைக் கூட இல்லாமல் இருந்தஅவரை  சந்திப்போமென நினைக்கவே  இல்லை ..பிறகு அவரிடம் சென்று நலம் விசாரித்து  எங்களின் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினோம் .
தமிழ் உலகத்திற்கே முகவரியாய் இருந்தவரிடமே இன்னொரு முகவரி விசாரித்தது நாங்களாத்தான் இருப்போம் .இனி எந்த முகவரியில் அவரை சென்று  சந்திப்போம் ?
உலகுள்ளவரை அவர் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் !
துக்கத்தில் ...
பகவான்ஜி 




  1. அரசியல்வாதிகளுக்கு தான் சூடு சுரணை எல்லாம் இருக்காதே. அதனால் இந்த விஷயம் எல்லாம் தப்பாகவே ஆகாது.

    புகழின் உச்சியில் இருப்பவர்கள், எளிமையை விரும்புவதால் தான் அவர்களை மக்கள் மறக்காமல் இருக்கிறார்கள்.




    1. தலைவர் ,நான் ஒன்பதாம் வகுப்பிலேயே கஞ்சா குடியன் ,அப்புறம் வியாபாரி என்று பெருமையாக சொல்லி கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை !

      TMS .பதவி வரும்போது வரும்போது பணிவு வரவேண்டும் என்று பாடியது மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டியவர் !

32 comments:

  1. 01. அடடே மாமியார் மீது பாசம்தான்.
    02. சந்தர்ப்பத்தை பயன் படுத்திட்டாரோ...
    03. ஆஹா நல்ல டாக்டர்.
    04. அவருக்கான நினைவலைகள் அஞ்சலியாகட்டும்

    ReplyDelete
    Replies
    1. 1.ரெண்டாவது பேரனையோ ,பேத்தியையோ பார்த்தா தான் போய் சேருவேன்னு சொன்னா என்ன செய்வாங்க :)
      2.கடத்திட்டு வந்து பேச சொன்னா விடுவாரா :)
      3.அதான் செக் பண்ணும் விதத்திலேயே தெரியுதே :)
      4.மறக்க முடியுமா ,அந்த மேதையை ?

      Delete
  2. தனது கம்பீரமான குரல் வளத்தால் உலகைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். அவரது கச்சேரியை நேரில் கேட்டிருக்கிறேன். சிலப் பாடல்கள் அவரைத்தவிர வேறு எவரும் பாடமுடியாது. அன்னாரை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

    த ம 1

    ReplyDelete
    Replies
    1. TMS அவர்களின் இசையால் வசமாகா இதயம் எது ,செந்தில் ஜி :)

      Delete
  3. 1) என்ன ஒரு நல்லெண்ணம்!

    2) உண்மை விளம்பிகள்!

    3) ஹா...ஹா...ஹா... என்ன ஒரு சுருக்கு வழி!

    4) TMS பற்றிச் சொல்லி இருப்பது நெகிழ்ச்சியாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. 1.எடுத்த முடிவைக் கூட மாற்றிக்கும் அளவிற்கு :)
      2.மேடை ஏற்றும் முன் தெரியாமல் போச்சே :)
      3.இந்த வழி எல்லோருக்கும் ஒத்துவருமா :)
      4.மாமேதையை சந்தித்த கணங்கள் மறக்க முடியாதவை :)

      Delete
  4. டி.எம்.எஸ்ஸைத் தாங்கள் நினைவுகூர்ந்த விதம் நன்று.

    ReplyDelete
    Replies
    1. அவரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன் :)

      Delete
  5. .டி.எம்..எஸ்ஸைச் சந்தித்தீர்களா
    கொடுத்து வைத்தவர் நண்பரே தாங்கள்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அவரைப் போல் கோடியில் ஒருவரைக் பார்க்க முடியாது ,அவரை நேரில் பார்த்தவர்களில் நானும் ஒருவன் என்பதை நினைத்தால் ,நீங்கள் சொல்வது சரியென்றே படுகிறது :)

      Delete
  6. என் மனதில் TMS அவர்களின் குரல் என்றும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. கோடானு கோடி தமிழர் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது :)

      Delete
  7. டி எம் எஸ்சை சந்தித்தது அருமை...
    பலர் இப்படிதான் குழந்தைபெற்றுக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது
    தம +

    ReplyDelete
    Replies
    1. சந்தர்ப்பம் கிடைத்தது அருமைதான் :)

      முன்னாடியே மாமியார் சென்று விட்டால் ,அப்படியே மாமியாரை உரித்து வைத்து பிள்ளைப் பொறந்திருக்கு என்று வேறு சொல்லிக் கொள்வார்கள் :)

      Delete

  8. பகவான்ஜி துக்கத்தில் நானும்........

    ReplyDelete
    Replies
    1. பங்கு கொண்டு தேற்றியதற்கு நன்றி !

      Delete
  9. அருமை மனைவியின் ஆசை!

    ReplyDelete
    Replies
    1. நிறைவேற்றுவாரா அம்மாக் கோண்டு:)

      Delete
  10. தின்ன காலியானா சரி அதான் அவசரம் போலும்,
    அனைத்தும் அருமை. டிஎம்ஸ் நினைவலைகள் போற்றுவோம்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. யோசிக்க வைத்தது உங்கள் கமெண்ட்,திண்ணைக் காலியானால் சரிதானே :)

      போற்றத் தகுந்த ஏழிசை வேந்தனாச்சே :)

      Delete
  11. அம்மாவை நிம்மதியாக அனுப்பி விடலாம் என்றால் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் உயிர் இருக்கிறதா என்று சோதித்துப் பர்க்க இதுவும் ஒரு வழியா. தேவலையே.நாமிருக்கும் வரை TMSஇன் குரல் கேட்டுக் கொண்டிருப்போம்

    ReplyDelete
    Replies
    1. அதுதான் ,பையன் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறான் :)
      அவருக்கு தெரிந்த எளிமையான வழி:)
      உண்மைதான் ,நம் உயிரில் கலந்து நிற்கும் குரலது :)

      Delete
  12. 1) அதுக்கும் 10 மாதம் வரை பொறுத்தருள வேண்டுமே?
    2) தலைமைக்கு தெரியாமல் தவறு செய்ய
    தமிழகத்துக்கு தலைவரை கூப்பிட்டு வாங்கப்பா!
    3) அதுவா பகவான் ஜி!
    அது! பெண் பிணமாக இருக்கும் போல!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. 1.ஆக்கப் பொறுத்தவங்க ஆறப் பொறுக்க மாட்டாங்களா :)
      2.தமிழகம் அவ்வளவு பெருமையான இடமா போச்சா :)
      3.அப்படின்னா ,அந்த ஆள் போலி டாக்டர் மட்டுமில்லை Necrophilia எனும் மனக் கோளாறு உள்ளவனும் கூட :)

      Delete
  13. வணக்கம்
    ஜி
    திருமணத்தின்... அறுவடை.... ஏமாற்றுக்காரன் போல.. இவைஎல்லாம் ஆதாரம்.
    மற்றவைகளை இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி த.ம 13
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வித்தியாசமான கருத்துக்கு நன்றி ,ரூபன் ஜி :)

      Delete
  14. தங்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன் பகவானே!

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய துக்கம் ,நேற்றிரவு தூக்கத்தில் நான் பங்கேற்றதால் குறைந்துள்ளது விஜூ ஜி :)

      Delete
  15. நம்பர் ஒன் ஜோக் உங்க முதல் ஜோக்...('அதனாலதான் அது நம்பர் ஒன் '..அப்பிடீன்னு கவுண்ட்டர் கொடுப்பீங்களே..!)

    நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகள் மிகச் சிறப்பான ஒன்று. He was so humble and sincere, I have seen him. Such a famous personality but so simple..

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லிட்டா எப்படி :)

      இன்றும் வருத்தம் இருக்கிறது ,அவருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளவில்லையே என்று :)

      Delete
  16. மாமியாரோட ஒரு ஆசையையாவது நிறைவேத்தணும்னு இவங்களுக்கு ஆசையோ!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. ட்வின்ஸ் அதுவும் ஆண் ஒண்ணு,பெண் ஒண்ணு பொறந்தா ரொம்ப நல்லது ,மாமியாரை சீக்கிரம் அனுப்பிடலாம் :)

      Delete