23 May 2015

மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களைச் சொன்னதால் ...?

         ''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''

          ''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ்கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''

பையன் சரியா படிக்கலைன்னா இப்படியுமா ?

            ''தூங்குறவனைக்கூட எழுப்பிடலாம்னு சொல்ல முடியலியா ,ஏன் ?''
           ''ஒன்பதாம் வகுப்பிலே மூணு வருசமா  உட்கார்ந்து  இருக்கிற உங்க  பையனை  முதல்லே எழுப்புங்கன்னு நக்கல் அடிக்கிறாங்களே !''

காட்டின் நடுவே 'வன'மூர்த்தி !
           

            '' முதலாளி ,கார் ஸ்டேரிங் 'காடா 'இருக்குன்னு சொன்னதுக்கு ,வன மூர்த்திங்கிற என் பெயரை மாத்திக்கச் சொல்றீங்களே ,ஏன் ?''
           ''வனமூர்த்தி இருக்கிற இடம் காடுதானே ?நீ 'ஹார்டா 'இருக்குன்னு இல்லே சொல்லி இருக்கணும் ?''



 சுயநல வேண்டுதல் ?

என் உறவுகளுக்கும் வேண்டும் ...
என் பொருளாதார வலிமை !
வேண்டிக் கொண்ட அய்யாவுக்கு பரந்த மனமில்லை ..
கொடுக்கல் இருக்காதே என்பதுதான் !

  1. ஸ்ரீராம்.Fri May 23, 06:21:00 a.m.
    1) பாவமா இருக்கு!
    2) வன மூர்த்தி சினமூர்த்தி ஆகியிருப்பாரே!
    3) என்ன ஒரு சுயநலப் பொதுநலம்




    1. 1.உட்கார்ந்து இருப்பவனையே எழுப்ப முடியலைன்னா ,தூங்கிற மாதிரிநடிப்பவனை எழுப்ப முடியாதுதானே ?
      2.வன மூர்த்திக்கு நான் ஏற்றிய விளக்கை விட ,நீங்கள் ஏற்றிய விளக்கு பிரகாசமா இருக்கு !
      3.தன் தப்பிக்கணும் என்பதற்காகவாவது நல்லது நினைக்கிறாரே !

  2. வெங்கட் நாகராஜ்Fri May 23, 07:49:00 a.m.
    :)))

    வன மூர்த்தி - சின மூர்த்தி! ரசித்தேன் ஸ்ரீராம்.




    1. சாதாரண சின மூர்த்தி இல்லே ...வெஞ்சின மூர்த்தி !



27 comments:

  1. ரசனை ஜி

    அனைத்தையும் ரசித்தேன்

    தினமும் அசத்துறீங்க..தம +1

    ReplyDelete
  2. 1) அங்க அடையாளங்கள் சொன்ன தங்கமான புருஷன்!

    2) பாவம்!

    3) வனமூர்த்தி வினைமூர்த்தி ஆகிவிட்டாரா? (இந்ததரம் வேறு மாற்றி விட்டேன்!)

    4) பழைய கருத்தையே வழிமொழிகிறேன்!


    ReplyDelete
  3. ஹா... ஹா... மாட்டிக்கிட்டார்...!

    ReplyDelete
  4. தெய்வீக சீதையை தெய்வீக ராமன் அனுமானிடம் 34 பாடல்களில் அசிங்கம் அசிங்மாக அடையாளம் சொல்கிறான்.

    "வாராழி கலசக் கொங்கை
    வஞ்சிபோல் மருங்குவாள் தன்
    தாராழிக் கலைசார் அல்குல்
    தடங்கடற்கு உவமை தக்கோய்
    பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்
    பணி வென் றோங்கும்
    ஓராளித் தேரும் கண்ட உனக்கு
    நான் உரைப்ப தென்ன ?"

    அருமையான தமிழ். ஆனால் அசிங்கத்தின் உச்சம்.

    ராமபிரான் சொல்கிறான் அனுமானிடம்." என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றவை. அவளுடைய அல்குல் தடங் கடற் போன்றது." என்கின்றான்.

    இதிலே பெரிய அறிஞர்கள் அல்குல் என்றால் 'தொப்புள்' என்று சொன்னார்கள். அதற்கும் கம்பன் பாம்பு படம் போன்றது, தேரின் தட்டு போன்றது என்று பிட்டுப் பிட்டுச் சொல்லி விட்டார்.

    அல்குல் எத்தனை யிடங்களில் வருகிறது , எங்கெங்கே வருகிறது என்று பார்த்தால் அசிங்கமோ அசிங்கம்.

    அல்குல் = பெண்குறி.

    ReplyDelete
  5. அங்க அடையாள நகைச்சுவை நல்ல அங்கதம்.

    ReplyDelete
  6. அங்க அடையாளம் ! நியாயம் தானே!

    ReplyDelete

  7. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  8. வணக்கம்
    எல்லாத்திலும் அவதானம் முக்கியம் மற்றவைகளை இரசித்தேன.
    த.ம8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. ராமன் சீதையின் அங்க அடையாளங்களை அனுமனிடம் கூறுகிறான் ஆனால் சீதை டைவொர்ஸ் நோட்டிஸ் அனுப்பவில்லையே.

    ReplyDelete
  10. 1) அங்க அடையாளத்தை சொல்லும்போது அவரோட அவர் இருந்ததற்கு ஏதேனும் தடயம் விட்டிருப்பார். அது மனைவி கண்ணில் பட்டதால்தான் டைவர்ஸ் வில்லங்கமெல்லம்!

    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete


  11. KILLERGEE DevakottaiSat May 23, 12:19:00 a.m.
    01. அடையாளத்தை மேலோட்டமாக சொல்லியிருக்கலாம்
    02. ஜி ஏதோ உள்குத்து போல இருக்கே...
    03. ஒரு எழுத்து பேரையே மாத்திருச்சே....
    04. ஸூப்பர் ஜி

    ReplyDelete
  12. கில்லர் ஜி >>
    1.அப்படியென்ன அடையாளத்தை ஆழமா யோசிச்சு சொல்லி இருப்பாரோ :)
    2.உள்குத்தும் இல்லே ,வெளிக் குத்தும் இல்லே ,குத்து மதிபபாய் சொன்னதுதான் :)
    3 .இதுக்குத்தான் எதையும் ஹார்டா சொல்லக் கூடாதுன்னு சொல்றது :)
    4.இப்படித்தான் நிறைய பேரு வேண்டிக்கிறாங்களோ:)

    ReplyDelete
  13. உமையாள் காயத்ரி ஜி >>
    நீங்கள் தரும் சமையல் பதிவை விடவா இது அசத்தல் :)

    ReplyDelete
  14. ஜீ... பதிவு போடறதவிட உங்க ஜோக்குகளுக்கு கமெண்ட் போடறது ரொம்ப கடினமான சமாச்சாரமா இருக்கு ஜீ..
    அதனாலேயே பல நேரம் வந்து சிரிச்சிட்டுப் போயிடறேன்.

    God Bless You

    ReplyDelete
  15. ஆஹா ,இதுவல்லவா உண்மையான பேச்சு :)

    ReplyDelete
  16. ஸ்ரீ ராம் ஜி >>
    1.தங்கமான புருசன்தான் ,வேலைக்காரியை உரசிப் பார்க்கலாமா :)
    2எட்டாவது வகுப்பு வரை ஆல்பாஸ் ,ஒன்பதாவது அப்படி இல்லியே :)
    3.வினை மூர்த்தியை ரசிக்க வெங்கட் ஜி இப்பவும் வருவாரா :)
    4.நானும் அன்றைய மறுமொழியைப் புதுப்பிச்சுக்கிறேன் :)

    ReplyDelete
  17. திண்டுக்கல் தனபாலன்ஜி >>
    அவர் மாட்டிகிட்டதில் உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா :)

    ReplyDelete
  18. ஜம்புலிங்கம் ஜி >>
    அங்கத நகைச்சுவை ? அக்கக்காய் பிரித்து ரசித்தமைக்கு நன்றி :)

    ReplyDelete
  19. புலவர் இராமாநுசம்அய்யா >>
    எல்லோர் கண்ணுக்கும் தெரியற அடையாளத்தைச் சொல்லி இருந்தால் வம்பு வந்திருக்காதே :)

    ReplyDelete
  20. ஒன்பதாம் வகுப்பிலே மூணு வருசமா
    தூங்குறவனைக்கூட எழுப்பிடலாம்னு
    எப்படிச் ல்ல முடியும்?

    ReplyDelete
  21. யாழ்பாவாணன் ஜி >>
    T C கொடுத்தாலுமா :)

    ReplyDelete
  22. தமிழன் ஜி >>
    கம்பரசத்தில் அண்ணா சொன்ன கருத்தை கூறி உள்ளீர்கள் .....
    நல்ல கணவன் என்றால் ராமன் போல இருக்கணும் என்று கலாச்சார காவலர்கள் கூறி வருகிறார்கள் .மனைவியின் மறைமுகமான அடையாளங்களை எல்லாம் வர்ணித்து கூறுபவன் நல்ல கணவனாம் !ஏக பத்தினி விரதன் இப்படி எல்லாம் வர்ணித்து சொல்லி இருப்பது சரியில்லை .இப்படி அடுத்தவனிடம் ,தன் அங்க அடையாளத்தை கணவனே கூறியிருப்பதாகஅறிந்த சீதை டைவர்ஸ் செய்திருக்க வேண்டாமா :)

    ReplyDelete
  23. மகி ஜி >>
    தமிழனின் கருத்தையும் ரசித்தீர்களா :)

    ReplyDelete
  24. ரூபன்ஜி >>
    அவதானம் முக்கியம்தான் அவ நினைப்பினால் நிதானம் போயிடிச்சே :)

    ReplyDelete
  25. GMB ஜி >>
    விழிப்புணர்வு இல்லாத காலம் அது ,அதனால் சீதை டைவர்ஸ் செய்யவில்லை :)

    ReplyDelete
  26. யாதவன் நம்பி ஜி >>
    தன்னைத் திருடியவள் பொருளைத் திருடியதும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை போலிருக்கு ,பதட்டத்தில் உளறிவிட்டார் :)

    ReplyDelete