24 May 2015

மனைவி காதில் எதிரொலியா கணவனின் முணுமுணுப்பும் :)

             ''பையன்கிட்டே என்னைப் பற்றி தானே சொல்லிக்கிட்டு இருந்தீங்க  ,என்ன சொன்னீங்க ?''

         ''பாம்புக் காதுன்னா என்னான்னு  கேட்டான் ...அதான் !''

வராக் கடன் என்பது கோடீஸ்வரன்களுக்கு மட்டும்தானா ?

     ''பாங்க் மேனேஜர் நான்தான் ,உங்களுக்கு என்ன வேணும் ?''
     ''வராக்கடன்லே பத்து லட்சம் ரூபாய் கடன் வேணும் !''


மாமூல் படுத்தும் பாடு !

             ''கொள்ளைக் காரங்களுக்கு  போலீஸ்னா  பயம்

இல்லாமப் போயிடுச்சா,ஏன் ?''

              '' நம்ம ஏரியாவிலே எந்தெந்த  வீடு பூட்டிக் 

கிடக்குன்னு  போலீஸ் ஸ்டேசனுக்கே போன்


போட்டுக் கேட்கிறாங்களாமே !''



அதிகாலை எழுந்தவுடன் எழுந்த சந்தேகம் !

விடியலுக்கு வரவேற்பா ...

இரவுக்கு வழியனுப்பா ...

அதிகாலை நேரத்து பறவைகளின் கானம் ?


  1. காமக்கிழத்தன்Sat May 24, 06:51:00 a.m.
    மூன்றுமே இன்று நீங்கள் உதிர்த்த முத்துகள்.




    1. மூன்று லட்சம் கோடி ரூபாய் பாக்கி உள்ளதாம் பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வங்கிகளில் வாங்கிய கடன் !

      1. ஒரு முடிவோடத்தான் லோன் கேட்பாங்க போல இருக்கு.




        1. கடன் என்றால் திருப்பிக் கட்ட வேண்டியது ,லோன் என்றால் திருப்பிக் கட்ட தேவை இல்லாதது என்று பலரும் நினைக்கிற சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் !

20 comments:

  1. பாம்புக் காது சரி தான்...!

    ReplyDelete
    Replies
    1. தன்னைப் பற்றி பேசினால் மட்டும் எப்படித்தான் கேட்குமோ :)

      Delete
  2. 4. வரவேற்புதாங்க!

    3. மாமூலான கேள்விகளுக்கே இப்படி அலுத்துக் கொண்டால் எப்படி!

    2, விவரமான புள்ள!

    1. சரியாக் கேக்கலை போலவே...! என்னன்னு கேக்கறாங்களே!

    ReplyDelete
    Replies
    1. 4.இரவே இரவே விடியாதேன்னு பறவைகளுக்கு பாடத் தெரியாதோ :)

      3.அதானே ,மாமன் மச்சினன் நல்லாயிருக்காங்களான்னு விசாரிக்க முடியும் :)

      2.ஜப்தி நோட்டீஸ் வரக் கூடாதுன்னு எச்சரிக்கையா இருக்காரே :)

      1.அரவுக் காதுலே அரை குறையா விழுந்திருக்கும் :)

      Delete
  3. வணக்கம்
    ஜி

    அனைத்தும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளியின் பகிர்வுகள் அனைத்தும் சிறப்பு தானா :)

      Delete
  4. நல்ல மனுஷன் ! நியாயஸ்தன் கேட்கும்போதே தெளிவா கடன்கேக்குறார் பாருங்க பாஸ்:)

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு தெளிவான ஆட்களுக்கு வங்கி கடன் தர மறுப்பது என்ன நியாயம் :)

      Delete
  5. பாம்புக்கு காதே இல்லையே...மகனை அப்பன் ஏமாத்துகிறார்.

    ReplyDelete
    Replies
    1. காலும்தான் இல்லை ,ஒரே இடத்திலேயேவா இருக்கு :)

      Delete
  6. வாராக் கடன்! நன்று உண்மையும் கூட!

    ReplyDelete
    Replies
    1. வாங்கியோர்க்கு இது காலை வாராக் கடனும் கூட :)

      Delete
  7. கடன் கிடைத்ததா? எல்லாம் சூப்பர். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நியாயத்துக்கு காலம் இல்லையே,இவருக்கு எப்படி கிடைக்கும் :)

      Delete
  8. 01. உண்மையைப் பேசுபவரோ...
    02. வாரக்கடனா ? வராக்கடனா ? ஜி.
    03. டீலிங் ப்ராப்பரா இருக்கோ...
    04. ஸூப்பர் ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1.இப்படி உண்மையைக் கூறினால் பணம் /பலன் கிடைக்குமா :)
      2.வாரக் கடன் என்றால் வீக்லி லோன் என்றாகி விடும் ,வராக் கடனும் ,வாராக் கடனும் ஒன்றுதான் :)
      3.செஞ்சோற்றுக் கடன் ஆச்சே :)
      4.புள்ளினங்களின் இசைக்கு மயங்காதவரும் உண்டோ :)

      Delete
  9. 1)பையன் ''பாம்புக் காதுன்னா என்னான்னு கேட்டதும், அப்பா அம்மாதான்னு மகுடி வாசிச்சிட்டாராக்கும்

    2) திவாலாகி போகிற பாங்க்ல லோன் கிடைச்சா ஓகே!
    த ம 10
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. 1.மகுடி வாசிச்சார் ,ஆனால் சத்தம்தான் வரவில்லை :)

      2.திருப்பிக் கட்டலேன்னு கோடீஸ்வரன்கள் வாங்கிய கடனை ,வாராக் கடன் என்று முடித்தால் திவால் ஆகாமல் என்ன செய்யும் :)

      Delete
  10. பாம்பு செவி! :)))) நல்ல கேள்வி - தகுந்த பதில் தான்!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு கேட்காமலே இருந்திருக்கலாம் :)

      Delete