12 May 2015

நகை உனக்கு ,ந டி கை நீ எனக்கு !

-----------------------------------------------------------------
இதை முதல்லேயே செய்திருக்கலாம் :)
                   ''உ ன் பெயரைச் சொல்லி விசாரித்தால் பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கும் கூடத் தெரியலை!''
                     ''அப்புறம் ,எப்படிக் கண்டுபிடிச்சே ?''
                     ''மூணு தெரு தள்ளி நின்னு கிட்டிருந்த பசங்க கிட்டே உன் பொண்ணோட பெயரைச்  சொன்னேன் ,கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க !''



நகை உனக்கு ,நடிகை நீ எனக்கு !

               '' நகைக்கடை விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ,அதிபரோட டீலிங் ரொம்பப் பிடிச்சு போச்சாம்!''
            ''எப்படி?''
            "அந்த நகைகளை   நீயே வைச்சுக்கோ ,உன்னை நான் வச்சுக்கிறேன்னுட்டாராம் !''

கொள்ளை அடித்தாலும் மாமூல் வந்திடணும் !

          ''இன்ஸ்பெக்டரான உங்க வீட்டுக்கே  வந்த  

நான்கு  கொள்ளைக்காரர்களில் ஒருத்தரை மட்டும் 


ஏன் சுட்டீங்க ?''

               'மத்த மூணு பேரும் மாமூலை ஒழுங்காக் 

கொடுக்கிறாங்களே !''

ஐன்ஸ்டீனும் செய்யாத வடை ஆராய்ச்சி !

வடைக்கு நடுவே ஓட்டைப் போட்டவன் 
ஆஞ்சனேய பக்தனாகத்தான் இருக்கணும் ...
வடையை மாலையாய் கோர்க்க வசதியாயிருக்கே !


  1. துரை செல்வராஜூMon May 12, 08:33:00 a.m.
    1. நகை சுவையா இருந்திருக்குமோ!?..
    2. ஆத்தாடீ!?..
    3. பிரசாதம் கிடைச்சதா?.. இல்லையா !

    1. 1.இல்லா விட்டால் சம்மதம் கிடைத்து இருக்காதே !2.நாட்டிலே இப்படித்தான் என்கவுண்டர் நடக்குதோ ?3.கிடைச்சது ,ஆனால் நடுவிலே கொஞ்சம் ஓட்டையைக் காணாம் !

    2. இதிலே கொடுத்து வைத்த புண்ணியவான் யாரு?
    3.   Bagawanjee KAMon May 12, 06:14:00 p.m.
    4. ஒண்ணு நகைக் கடை அதிபர் ,ரெண்டு மாமூலாய் தப்பித்த கொள்ளைக் காரன் ,மூணாவது வடைக் கடைக்காரர் !








19 comments:

  1. இதை முதல்லேயே செய்து இருக்கலாம்.....இனி மற்றவர்கள் செய்து விடுவார்கள்...

    நகை, நடிகை அடடே....

    மாமூல் கொடுக்காட்டி தான் அவர் சரியா வேலை செய்வார் போல...ஹிஹிஹி...

    வடை மாலை போட்டாதான் வயிறு நிறையும்னு கணக்கு போட்டுட்டான் போல....பக்காவான பக்தி.தான்

    தம இணைப்புடன் தம 1..

    ReplyDelete
    Replies
    1. வழிகாட்டின்னா இவர்தானா :)

      அடடே ,வச்சுகிட்டது பொருத்தம்தானா :)

      நியாயம் இப்படியும் மாறும் போலிருக்கே :)

      சட்னியையும் வாளியில் வைத்து கும்பிட்டு இருப்பாரோ :)

      Delete
  2. வணக்கம்
    ஜி
    சின்னப்பிள்ளைகள் இந்த காலத்தில் விபரம் அறிந்தவர்கள்.....
    'மத்த மூணு பேரும் மாமூலை ஒழுங்காக்

    கொடுக்கிறாங்களே !''

    இந்த நகைச்சுவையை படித்தவுடன் சொல்ல முடியாத சிரிப்பு... வாழ்த்துக்கள் ஜி.. த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அதிலும் வயசுப் பசங்களை சொல்லவே வேண்டாம் ,ரொம்பவே விவரம் :)

      மாமூல் அவரை இந்த பாடு படுத்துதே :)

      Delete
  3. அடடா... இதுக்காக மூணு தெரு தள்ளிப் போயிட்டு மறுபடி வந்தாராமா?

    ஹா...ஹா...ஹா.. சில சமயம் நடி கை தடி கையாக மாறிவிடும்! உஷார்!

    மாமூலாக நடப்பதுதானே?

    ஆமாம், அந்த ஒட்டைக்குக் காரணம்தான் என்ன?

    ReplyDelete
    Replies
    1. முதல்லே இந்த ஐடியா வரவில்லை போலிருக்கு :)

      தடி கை ஆனால் ஓவர் சைஸ் வளையல் மாட்டினா சரியாப் போச்சு :)

      விசுவாசமிக்க எஸ் ஐ :)

      வடை மாலைக் கோர்க்கத்தான்,எத்தனையோ வடையிருக்க இது மட்டும்தானே மாலையாகுது :)

      Delete
  4. பேர் சொல்லப் பிள்ளை... கொடுத்து வைத்தவர்...!

    இனி எந்த விளம்பரத்தில வேணுனாலும் நடிச்சுக்க... ஆனா நகைக்கட விளம்பித்தில மட்டும் நடிக்காதே... என்ன சரிதானே!

    பரவாயில்லையே... வச்ச குறி தப்பலையே...!

    எடுக்கவா... கோர்க்கவா...இல்ல சாப்பிடவா...?

    த.ம. 6.

    ReplyDelete
    Replies
    1. பிள்ளை ,அதுவும் பெண் பிள்ளை ,சொல்லவா வேணும் :)

      ஏன் ,இவர் உறவில் சேதாரமாகி விடுமா :)

      இவர் வீட்டிலேயே குறி தவறினா கேவலமாச்சே :)

      எல்லா வடையையும் எடுக்கலாம் ,சாப்பிடலாம் ,ஓட்டை வடையைப் போல் கோர்க்க முடியாதே :)

      Delete
  5. 01. குடும்பம் சீக்கிரம் முன்னுக்கு வந்துடும்.
    02. கழுத்துல ஒரு கயிறைப்போட்டால் ரெண்டும் கிடைச்சுடுமே...
    03. ரொம்ப விவரமான இன்ஸ்’’தான்.
    04. வட’’ ஆராய்ச்சி அட’’

    ReplyDelete
    Replies
    1. 1.வாழைப் பழத்தோலில் வழுக்கி விழுந்து முன்னுக்கு வரும் :)
      2.ஒரே கயிறை எத்தனைப் பேருக்குப் போட முடியும் :)
      3.இல்லைன்னா இவ்வளவு சரியா சுட முடியுமா :)
      4.ஆராய்ச்சியில் பொத்தல் விழவில்லை :)

      Delete
  6. மாமியாரை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமோ...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. பசங்களுக்கு அது எதற்கு ,தேவை இல்லாத வேலை :)

      Delete
  7. எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது...நண்பரே...“ பணப்பெட்டி உனக்கு...விடுதலை எனக்கு...!!!”

    ReplyDelete
    Replies
    1. பணப் பெட்டி இல்லேன்னா ,இந்த உலகத்தில் இருந்தே விடுதலையாகி போக வேண்டியதுதான் :)

      Delete
  8. உங்கள் ரசிப்பை நானும் ரசிக்கிறேன் நண்பரே :)

    ReplyDelete
  9. அம்மா பெயரைச் சொல்லி விசாரித்தால்
    பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூடத் தெரியலையாம்
    மூணு தெரு தள்ளி நின்னு கிட்டிருந்த பசங்க கிட்டே
    பொண்ணோட பெயரைச் சொன்னா ,
    குறித்த வீட்டில கொண்டு வந்து விட்டுட்டு போறாங்களே
    இது தாங்க இன்றைய நாட்டு நடப்பு!

    ReplyDelete
    Replies
    1. அம்மா பெயருமா :)

      Delete
  10. ஹஹஹஹஹ உண்மைதாமன்...இப்ப கூட பெண்கள் பெயரில் ஆண்கள் ஸ்டேட்டஸ் போட்டா லைக் அள்ளும்...ஃபேஸ்புக்குல....

    ஹஹஹஹ் வைச்சுக்கவா உன்ன...நு பாட ஆரம்பிச்சுட்டாரோ...

    மாமூல் மாமூல்தானே

    ReplyDelete
    Replies
    1. லைக் அள்ளும் சரி ,உண்மை தெரிஞ்சா ,அவனா நீ ன்னு கேட்டால் அசிங்கம் தானே )

      Delete