''போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து கிட்டிருந்த தலைவரை 'சின்ன 'வீட்டிலே வைச்சுப் பிடிச்சிட்டாங்களாமே !''
''பாவம் ,அவரால் 'தொடர்பு 'எல்லைக்கு அப்பால் போக முடியலை போலிருக்கு !''
மாமனாரின் அதிரடி முடிவு !
''உங்க மாப்பிள்ளையை தலை தீபாவளிக்கு அழைக்கப் போறதில்லையா ,ஏன் ?''
''என் பொண்ணைக் கொடுமை பண்ற அந்த 'முண்டத்'துக்கு எதுக்கு 'தலை ' தீபாவளி ?''
''என் பொண்ணைக் கொடுமை பண்ற அந்த 'முண்டத்'துக்கு எதுக்கு 'தலை ' தீபாவளி ?''
கணவனுக்கு நரகமே பழகிப் போச்சு !
''என்னங்க ,நான் செத்தா ,சொர்க்கத்திற்கு
போகணும்னு வேண்டிக்கிறீங்களே ,என் மேலே
அவ்வளவு பிரியமா ?''
|
|
Tweet |
01. போகும்போது செல்போணை யாருட்டைாவது கொடுத்துட்டு போகனும்.
ReplyDelete02. தலை + முண்டம் 2ம் 1 தான்.
03. அப்படினாக்கா அவ போற இடத்துக்கு இவண் போக மேண்டாம்.
04. நாளைக்கும் இதுதானோ ?
முதல் வருகை தந்த கில்லர்ஜீ அவர்களுக்கு ,வணக்கம் ,வந்தனம் ,நமோஸ்கார் :)
Deleteஉங்க கருத்து என்னை ஆழமாய் சிந்திக்க வைப்பதால் ,மல்லக்க்கப் படுத்து யோசிச்சு காலையில் பதில் சொல்றேனே ...இப்போ ,பை பை ...குட் நைட் :)
நரகத்தை கூட சொர்க்கமாக மாற்றும் வல்லமை படைத்தவள் மனைவி என்கிறாரோ!
ReplyDeleteத ம 2
வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை நரகமாக்கும் வல்லமை படைத்தவள் ஆயிற்றே :)
Delete1) ஹா...ஹா...ஹா... நல்லாயிருக்கு!
ReplyDelete2) ஹா...ஹா...ஹா... தலை தீபாவளிக்குள் கொடுமைகள் தொடங்கி விட்டதா? ஆசை, மோகம் எல்லாம் இல்லையா?
3) அந்த இன்னொண்ணு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கும் ஆவலா?
4) முந்தாநாள் என்ன கிழித்தோமோ அதைத்தான் நேற்றும் கிழித்தோம். இன்றும் கிழிக்கிறோம். நாளையும் கிழிப்போம்!
1.ஒளிவதற்கு வேற இடமா கிடைக்கலே,தேடுவோருக்கு முதல் இலக்கே இதுவாகத்தானே இருக்கும் :)
Delete2.கொடுமைக்காரனுக்கு ஆசை ஏது,மோகம் ஏது:)
3.அந்த ஒன்றிலாவது நிம்மதியாய் இருக்க ஆசை :)
4.கிழி...கிழி ..கிழி என்று கிழித்து விட்டீர்கள் :)
கிழிந்து போவதே வாழ்க்கை ஜி...
ReplyDeleteகிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு சொல்வாங்க வாழ்க்கையுமா :)
Deleteநாட்காட்டித்தாளை தினசரி கிழிக்கும்போதும் ஒரு
ReplyDeleteநெருடல் ...
நேற்றும் என்ன செய்து கிழித்தோமென்று ?
அருமை பகவானே.....
சிரிப்பதோடல்லாமல் சிந்திக்க வைப்பதற்கு
சிரித்து வாழ்ந்தால் போதுமா ,சிந்தித்தும் வாழ வேண்டியிருக்கே :)
Deleteசிலர்சிந்தித்து சிந்தித்துக் கிழிக்கிறார்கள் சிலர் சிந்திக்காமலேயே கிழிக்கிறார்கள். தலைவர் தலைமறைவாய் இருக்க இடமா இல்லை.?அவரைத் தெரிந்தவர்களுக்கு அவர் இருக்கும் இடமும் தெரியுமே.
ReplyDeleteஎப்படியோ கிழித்தால் சரிதான் :)
Deleteஅதைதான் ,தலையாரி வீடு என்று குறிப்பால் உணர்த்தியுள்ளேன் :)
ஹாஹாஹா! எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களோ? அதனால்தான் பிரபல நகைச்சுவை எழுத்தாளராய் மிளிர முடிகிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதினமலர் கூட ,இன்று என் பதிவைக் காப்பி அடித்துள்ளதைப் பார்த்தால் ,நீங்கள் சொல்வது போல் ,நான் பிரபலம் ஆயிட்டேன் போலிருக்கு :)
Delete"இந்த நெருடல் சாதிக்கத் தூண்டணுமே?
ReplyDeleteநாட்காட்டித்தாளை
தினசரி கிழிக்கும் போதும்
ஒரு நெருடல்...
நேற்றும்
என்ன செய்து
கிழித்தோமென்று?" என்ற
நெருடல்
எத்தனை நம்மாளுகளுக்கு
ஏற்படுகிறது? - அதை
எண்ணி எண்ணி
முன்னேறியவர்
எத்தனை ஆள்?
மற்றவங்களை விடுங்க ,நாம சாதிப்போம் :)
Deleteஓட்டுப் பதிவு ஆகவில்லையே! ஏன்?
ReplyDeleteநேற்றும் கூட 'ஊமைக் கனவுகள் ' விஜி ஜி அவர்கள் வாக்கிட முடியலை என்று கூறி இருந்தார் ,இன்று ..நீங்களும் .....தமிழ்மண நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியுள்ளேன் ,ஆவனச் செய்வார்கள் என்று நம்புகிறேன் அய்யா !
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
முதல் வீடு அடிக்கடி செல்போனில் அழைப்பார்கள் என்ற பயத்தால் சொல்போனை ஓப்பன்னிட்டு இருந்திருப்பார் போல... சின்ன வீடு ஆபத்தானதுதான் ..
மற்றவைகளை இரசித்தேன் த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கழுதை தப்பினா குட்டிச்சுவர் என்ற பழமொழியை தலைவர் மறந்து விட்டார் போலிருக்கு :)
Deleteஹஹஹ்ஹஹ் அனைத்தையும் ரசித்தோம் ஜி...அட பிரபலமாயிட்டீங்க போங்க....ஆனா ஜோக்காளி பேர் இல்லாமல் ....ஜி நேர்ல போயி கேட்டுருங்க ஜி!
ReplyDeleteநேரிலே போய் கேட்பதா ? மதியாதார் தலை வாசல் மிதியாமை கோடி பெறுமே:)
Delete