21 May 2015

சீன சப்பை மூக்கழகி தந்த 'மொக்கை' இது :)

----------------------------------------------------------

மகுடிக்குப் பதிலா ராகமா :) 

              ''என்ன சொல்றே ,மகுடி உடைஞ்சு போச்சா ? பாம்பு பிடிக்க, சங்கீத வித்வான் நான் எப்படி உனக்கு உதவ முடியும் ?''

            ''புன்னாகவராளி ராகத்தை பாடினா பாம்பு வரும்னு சொல்றாங்களே !''

சீன சப்பை மூக்கழகி தந்த 'மொக்கை' இது ....!

              ''பரவாயில்லேயே,சீனாவில் ...நம்ம நாட்டில்  விற்கப்படும் மூக்கு கண்ணாடிகளில் பாதியளவுகூட  விற்கிறதில்லையாமே....அவங்க கண் பார்வை நல்லா  இருக்கும் போலிருக்கே !''
             ''அட நீங்க வேற ...மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு கூட அவங்களுக்கு மூக்கே இல்லையே !''



 அனுமந்து OK ,1/2விந்து NO!

          ''குறைப் பிரசவம் ஆனதுக்கு காரணம், 'அரவிந்து 'ங்கிற பெயரை ,நாங்க செலக்ட் செய்ததுதான்னு எப்படி சொல்றீங்க,டாக்டர் ?''
          ''அரவிந்த்ன்னு கூட சரியா சொல்லத் தெரியலையே !''




கண்ணாடி சொல்லும் உண்மை !

வெளியே தெரிவதை என்னால் காட்டமுடியும் ...

உள்ளே உள்ளதை நீதான் பார்த்துக்கணும் !


  1. எதுக்கு இந்தக் கொலை வெறி ,சைனாக்காரனுக்கு மட்டுந்தான் இந்த ஜோக்குப் பொருந்தும் இங்கின உள்ளவங்க மூக்கு உங்க நாக்க விட நீட்டா இருக்கும் பார்த்து இந்த விஷயம் தெரிஞ்சா மூக்காலையே கொண்ணுபுடுவாங்க கொண்ணு :)))))))))))))




    1. நோக்கு வர்மம் போல மூக்கு வர்மமும் இருக்கா ?
      1. மூக்கு இல்லாம கூட கண்ணாடி போட்டுக்கலாங்க? காது இருந்தா போதும் :)


        1. காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்க காதுகூட வேணாமே ?

      2. அப்ப அந்த நாட்ல மூக்கு பொடிக்கு கூட வேல இல்லன்னு சொல்லுங்கோ....




        1. பொடி போட மூக்கு வேணுமா ?ஓட்டை இருந்தா போதாதா ?

      3. கலாகுமரன்Wed May 21, 01:52:00 p.m.
        கடுகு சிறுத்திருந்தாலும் காரம் குறையாது தானே ? (கடுகு காரமடிக்குமான்னு கேட்கக் கூடாது)




        1. சரி கேட்கலே ,கடுகு எப்படி காரை மடிக்கும்னு மெக்கானிக்கிட்டே கேட்டுக்கிறேன் !
        2. கலாகுமரன்Wed May 21, 06:15:00 p.m.
          :)

26 comments:

  1. ''புன்னாகவராளி ராகத்தை பாடினா பாம்பு வரும்னு சொல்றாங்களே !''
    அதுவா!
    அதுவா அந்த ராகத்தை யார் பாடினாலும் நாக்குல நாக தோழம்தான்! பகவான் ஜி!

    மூக்கே இல்லாதவன் மூக்கு கண்ணாடி செய்து
    கொம்பேறி மூக்கர்ளாகிய நம்மிடம் விற்று விட்டு போவதை பார்க்கும் போது
    யாருக்கும் மூக்கு மேல் கோபம் வர மாட்டேங்குதே?
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நாக தோஷம் என்ன செய்யும் ?காலைச் சுற்றிகிட்டு விடாதோ :)

      எப்படி கோபம் வரும் ?நமக்கு மூக்கு பிடிக்க சாப்பிடத் தானே தெரியும் :)

      Delete
  2. 1. பாம்பு வந்தா வாழ்க்கையே புண்ணாகிப் போகுமே? அவர் என்ன கவுண்டமணி பாகவதரா!

    2. அச்சச்சோ... அப்போ என்ன பண்றாங்க பாவம்!

    3. இப்படி ஒரு . கோணமா!

    4. ஆ!

    ReplyDelete
    Replies
    1. 1.கவுண் டவுன் மணி பாகவதரே :)
      2.ஒட்டு மூக்கு கண்ணாடி மாட்டிக்குவாங்களா:)
      3.நம்பிக்கைத் தானே வாய்க்கும் ,இல்லேன்னா பொய்க்கும் :)
      4.கண்ணாடி குத்திடுச்சா :)

      Delete
  3. Replies
    1. உங்க சிரிப்பு ஏதோ ஒண்ணு சொல்லுதே :)

      Delete
  4. பகவான் ஜி,
    குறைப் பிரசவம் ஆனதுக்கு இப்படி ஒரு காரணமா?
    அத்துனையும் அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நினைப்பே அரை என்றால் நிஜத்தில் எப்படி முழுதாகும்:)

      Delete
  5. சப்பை மூக்கில் கண்ணாடி ...
    கொஞ்சம் ஓவருப்பு ...
    தம +

    ReplyDelete
    Replies
    1. சீனா என்றதும் ,தோழரே நீங்க இப்படி சொல்றதும் .....:)

      Delete
  6. குறை பிரசவத்திருக்கு இப்படி ஒரு விளக்கமா?

    த ம 7

    ReplyDelete
    Replies
    1. இதுவரையில் யாரும் சொல்லாத விளக்கம் ,அப்படித்தானே :)

      Delete
  7. ““ ''புன்னாகவராளி ராகத்தை பாடினா பாம்பு வரும்னு சொல்றாங்களே !'“““““
    1) அது புன் *நாக•வரளி என்று இருக்க வேண்டுமோ.. சொல்லாராய்ச்சி :))

    ““““மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு கூட அவங்களுக்கு மூக்கே இல்லையே !''““““““

    2) மூக்கு இல்லாதப்பயே இப்படி நம்ம நாட்டு எல்லைக்குள்ள மூக்க நுழைக்கிறான். அதுவும் இருந்திட்டா........

    ReplyDelete
    Replies
    1. 1.இதை அந்த பாம்பு பாகவதரிடம்தான் கேட்கணும்:)

      2.ஒருவேளை ,நம்ம ஆட்களுக்கு பொம்பளை மூக்கைத்தான் அறுக்கத்தெரியும் என்று தெரிந்து இருக்குமா :)

      Delete
  8. 1. ''புன்னாகவராளி ராகத்தை பாடினா பாம்பு வரும்னு சொல்றாங்களே !''
    2. மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு கூட அவங்களுக்கு மூக்கே இல்லையே !''
    3. விந்து ......--- செம பகிடி.. நன்று...நன்று.....

    ReplyDelete
    Replies
    1. பகிடி ...நல்ல தமிழ் வார்த்தை ,செம என்பது எந்த மொழிச் சொல்லோ ,செம்மை என்பதின் சுருக்கமோ :)

      Delete
  9. புன்னாகவராளி ராகத்தை பாடினா பாம்பு வரும்னு சொல்றாங்களா... எனக்கு பாம்புல கண்டமுன்னு எ ஜாதகத்தில எழுதியிருக்கே... பாம்புக்கு காது கேக்காதுன்னு சொன்னா நீங்க வேற கேக்க மாட்டேங்கிறீங்க... ஒங்களுக்கு நா சொல்றது கேக்குதா... என்னான்னு தெரியல... தலைய தலைய ஆட்டுரீங்க... சரி ...பாடித் தொலையுறேன்!

    என்ன அவுங்களுக்கு மூக்கு கண்ணாடி வேண்டாமா...? கண்ணு கண்ணாடிதான் வேணுமா...!

    அர விந்துன்னாலே... ஆ... சிரமம் தான்.

    கண்ணா(ட்)டி உள்ள(த்)தை காட்டும்தானே!

    த.ம. 10.

    ReplyDelete
    Replies
    1. பாம்பு பிடிக்கும் பாகவதரை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் :)

      கண்ணு கண்ணாடின்னா காண்டாக்ட் லென்ஸ் தானே :)

      சிரமம் பார்க்காமல் உண்மையைச் சொல்லிட்டீங்களே :)

      உள்ளத்தைக் காட்டும் கண்ணாட்டின்னு யாரைச் சொல்றீங்க ,பொம்மனாட்டியையா :)

      Delete
  10. 01. சங்கீத வித்துவானுக்கு சங்குதான்.
    02. மூக்குகூட வியாபாரத்தை பாதிக்குதே...
    03. ஆஹா......
    04. ஸூப்பர் ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1.அந்த சங்கோலியில் என்ன ராகம் வரும் :)
      2.ஆனால் ,அவர்களிள் தயாரிப்புகள்தான் உலகெங்கும் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்குதே :)
      3.18+என்று போட்டிருக்க வேணுமோ :)
      4.கண்ணாடி முன்னாடி நின்னு யோச்சிச்சது இது :)

      Delete
  11. சீனா மூக்கு அருமை!

    ReplyDelete
    Replies
    1. சைனா பொம்மையின் மூக்கைத் தானே சொல்கிறீர்கள் :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    இந்த காலத்து பாம்பு மனிதனைப்பற்றி நல்ல படித்து விட்டது.. வெளியில் வந்தால் ஒரு போடுவதான்.. அப்புறம் சடம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மனிதன் பாம்பை அறிந்ததைக் காட்டிலும் பாம்பு அறிந்தது அதிகமா :)

      Delete
  13. சீனச் சப்பை மூக்கழகிக்கு
    மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு கூட
    மூக்கு நீட்சி போதாமல் இருக்கலாம்

    ஆனால்,

    உண்மை சொல்லும் கண்ணாடிக்கு
    பொய் சொல்லத் தெரியாது தான்

    ReplyDelete
    Replies
    1. இரண்டையும் நீங்கள் முடிச்சு போட்ட விதம் அருமை :)

      Delete