7 May 2015

மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு உண்டா :)

இது தொழில் பக்தியா ,புத்தியா :)

         ''அந்த பிளாக்கில் எழுதுற நான் ,கொத்தனார் என்பதை நான் சொல்லாமலே எப்படி கண்டுபிடிச்சீங்க ?''

          ''தினமும் வர்றது ரெண்டு கமெண்ட், ஒண்ணுக்கு  மட்டுமே மறுமொழி கூறி நாளைக்குன்னு பாக்கி  வைக்கிறீங்களே !''  


தாலி பாக்கியம் மனைவிக்கு நிலைக்குமா ?

             ''உங்க வீட்டுக்காரர் ஹெல்மெட் போட்டுக்க மாட்டேன்னு சொல்றாரா ,ஏன் ?''
            ''அவர் செய்த தர்மம் ,தலையைக் காக்கும்னு சொல்றாரே !!''
மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு உண்டா ?
           ''மடிசார் மாமிங்கிற சினிமா தலைப்புக்கு எதிர்ப்பாமே ?''

           ''அதனாலென்ன ,மடி 'சாரி ' மாமின்னு மாத்திட்டாப் போச்சு !''


நான் டாஸ்மாக் தண்ணியைச் சொல்லலே !


நாம் யார்க்கும் அடிமையல்லோம் ...

என்று சொன்ன பாரதி இன்றிருந்தால் ...

குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் ...

அவரும் 'மினரல் வாட்டர் அடிமை 'ஆகியிருப்பார் !

  1. ''நிறைய தான தர்மம் பண்ற,உங்க வீட்டுக்காரர் ஹெல்மெட் போட்டுக்கமாட்டேன்னு சொல்றாரா ,ஏன் ?''
    ''தர்மம் தலைக் காக்கும்னுசொல்றாரே !!''

    நல்ல லொள்ளுதான் :)))




    1. அப்ப,தர்மம் தலைக்காக்கும்னு சொல்றதெல்லாம் டூப்பா ?அம்பாளுக்கு தங்க தலைக்கவசம் இவர் நன்கொடையா கொடுத்தாலும் புண்ணியம் இல்லையா ?

      அதைக்காட்டிலும் இது பெரிய லொள்ளுன்னு  மட்டும் சொல்லிடாதீங்க !

17 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன்.

    மொபைலில் படிக்க உங்கள் ப்ளாக் சிரமமாக உள்ளது. வலதுபுறம் தள்ளிச் சென்று விடுகிறது.

    மொபைலில் படிக்கும்போது த.ம வாக்குப் பட்டையும் எந்த ப்ளாக்கிலுமே கண்ணில் படாது!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் சிரமத்தை போக்க ஆவனச் செய்கிறேன் !

      Delete
    2. ஆம் ஜி... தொடர்பு கொள்ளவும்...

      Delete
    3. மிக்க நன்றி ,இதோ வந்துவிட்டேன் ஜி :)

      Delete
  2. Replies
    1. கொத்தனார்கள் யாராவது வேலை முழுவதையும் முடிப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா ?நாளை வேலை தொடரும் என்பதைப் போல ,வளைவு வளைவாய் கீறல் போட்டுவிட்டு செலவதைக் கவனித்து உள்ளீர்களா ஜே கே சார் :)

      Delete
  3. Replies
    1. 'தர்ம'த்தைக் கட்டிக்கிட்டு வாழ வைக்கிறார் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாமா :)

      Delete
  4. மடிசார் சேலை கட்டியிருக்கிறது யாருன்னு பார்த்தாலே.... புவிசார் குறியீடு உண்டு தெரிந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு உண்டா ?
      தலைப்பே நன்று!

      Delete
    2. உடுத்தும் முறையில் மயிலாப்பூர் மாமிக்கும் ,பாலக்காட்டு மாமிக்கும் வித்தியாசம் இருக்கா :)

      Delete
  5. புலவர் அய்யா அவர்களே ,தலைப்பு மட்டுமா நன்று....'மீண்டும் கோகிலா'வில் வந்த இளவயது மடிசார் மாமி இன்னும் கண்ணிலேயே நிற்கின்றாரே :)

    ReplyDelete
  6. ரசித்தேன் அனைத்தும் அருமை ..!

    ReplyDelete
  7. வணக்கம்
    ஜி
    அனைத்தும்.. அருமை.. இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கும் , வருகைக்கும் நன்றி :)

      Delete
  8. தர்மம்....ஹெல்மெட் அஹ்ஹஹஹ அருமை

    அது போன்று மடிசார் மடி சாரி அருமை!!!

    ReplyDelete
    Replies
    1. ஹெல்மெட்டிலேயே'தர்மம் தலைக் காக்கும் 'னு எழுதினா நல்லாவா இருக்கும் :)

      சாருக்கு சாரி பரவாயில்லையா :)

      Delete