4 May 2015

சினிமா பாடலை ரசிப்பதிலும் கொலைவெறியா :)

-------------------------------------------------------------------------------------------------
நாற்பதில் வர வேண்டியது :)
          ''என்னைப் பார்த்தா ,நாற்பது வயசுன்னு நம்ப முடியலையா ,அவ்வளவு இளமையா இருக்கேனா ?''
           ''இப்போ வரவேண்டிய நாய்க் குணம் ,ஐந்து வருசத்துக்கு முன்னாடியே  உங்களுக்கு வந்திருச்சே,அதான் நம்ப முடியலைன்னு சொல்ல வந்தேன்  !''



சினிமா பாடலை ரசிப்பதிலும் கொலைவெறியா :)

          ''என்னடா ஆச்சு உனக்கு ?சினிமாப் பாட்டை கேட்டுட்டு...பாவம் அந்த குழந்தைங்கிறே?''
          ''கண்ணன் 'ஒரு கை ' குழந்தையாமே ?''



வக்கீல் புருஷனை வாதத்தில் ஜெயிக்க முடியுமா ?


               ''என்னங்க ,கேஸ்  கட்டை எடுக்க  மறந்து 

கோர்ட்டுக்குப் போறீங்களே , நீங்கெல்லாம் பெரிய 

கிரிமினல் லாயரா ?''  

            ''குக்கர்லே கேஸ்கட்டை  போட மறக்கிற  நீ  அதை 

 சொல்றீயாக்கும் ?''






வாழ வைக்கும் அமெரிக்காவுக்கு ஜே !

USA  பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டாலும் ...

அங்கே பணிபுரியும் நம்மவர்கள் ...

கையிலே டாலர்  ,செண்ட்டும் மட்டுமின்றி 

கழுத்திலே தங்க டாலரும் ,வாசனை செண்ட்டுமாய் 

ஜொலிக்கிறார்கள் !மணக்கிறார்கள்!

  1. வக்கீல் ஜோக் சூப்பர். சாதாரணமா ஜோக் எழுதறது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நானும் ஒரு காலத்தில் நகைச்சுவை பதிவுகளை இட்டு வந்தவந்தான். அதற்கென்று ஒரு இன்ஸ்ப்பிரேஷன் வரவேண்டும். அப்போது மிக எளிதாக வந்துக்கொண்டிருந்த எனக்கு இப்போது ரூம் போட்டு யோசித்தாலும் வரமாட்டேன் என்கிறது. ஆனால் நீங்க எப்படிங்க வருசக்கணக்கா விடாம எழுதறீங்க? ஆச்சரியமா இருக்கு.




    1. உங்களின் நீண்ட பதிவுகளைக் காணும்போது ,நான் எழுதுவதெல்லாம் ஜுஜுபி என்றுதான் படுகிறது ,தினசரி ஒரு பதிவாவது போடவேண்டும் என்ற எண்ணமே எதையாவது எழுத வைத்து விடுகிறது !
    1. புலவர் இராமாநுசம்Tue May 06, 09:04:00 a.m.
      நித்தநித்தம் ஜோக் எழுதும் பகவானே
      நிச்சியமாய் நீங்களொரு சுகவானே
      சித்தமது மகிழ்ந்திடவே பகவானே
      செப்புவது அனைத்துமே நகைவானே !

      எத்தனைப் பேருக்கு கிடைக்கும் இந்த பேறு 
      சந்தோசத்தில் இறங்கவில்லையே சோறு 
      அய்யாவுக்கு நன்றி கூற வழி ஒன்றை மனமே நீ கூறு 
      வாழ்க பல்லாண்டு என்பதன்றி இல்லை ,வார்த்தை வேறு !



      போதும் ,போதும் ,கவிதை ! புல்லரிக்குது என்று நீங்கள் சொல்வதாலும் ,விளம்பரம் எனக்கு பிடிக்காது என்பதாலும் சுய தம்பட்டத்தை நிறுத்திக் கொள்கிறேன் ,உங்க கருத்தைச் சொல்லுங்க ..ஹிஹிஹி :)



24 comments:

  1. 1)ஆஹா! இளமையின் ரகசியம் குணாதிசியம் தானா?
    2)ஆரிரோ! ஆராரிரோ? (தாலாட்டு ஹம்மிங் ஜி)
    3)கேஸ்கட்டை மறந்தாலும் சூட்கேஸ் கட்டை மறக்கமாட்டேன் அம்பி!
    4)டாலர் மணம், டார்லிங் பிணம் அப்படித்தானே?
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. 1.இளமையில் கல் ...லை தேட வைத்து விட்டாரே :)
      2.ஆராரோ ,கொலைவெறி பிடித்தவர் யாராரோ :)
      3.சூட் கேஸை மறந்தால் சூடு வாங்கிறது யாரு :)
      4.பெற்றவங்க பிணத்தைக் கூட வந்து பார்க்க விரும்பாத டாலர் மகன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் :)

      Delete
  2. 1) பாவம்ங்க! இன்னும் சிலபேருக்கு அந்த குணம் 20 வயசிலேயே கூட இருக்கே...

    2) ஹா...ஹா...ஹா..

    3) சபாஷ்... சரியான போட்டி! ஹா...ஹா...ஹா...

    4) வாழட்டும் விடுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. 1.இந்த காலத்தில் எல்லாமே அட்வான்ஸ் தான் போலிருக்கு :)
      2.கொலை வெறிக்குமா:)
      3.ஜெயிக்கப் போறது யாரு :)
      4.காசு பணம் இருந்தென்ன ? உறவுகளை எறிந்த பின் :)

      Delete
  3. அனைத்தும் அருமை. கேஸ்கட் அதிக நகைச்சுவையினை ஊட்டியது.

    ReplyDelete
    Replies
    1. பிஸ்கட்டைப் போல் இந்த கேஸ்கட்டும் சுவை தானா :)

      Delete
  4. நன்றியுடன் இருக்கும் குணம்...?

    ReplyDelete
    Replies
    1. அதைப் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலியே :)

      Delete
  5. அருமை
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நாய்குணமுமா அருமை :)

      Delete
  6. ஒங்க கண்ண மொதல்ல டெஸ்ட் பண்ணுங்க... என்னிட்ட பேசுறதா நெனச்சுக்கிட்டு கண்டகண்ட நாய்ட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க...!

    மாயக்கண்ணன் ஒரு கை பார்க்காமல் விடமாட்டான்...!

    கேஸ் ’கட்’ ஆயிடுமோன்னு ஒரே கவலையாயிருக்கு...! நீ வேற கிரிமினல் லாயரா ?-ன்னு கேட்டு ஞாபகப்படுத்துறாய்...?

    USA பொருளாதாரத்தில்- தாரத்தில் ஆட்டம் கண்டாலும் ... நம்ம பில்டிங் ஸ்ட்ராங்ன்னு தெரியுது... நம்ம பேஸ்மட்டம்தான்... மட்டம்தான்னு தெரியுது...!
    நன்றி.
    த.ம.6.

    ReplyDelete
    Replies
    1. நான்தான் பேசுறேன்னா,நீ எதுக்கு அமைதியா கேட்டுகிட்டே இருக்கே ,உனக்கும் பிடிக்கப் போய் தானே:)

      தெய்வக்குற்றம் ஆகிவிடுமா :)

      ஆயுசு பூரா ஒரே கேஸ்தானா :)

      USA விஷயத்தில் 'usa'araaதான் இருக்கணும் :)

      Delete
  7. தினமும் சலிக்காமல் ஜோக் எழுதவும் நல்ல கற்பனை வளம் வேண்டும். அது தங்களுக்கு நிறைய இருக்கிறது. ஜோக்குகள் அனைத்தும் அருமை.

    த ம 10

    ReplyDelete
    Replies
    1. சலிக்கவில்லை என்றாலும் தவறில்லைதானே :)

      Delete
  8. உங்களைப் பார்த்தா அப்ப்டிச் சொன்னார்கள். வக்கீலும் மனைவியும் ஏட்டிக்குப் போட்டி.

    ReplyDelete
    Replies
    1. எந்த நாய்க்கு என்னைப் பார்த்து கேட்க துணிச்சல் இருக்கு :)

      போட்டி இருந்தால்தானே விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது :)

      Delete
  9. கேஸ் கட்டு ஜோக் கலக்கல்! மற்றவையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இத்தனை வருஷமா நடக்கிற கேஸுக்கு எதுக்கு கட்டுன்னு நினைச்சுட்டாரோ :)

      Delete
  10. 01. இதுதான் செருப்பாலே அடிச்சுட்டு வெல்லம் கொடுக்குறது.
    02. நல்ல வேளை ஆண்டவன் ஒரு கையாவது கொடுத்தானே...
    03. ஜாடிக்கேற்ற மூடிதான்.
    04. 100க்கு100 உண்மையே...

    ReplyDelete
    Replies
    1. 1.போட்டு வாங்குறது என்றால் வேறா :)
      2.நல்ல வேளைதான் , ,இன்னொரு கையும் இருந்தால் :)
      3.குக்கர் மூடிக்கேற்ற விசிலும்கூட:)
      4.டாலரும் ,செண்ட்டும் கையில் கிடைத்தால் போதும் :)

      Delete
  11. வணக்கம்
    ஜி
    நாய்க்கு என்றால் அன்புள்ள குணம் கண்டவுடன் கை அசைப்பார்கள்... மற்றவைகளை இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி.த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள குணம் ஐந்தாண்டுக்கு முன்னாலே வந்து விட்டதென்று வருந்துவது எந்த குணம் ?:)

      Delete
  12. நல்ல காலம் 60துல வர பேய்குணம் வராம இருந்துச்சே!! அப்போ யங்க் தானே ஜி!!! அட உங்களைத்தாங்க!!!ஹ்ஹஹ்ஹ ஆமாம் பின்ன இப்படி ஜோக்கடிச்சுக்கிட்டே இருந்தா வயதாவது ஒன்றாவது...எப்போதுமே மார்கண்டேயந்தான்....

    கேஸ்கட் சூப்ப்பர்...

    ReplyDelete
    Replies
    1. மார்கண்டேயன் மர்கயா ன்னு என்று சொல்லும் காலம் வரவே வராதா :)

      தரமான தயாரிப்பு ஆச்சே :)

      Delete