27 May 2015

பெண்டாட்டிமேலே இம்புட்டு பாசமா ?

---------------------------------------------------------------------------------

மனைவி ஒல்லிபிச்சான் ஆனதால் .... :)
           ''நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
           ''அந்த பாத்திரத்திலும்  எதுவும் ஒட்டலே ,அதில் சமைக்கிற எதுவும்  உடம்பிலேயும் ஒட்டலையே!''

கணவன் மேலே இந்த மரியாதையாவது இருக்கே !

         ''கடல்லே  பாலம் கட்ட பயன்படுத்துற  சிமெண்ட்டை வைத்துதான் ,  உங்க கணவரோட கல்லறையையும்  கட்டணும்னு சொல்றீங்களே ,ஏன் ?''
          ''கல்லறைக் காயிறதுக்கு முன்னாடியே அடுத்த கல்யாணத்தைப் பண்ணிகிட்டானு யாரும் சொல்லக் கூடாதுன்னுதான் !''


 பெண்டாட்டிமேலே இம்புட்டு பாசமா ?

            ''  மாப்பிள்ளை பைக்கில் எழுதி இருக்கிறதைப் பார்த்தா ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதா ,எப்படி ?''
          ''புது பைக் என்னோடது ,புது  மனைவியே எனக்கு மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''


வண்டிக்கு அவசியம் ஸ்டெப்னி ,நமக்கல்ல !

ஸ்டெப்னி ...
டிரைவர்கள் வண்டியில் இருக்கிறதாவென செக் செய்ய மறப்பது ...
அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல்  செட் செய்துக் கொள்வது !

  1. Jeevalingam KasirajalingamTue May 27, 03:57:00 a.m.
    தங்கள் கல்லறை வரிகள்
    கொஞ்சம்
    சிந்திக்க வைக்கிறதே!




    1. என்னது ,என் கல்லறை வரிகளா ?

      1. வலிப் போக்கன்Tue May 27, 09:50:00 p.m.
        காதலுக்கும் கல்லறை கட்டிட வேண்டியதுதான்.




        1. சினிமாவில் காதலை வைத்து கல்லா கட்டிக்கிட்டு இருக்காங்க ,நீங்க என்னடான்னா ...

          1. KILLERGEE DevakottaiTue May 27, 11:48:00 a.m.
            அப்படீனா சங்கர் சிமெண்ட்தான் வாங்கனும்.




            1. கில்லர்ஜி, நீங்க CID சங்கரா இருப்பீங்க போலிருக்கே ,துப்பு துலக்கி சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே !

30 comments:


  1. 01. அவளாலே முடிஞ்சது அவ்வளவுதான்,
    02. சொல்றதைப் பார்த்தால் மரணத்தைக் குறித்து நம்ம CID சங்கர்தான் துப்பு துலக்கனும்,
    03. அடுத்து மாமனாருக்கிட்டே கார் வாங்க பிளான் போடுறானோ...
    04. ரெண்டுக்கும் டீலிங் உண்டோ...

    ReplyDelete
  2. கணவனும் அடுத்த ஜோக்கில் மனைவியும் மாறி மாறி பாசம் வைத்திருப்பதைப் பார்த்தால் கண்ணு பட்டுவிடும் போல இருக்கிறதே.

    ReplyDelete
  3. 1 அம்புட்டு...பாசம் போல..

    3 தனித்தனியா சொல்லாம நாசுக்கா சொல்லிட்டார்...எல்லார்க்கும்...

    ReplyDelete
  4. 1) பாத்திரத்தில் எதுவும் ஒட்டல!
    அதானலே சாப்பிடு ஓட்டல்ல
    2) கடல்சிமெண்டு உப்பு கரிக்குமே!
    கல்லறையை சீக்கிரமாய் அரிச்சுடுமே!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. 1. அதானே... சரியாத்தான் சொல்றாங்க போல! எங்கள் ப்ளாக்கில் இருமுச் சத்துக்கு இரும்பைப் போட்டு சமைப்பது பற்றிச் சொல்லி இருப்பதைப் போட்டிருக்கோம் பாருங்க!

    2. ஆஹா.... என்ன அறிவு, என்ன அறிவு! என்ன பாசம், என்ன பாசம்!

    3. ஹா...ஹா...ஹா.. இந்த அணியின் பெயரென்ன?

    4. ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  6. மனைவிக்கு கனவன் மேலே இருக்கம் மெச்ச தகுந்த மரியாதைக்கு ஒரு அவார்டு கொடுக்கலாம்...!!

    ReplyDelete
  7. மனைவிக்கு கனவன் மேலே இருக்கம் மெச்ச தகுந்த மரியாதைக்கு ஒரு அவார்டு கொடுக்கலாம்...!!

    ReplyDelete
  8. நாளும் தவறாது இரசிக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  9. மனைவி ஒல்லிப்பிச்சான் ஆனதால்.... அப்ப கணவர்? மனைவி சொல்கிறாரா கணவன் சொல்கிறாரா. மனைவி அத்தனை சீக்கிரத்தில் மறுமணம் செய்கிறாரா?ஆஹா எம்புட்டு உரிமை.பைக்கின் மேல்....

    ReplyDelete
  10. மனைவி காத்திருக்காளா கல்லறை காய இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல சகோ...இருந்தாலும் ரசித்தேன் நன்றி.

    ReplyDelete
  11. வணக்கம்
    ஜி
    பாசம் என்றால் இதுதான் பாசம்.... மற்றவைகளை இரசித்தேன்...த.ம 10
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்.
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. கணவன் பழமொழி ரசிக்க முடியும் என்றால், இதுவும் ஓகே,,,,,,
    அனைத்தும் அருமை. நன்றி.

    ReplyDelete
  13. KILLERGEE >>
    1.நம்மாளுக்கு திருப்தி வேணுமே :)
    2.வால்ட்டர் வெற்றிவேலைக் கூட சேர்த்துக்குங்க :)
    3.மனைவியும் காரும் மாமனார் தந்த பரிசுன்னு அப்போ சொல்வானா :)
    4.நோ டீல் என்றால் அமையாதே :)

    ReplyDelete
  14. S.P. Senthil Kumar ஜி >>
    இருந்தாலும் இம்புட்டு பாசம் ஆகாது ,அப்படித்தானே :)

    ReplyDelete
  15. R.Umayal Gayathri ஜி >>
    இப்படியா மாமனாரை அசிங்கப் படுத்துவது :)

    ReplyDelete
  16. yathavan nambi ஜி >>
    ஓட்டல் சாப்பாடு இதைவிட மோசம் ஒட்டவே ஒட்டாது:)
    கடல் சிமெண்டின் குணம் ,தண்ணீரில் கூட கரையாமல் போட்ட நொடியிலேயே இறுகி விடுவதுதான் ,அதன் அந்த அம்மாவுக்கு பிடிச்சிருக்கு :)

    ReplyDelete
  17. திண்டுக்கல் தனபாலன் ஜி >>
    பாசம் ?எல்லாம் வெளி வேஷம் :)

    ReplyDelete
  18. ஸ்ரீராம் ஜி >>
    1.இரும்பு மீனை நானும் ருசித்தேன் :)
    2.சிமெண்ட் வாங்கி தயாராய் இருக்கும் போலிருக்கே :)
    3.கையில் வரதட்சனை வாங்காதோர் அணியாய் இருக்குமோ :)
    4.ஓட்டுனர் ஸ்டெப்னி ,பொருத்தம் தானே :)

    ReplyDelete
  19. கரந்தை ஜெயக்குமார்ஜி >>
    கல்லறைக் காய விசிறிக் கொண்டிருந்த மனைவியைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும்தானே :)

    ReplyDelete
  20. வலிப்போக்கன் கணேசன் ஜி >.>
    கல்லறை வென்ற காரிகை என்று விருது கொடுக்கலாமா :)

    ReplyDelete
  21. வலிப்போக்கன் கணேசன் ஜி >.>
    விருதின் தலைப்புக்கு உங்களுக்கு ஆட்சேபம் ஏதும் இல்லையே:)

    ReplyDelete
  22. புலவர் இராமாநுசம் ji >>
    படிக்காமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கிறேன் :)

    ReplyDelete
  23. G.M Balasubramaniam ஜி >>
    உடம்பு யாருக்கு மெலிஞ்சா யார் கவலைப் படுவாங்களோ அவங்க சொல்றது இது :)
    நல்ல எண்ணம்தானே :)
    பைக் மேலான பைத்தியம் தெளிய மருந்து மனைவிகிட்டேதான் இருக்கு :)

    ReplyDelete
  24. Geetha ஜி >>
    கரந்தையாருக்கு கூறிய மறுமொழியைப் பார்த்தீங்களா :)

    ReplyDelete
  25. ரூபன் ஜி >>
    பாசத்தை நம்பி மோசம் போயிட்டாரோ :)
    உங்களின் 'மனிதம் இழந்த 'கவிதையை வாசித்தேன் ,துயரப் பட்டேன் !

    ReplyDelete
  26. mageswari balachandran ஜி >>
    இதிலுமா கண்டிஷன் o k :)

    ReplyDelete
  27. கல்லறைக் காயிறதுக்கு முன்னாடியே - அடுத்த
    கல்யாணத்தைப் பண்ணிகிட்டா
    என்ன தப்பு - இதில்
    இருபாலாருமே ஏட்டிக்குப் போட்டி!

    என்னது, என் கல்லறை வரிகளா?
    இல்லை, ஐயா!
    தாங்கள் எழுதியுள்ள
    கல்லறை உடன் தொடர்புடைய வரிகள்!

    ReplyDelete
  28. யாழ் பாவாணன் ஜி >>
    அது சரி ,நமக்கு எதுக்கு பொல்லாப்பு ?இருபாலருக்கும் போட்டி என்றே வைச்சுக்குவோம்:)

    சும்மா ஜாலிக்குதான் ,நெருப்பென்றால் எனக்கு சுடப் போவதில்லையே :)

    ReplyDelete