29 May 2015

மங்கை , மாலுமிகளை கரை ஏற்றுவாளா :)

---------------------------------------------------------------------------------

  யார் சொன்னது 'மெல்லத் ' தமிழ் இனி சாகுமென்று :)                      
                       ''வாழைப்பழம் அழுகி, கொழகொழத்து, கீழே விழுந்தது ' ன்னு சொன்னதுக்கா ,போலீஸ் உன்னைப் பிடிச்சிகிட்டாங்க ?''
            ''ழகரத்தை  சரியா உச்சரித்ததால்  குடிச்சு இருப்பேன்னு சந்தேகப் பட்டுட்டாங்க!''



இந்த 'கோச் 'சடையான் ' உலக கோப்பை வெல்வாரா ?

          ''உங்க கபடி 'கோச் 'சை ரசினி ரசிகர்னு எப்படி சொல்றே ?''
            ''சடையான் என்கிற தன் பெயருக்கு முன்னாலே 'கோச்' என்று 
போட்டுக்க ஆரம்பித்து விட்டாரே !''


மாணவனின் பதிலால் ஆசிரியர் மயக்கமாகி இருப்பாரா !

''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
''அதிலேயே எழுதி இருக்கும் !''

மங்கை மாலுமிகளை கரை ஏற்றுவாளா ?

என்னவள் ...
கலங்கரை விளக்கின் அருகில் நின்று 
கடலழகில் கண்களை இமைக்க மறந்து 
வியந்து நின்றாள் !
தூரத்து கப்பல் மாலுமிகளும் 
வியந்து நின்றார்கள் ...
இருஒளிக்கற்றைகள் எப்படி வரும் என்று ?

  1. அ. பாண்டியன்Thu May 29, 12:22:00 a.m.
    காலத்திற்கேற்ற முதல் நகைச்சுவை செம கலக்கல். கோச்சடையான் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமும் இருக்கா! மூன்றாவது காமெடி சொல்வீங்கனு பார்த்தா கவிதை சொல்லி இருக்கீங்களே! கம்பனும் செல்லியும் உங்கள் தவம் கிடக்க வேணும் போல!! ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.




    1. அப்பப்ப இப்படியும் டைம்லி விட் தேவைப் படுகிறதே !
      நல்ல வெயில் நேரத்திலே கம்பன் செல்லி என்று பெரிய ஐஸை தலையில் வைக்கிறீர்களே ,கடுமையா ஜல்ப் பிடிச்சிடும் போலிருக்கே !

  1. KILLERGEE DevakottaiThu May 29, 10:50:00 p.m.
    நல்லவேளை சடையான் ''சாக்கு'' வியாபாரம் செய்யலே இல்லைனா ''சாக்கடையான்'' னு சொல்லியிருப்பீங்க, பகவான்ஜீ குசும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு உங்களுக்கு...




    1. நாலு பேர்கிட்டே கேட்டுப் பார்ப்போம் ,யாருக்கு குசும்பு அதிகமென்று !

21 comments:

  1. ''வாழைப்பழம் அழுகி, கொழகொழத்து, கீழே விழுந்தது ' ன்னு சொன்னதுக்கா ,போலீஸ் உன்னைப் பிடிச்சிகிட்டாங்க ?''

    "வாலப் பலம் அலுகி,
    கொல கொலத்து,
    கீலே விலுந்தது" சொன்னால்!
    தமிழை "ழ"கர சிறப்பை கொலை செய்த குற்றத்திற்காக
    போலீஸார் எப்.ஐ. ஆரே போடலாம் தப்பில்லை பகவான் ஜி!
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. வணக்கம்
    ஜி
    ஆகா...ஆகா...எம்மொழிக்கு தனிச்சிறப்பு...... என்ன அழகு...... மற்றவைகனை இரசித்தேன் பகிர்வுக்குநன்றி த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. 4. இது ரொம்ப ஓவர்!

    1. வாழைப்பழத்துக்கு வந்த சோதனை!

    3. ஆஹா.... சூப்பர்! அது இருக்க வேண்டிய இடத்துல பத்திரமா இருக்கும் போய்வான்னு அனுப்பிட வேண்டியதுதான்!

    2. போச்! போச்! விளம்பர மோகம்!

    ReplyDelete
  4. தமிழாசிரியர் கவனத்திற்கு

    ழகரம் சரியாக உச்சரிக்க வராத மாணவருக்கு சிறப்புப் பயிற்சி ஒன்றை பாஸ் முன்மொழிந்திருக்கிறார். கேட்டுப் பயன்பெறுங்கள்:)))))

    ReplyDelete
  5. நகைபணி தொடர
    தம +

    ReplyDelete
  6. கோச்சடையான், சாக்கடையான் இரண்டுமே அற்புதமான குசும்பு! இதில் யார் பெரிய குசும்பர் என்று நாங்கள் எப்படி சொல்வது?
    த ம 8

    ReplyDelete
  7. அன்புள்ள அய்யா,

    அருமை. அருமை.

    நான் இரு சக்கர வாகனத்தில் இரயில்வே மேம்பாலத்தில் செல்கின்ற பொழுது விபத்து ஏற்பட்டு இடது கை இரண்டு விரல்களும், இடது
    கால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன்.

    -மிக்க நன்றி.

    ReplyDelete
  8. அய்யா தாங்கள் சொன்ன எடுத்துக்காட்டை நான் பயிற்சிக்கு கொடுக்கலாம் என்று உள்ளேன்.அனைத்தும் அருமை.

    ReplyDelete
  9. 'மெல்லத்' தமிழ் இனி சாகுமென்று
    எழுத்துக் கொலைகள் செய்யலாமோ

    ReplyDelete
  10. யாதவன் நம்பி ஜி >>
    இந்த தமிழ் கொலைக்கு FIR போட்டா ,நாட்டிலே பாதிப் பேர் ஜெயிலிலேதான் இருக்க வேண்டி வரும் :)

    ReplyDelete
  11. ரூபன் ஜி >>
    தனிச் சிறப்பு என்பதால் தான் ,தண்ணி அடிச்சவன் எல்லாம் ழா ழா என்று உளறுகிறானோ:)

    ReplyDelete
  12. ஸ்ரீராம் ஜி >>

    4.காதல் கவிதையில் ஏது ஓவர் ,இன்னிங்ஸ் எல்லாம் :)

    1.சரியா பேசினா குற்றமாய்யா:)

    3.நீங்க சொல்ற பதில்தான் ,பிராக்டிகல் திங்கிங் :)

    2.காலத்துக்கு ஏற்ற மாதிரி கோச் நல்லாவே கபடி ஆடுறாரே :)

    ReplyDelete
  13. திண்டுக்கல் தனபாலன் ஜி >>
    குடிகாரன் வாயை ஊதச் சொன்னால் கெட்ட நாற்றம் வருதுன்னு போலீசார் இப்படி செக் பண்றாங்களோ :)

    ReplyDelete
  14. செந்தில் குமார் ஜி >>
    கோச்சடை தண்ணீரைக் குடிப்பதால் நீங்கள் கோச்சடையான் என்றால் ,சாக்கடைக் கலந்த தண்ணீரைக் குடிக்கும் சென்னைவாசிகள் நாங்கள் சாக்கடையானா என்று முதல் குரல் எழுப்பிய நண்பர் சைதை அஜீஸ்தான் பெரிய குசும்பர் என்ற பட்டத்திற்கு தகுதியானவர் :)

    ReplyDelete
  15. மணவை ஜேம்ஸ் ஜி >>.
    உங்களுக்கு , விபத்தினால் ஏற்பட்டு இருக்கும் வலியை அறிந்து வேதனைப் பட்டேன் ,நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு வலையுலகம் பக்கம் வாருங்கள் !
    இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டு கருத்தைச் சொன்ன உங்களுக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேனோ ?
    இதயம் நெகிழும் என் நன்றி !

    ReplyDelete
  16. அது உங்கள் இருவருக்கும் நிறையவே இருக்கிறது ஐயா!

    ReplyDelete
  17. ஆறுமுகம் அய்யாசாமி ஜி >>
    அதிகம் விஞ்சி இருப்பது யாரிடத்தில் என்று பட்டி மன்றம் நடத்திப் பார்த்திடலாம் :)

    ReplyDelete
  18. மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி >>
    இது ,முன்பே தமிழ் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தது தான் :)

    ReplyDelete
  19. யாழ் பாவாணன் ஜி >>
    மெல்ல தமிழ் என்றால் மெல்லும் படியாய் ஆகிவிடாதா :)

    ReplyDelete