----------------------------------------------------------------
பஸ் மெதுவா போகும்னு இப்படியும் சொல்லலாமா :)
''டிரைவர் சார் ,மூணு மணி நேரத்திலே போகவேண்டிய ஊருக்கு ,ஐந்து மணி நேரம் ஆகுதே,ஏன் ?''
மனைவி தந்த கசப்பான அனுபவம் ?
''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது ஞாபகப் படுத்தக்கூடாதா?காலையில் ,வாசலில் தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே .தேவையா எனக்கு ?''
மகிழ்ச்சி தந்த காதல் துக்கமாகுமோ ?
காத்திருப்பது ...
காதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
கல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று
ஏங்கத்தொடங்கும் போது ...
காத்திருத்தலின் வலி புரிகிறது !
- துரை செல்வராஜூSat May 17, 08:43:00 a.m.1. அட.. மூஞ்சியிலயும் தண்ணி தெளிச்சு கோலம் போடுவாங்களா!?..!..
2. கிளி படிக்கிறதுக்கே இவ்வளவு கூட்டமா!..3. இதுக்குப் பிறகும் கூட கேட்கமாட்டாங்களே!..
|
|
Tweet |
அப்பாடா முதன் முதல்ல வந்தாச்சு..
ReplyDeleteத ம 1
நான் அசந்து தூங்கிற நேரத்திலும் ,நீங்க அசராம வந்து ,முதல் இடம் பிடித்ததற்கு பாராட்டுக்கள்:)
Deleteபலே டைம் பாஸ் ஜோக்..
ReplyDeleteடைம் பாஸ்னா வேறெதையோ கற்பனை பண்ணிகிட்டார் போலிருக்கு :)
Delete1. அடப்பாவி! எப்படி எல்லாம் சமாளிக்கிறாங்கப்பு!
ReplyDelete2. ஏன்? திண்ணைல படுக்க வச்சிட்டாங்களா!
3. ஹா...ஹா...ஹா..
4. ச்சீ... பாவம்!
1 வேகமா போக துப்பில்லே,பேச்சு மட்டும் ஓவியம் :)
Delete2.பெட் ரூமில் இருந்தாலும் பேட் மார்னிங் தான் :)
3.ரொம்ப படிச்ச கிளி :)
4.காதலில் எதிர்காலம் தெரிவதில்லை :)
மதுரைக்கு வரும் போது அந்தக் கிளியைப் பார்க்கணும் ஜி...~!
ReplyDeleteஎப்போ வர்றீங்க , பாடும் கிளியைக் கூட காட்டுறேன் :)
Deleteகோலமிடுவது நல்ல பழக்கம் தானே சார்
ReplyDeleteஇப்போதான் எனக்கு சந்தேகம் வருது :)
Deleteஅனைத்தும் அருமை. கிளி நகைச்சுவையை அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteசொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளை என்பார்கள் ,இது வாசிக்கவும் செய்யுதே :)
Deleteநீங்க பாஸ்ன்னு ஒத்துக்கிறேன் பாஸ்...! ஆமா... எத்தனாங்கிளாஸ் பாஸ்...ஜெனிஒன்னா பாஸ் பண்ணுனீங்களான்னு செக் பண்ணணும்...!
ReplyDeleteநானே பயந்தே போயிட்டேன்... மாசப் பிறப்புன்னு சொல்லவும்... நீ மாசமாவே இல்லயே... எப்படி பிறப்புன்னு...?
‘கிளிப் பேச்சு கேட்கவா...’
‘நிழல் நிஜமாகிறது...’
த.ம. 4.
மூணு வருஷ படிப்பிலே பாஸ் ,பிரி கேஜி,எல்கேஜி, யு கேஜி:)
Deleteவருஷம் பூரா வெளிநாட்டிலேயே நீங்க இருந்தா ,பயந்து போகத்தான் வேண்டியிருக்கும் :)
இதென்ன கேள்வி ,தாராளமா கேளுங்க :)
நிஜம் சுடும் என்பது தெரிகிறது :)
பலே டைம் பாஸ் ஜோக்..! நன்று!
ReplyDeleteடைம் பாஸ் என்றால் மனதுக்கு இனிமை தர வேண்டாமா :)
Deleteகோலம் மட்டும் போட்டாங்களே என்று சந்தோசப்ட்டுக்கொள்ள வேண்டும்.
ReplyDeleteகாத்து இருப்பது காதலில் மட்டும் தான்.
பின்னர் இல்லை. சிரிப்பு என்றாலும் உண்மை இது தான் இன்றைய நிலையில்.
கோலம் எங்கே போட்டார்கள் ,அதான் அலங்கோலமாப் போச்சே :)
Deleteகாத்துக் கிடந்த காலம் போய் காய்ந்து கிடக்கும் காலம் இதுவோ :)
மலரும் நினைவுகள் அருமை!..
ReplyDeleteஅதுசரி.. இன்னுமா கோலம் போடலை!..
அவ்வ்வ்வ்வ்வ் ,என்னது மலரும் நினைவுகளா :)
Deleteகோலம் போட்டதெல்லாம் அந்தக் காலம் ,இப்போ தரையிலே ஓட்டுற ஸ்டிக்கர் ரெடி :)
டயம் பாஸ் ரைடர்...அப்புறம் அது டயம் போர் ரைடராகிடப்போகுது....ஹிஹிஹி...
ReplyDeleteநல்ல புருஷன், நல்ல பொண்டாட்டி...
எத்தனை தடவை கேட்டுக்குட்டே இருக்கிறதுன்னு....கொஞ்ச நேரம் வெளியில ஜாலியாயிருக்க ஆசைப்பட்டுடுத்தோ..?
என்ன செய்றது...எல்லாம் விதி....
தம +1
பஸ் பயணம் என்றாலே போர்தானே :)
Delete1)ஆமையின் அட்டகாச வேகப் பேருந்து
ReplyDelete2) மூஞ்சில் புள்ளி வைத்து கோலம் போடும் புள்ளி மான்களை
வேட்டையாடி விளையாட வெடி அட்வைஸ் சொல்லுங்களேன்!
3) சொன்னதை மட்டுமல்ல, உள்ளதையும் சொல்லுவோம் இல்ல - கிளி!
த ம 9
நட்புடன்,
புதுவை வேலு
1.அப்படியும் சொல்லலாமே :)
Delete2.வெடி சிரிப்புதான் நமக்கு வரும் :)
3.கிளி சொல்லைக் கேட்டு மனதில் கிலி பிடிக்காட்டி சரி :)
1. ''டைம் பாஸ் ரைடர்னு எழுதி
ReplyDelete2. நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே ...
3. கோலம்னு நீங்க சொல்றது எதை ?எச்சி துப்புறதையா?
இன்னும் பல ரசித்தேன்...சகோதரா ...
சமீபத்தில் 'கவியூற்று' பட்டம் பெற்று இருக்கும் கோவைக் கவி அவர்களே ,
Deleteஉங்களின் ரசனைக்கும் கருத்துரைக்கும் நன்றி :)
01. சரியாத்தானே எழுதியிருக்கு படிக்காமல் ஏன் ? ஏறினான்.
ReplyDelete02. தண்ணி மூஞ்சியிலேயுமா ? தெளிப்பாங்க ?
03. அடடே விஞ்ஞானம் வளர்ந்துருச்சே...
04. இதுக்குத்தான் காதலிக்கும்போது கூலிங்க்ளாஸ் போடக்கூடாதுனு பெரியவங்க சொல்றாங்களோ.... ?
1.அர்த்தம் தெரியாம ஏறிட்டார் ,விடுங்க :)
Delete2.அனுபவம் இல்லாத மாதிரி கேட்கிறீங்களே :)
3.கம்ப்யூட்டர் கிளியா இருக்குமோ :)
4.ஏன் அது எதிர்காலத்தை மறைக்குதா :)
டைம் பாஸ் ரைடர்னு பஸ்ஸில எழுதி இருக்கா.? யாருக்கு டைம் பாஸ்.?முகத்திலே தண்ணி அடிச்சுக் கோலம் போடாமல் இருந்தால் சரி காதலில் காத்திருப்பது கணவனா மனைவியா?
ReplyDeleteபஸ் பயணிக்கு தான் டைம்பாசாகும்,எப்படி போனாலும் கண்டக்டர் ,டிரைவருக்கு காசாகிப் போவுதே :)
Deleteஅதனால்தான் கணவன் முன் எச்சரிக்கையாய் சொல்லலே :)
காதலின்போது காத்திருப்பது காதலன் ,காதலி ஆச்சே :)
டயம் பாஸ் ரைடரா?
ReplyDeleteமூஞ்சீல தண்ணி..?
அனுபவப் பாடங்கள்
அருமை
அவ்வ்வ்வ் ,அனுபவப் பாடங்களா :)
Deletethama +
ReplyDeleteநன்றி :)
Deleteடைம் பாஸ் ரைடர்! சூப்பர் மற்றவையும் சிறப்பே! நன்றி!
ReplyDeleteரசித்ததற்கு நன்றி :)
Deleteடைம் பாஸ் ஹஹாஹஹ்
ReplyDeleteநல்ல்ல ஜோடிங்கப்பாஅ ...ஹஹஹ்
அனைத்தும் ரசித்தோம்
அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி :)
Deleteகாதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
ReplyDeleteகல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று
ஏங்கத்தொடங்கும் போது ...
இது தாங்க
நம்ம வீட்டுச் சிக்கல்
"ஒரு நாளும் வராதவங்க
ஒண்ணாம்தேதி வருவாங்களே
அன்று தான்
எனக்கு சம்பள நாள்!" என்று
மூ.மேத்தா எழுதிய கவிதை
நினைவுக்கு வர வைச்சிட்டியளே!
அருமை ,அருமை ,மூ.மே வின் கவிதை :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் .. பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் ஜி :)
Delete