8 May 2015

முதல் இரவிலேயே கணவனை புரிந்து கொண்ட மனைவி :)

-------------------------------------------------------------------------

தூக்கத்தைக் கெடுத்ததும் ,கொடுத்ததும் பணம்தான் :)
          ''ஏகப்பட்ட பேருக்கு கடனைக் கொடுத்திட்டு ,தூக்கமே வரலேன்னு புலம்பிகிட்டே இருந்தீங்களே ,இப்போ எப்படி ?''
            ''நிம்மதியா இருக்கேன் ,கடன் கொடுக்கிறதை நிறுத்திட்டு ,வாங்க ஆரம்பித்து விட்டேனே !''

முதல் இரவிலேயே கணவனை புரிந்து கொண்ட மனைவி !

          ''டார்லிங் ,மேனேஜருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ?''
       '' உங்க ஆபீஸ் நண்பர்கள்  கொடுத்த பரிசுப் பொருளிலே நாலைந்து ஜால்ரா இருக்கே  !''



கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா ?

          ''தலைவர் 'வைப்பு'க்கு வேலை வாங்கிக் 

கொடுத்து விட்டாராமே ,எந்த ஆபீசிலே ?''

            ''வைப்பு நிதி ஆபீசிலேதான் !''


ஆணுக்கு வளைகாப்பு 'கை விலங்கு'தான் !

கள்ள உறவில்  உருவாகும் பிள்ளைப் பேறை 

தொல்லைப்பேறென நினைக்கும் பெண்கள் ...

 வளைகாப்பு இன்றியே பெற்ற 

பச்சிளம் குழந்தைகளை வீசியெறியும் அவலம் !

தொட்டில் குழந்தை அப்பனுக்கும் ...

காவல் துறை 'வளைகாப்பு 'செய்தால் அல்லவா அவலம் தீரும் ?



  1. ஆபீஸ் நண்பர்கள்
    சிம்பாலிக்காக காட்டிக் கொடுத்துவிட்டார்களா ?
    1.  Bagawanjee KAThu May 08, 06:40:00 p.m
    2. அதில் இளம் மனைவிக்கு ரொம்பவே சந்தோசம் ...ஏற்கனவே 
    3. ஜால்ரா அடிக்கும் அனுபவம் உள்ள கணவன் அமைந்ததில் !

      1.  ஸ்ரீராம்.Thu May 08, 11:41:00 a.m.
    4.  3 வது விழிப்புணர்வுக் கவிதை.
    5. அவர்கள்  கதையே ,விழி புணர்வில் ஆரம்பித்து கந்தலாகிப் போனதாச்சே !

26 comments:

  1. பாதி ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மீதியையும் கண்டு பிடித்து ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  2. கண்டுபிடித்து விட்டேன். மொபைலில் முழுவதும் படித்து த.ம. வாக்கும் அளித்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. mobile version இருப்பதைக் கவனித்து விட்டீர்களோ ? மகிழ்ச்சி ,கண்டு பிடித்ததற்கு :)

      Delete
  3. அனைத்துமே நன்று. இருந்தாலும், கடன் காரர் நகைச்சுவை மனதில் அதிகம் பதிந்தது.

    ReplyDelete
    Replies
    1. கடன் பட்டார் நெஞ்சம் போல் என்கிற கம்பனின் வரிகள் நினைவுக்கு வந்து இருக்கணுமே :)

      Delete
  4. பணம் செய்யும் மாயை தான் எத்தனை....!

    ReplyDelete
    Replies
    1. கடன் வாங்கிய பணம்தான் என்றாலும் ...:)

      Delete
  5. அனைத்தும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. கடன் வாங்கி சந்தோசப் படுவதுமா :)

      Delete
  6. கடன் கொடுப்பது எளிதா வாங்குவது எளிதா?ஜால்ராக் கணவன் மனைவிக்கும் ஜால்ரா அடிக்கலாம்தானே.

    ReplyDelete
    Replies
    1. கடன் கொடுக்க பணம் வேணும் ,கடன் வாங்க மனம் இருந்தால் போதுமே :)
      அதுதான் இளம் மனைவியின் எதிர்ப் பார்ப்பும் கூட :)

      Delete
  7. 01. வாங்கிடுவானா ?
    02. நல்ல நண்பர்கள்
    03. பொருத்தமான இடம்
    04. ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. 1.கொடுத்த கடனைத்தானே :)
      2.ஜால்ராவுக்கு ஏற்ற ஜால்ராக்கள் :)
      3..பேருக்கேற்ற பொருத்தம் 'வைப்பு ':)
      4.வளைக்காப்பு ஒண்ணும் நடக்க மாட்டேங்குதே :)

      Delete
  8. 1-கடன் கொடுக்கிறதை நிறுத்திட்டு ,வாங்க ஆரம்பித்து விட்டேனே !''
    2- பரிசுப் பொருளிலே நாலைந்து ஜால்ரா இருக்கே !
    3- '''வைப்பு'க்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டாராமே ,
    4- அப்பனுக்கும் ...காவல் துறை 'வளைகாப்பு 'செய்தால்
    5- கதையே ,விழி புணர்வில் ஆரம்பித்து கந்தலாகிப் போனதாச்சே !
    அத்தனை வரிகளும் ரசித்தேன் சகோதரா.
    மன்னியுங்கள் என் விழா முன் - பின்னெடுப்பு வேலைகள் காரணமாக
    இப்பக்கம் வர முடியவில்லை.
    வருவேன்..

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாக நடந்து இருக்கும் உங்களின் பாராட்டு விழா பதிவுகளைப் பார்த்து ரசித்தேன் ,
      இனிமேல் வேற வழியில்லை ,வந்துதான் ஆகணும் :)

      Delete
  9. கடன் கொடுக்கிறதை நிறுத்திட்டு,
    வாங்க ஆரம்பிப்பது சரி தான்...
    வாங்கியவன் மீளக் கொடுத்தால் தானே
    கைக்கு எட்டும் கண்டியளோ!

    ReplyDelete
    Replies
    1. கொடுக்கவே வேண்டாமென்றுதான் ,விட்டதை விட்ட வழியிலேயே சம்பாதிக்கத் தொடங்கி விட்டாரே :)

      Delete
  10. எல்லாமே சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பரோ சூப்பரான உங்க கருத்துக்கு நன்றி ஜி :)

      Delete
  11. நல்ல கனவன்..நல்லமனைவி அமைய... கொடுத்து வச்சிருக்கனும்...............

    ReplyDelete
    Replies
    1. யார் யாரிடம் கொடுத்து வச்சிருக்கணும் ,கணவனா ,மனைவியா :)

      Delete
  12. வணக்கம்
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கும் ,வருகைக்கும் நன்றி :)

      Delete
  13. பணம் பத்தும் செய்யுமோ....

    அனைத்தும் ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. இன்றைய உலகைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது :)

      Delete