31 May 2015

பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா ' தரகர் சொன்னது :)

 பீப்பீ கோஷ்டி வரலேன்னு BP  ஏறுதா :)              

             ''முகூர்த்தநேரம் நெருங்கிடுச்சு ,பீப்பீ    கோஷ்டியினரைக் காணாமே ,போனைப் போட்டு கேளுங்க !''

                    ''கேட்டேன் ,அவங்க ஏறிவந்த பீப்பீ   (பாயிண்ட் டு பாயிண்ட் ) பஸ் நடுவழியில் பஞ்சராகி நிற்குதாம் !''

 

பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா ' தரகர் சொன்னது !

           ''பொண்ணுக்கு  காது சரியாக் கேட்காதுன்னு ஏன் முன்னாடியே 
சொல்லலே?'' 
            ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு  சொன்னேனே!''

சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு !

         ''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
           ''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் 
பார்த்தாலும் நிலா தெரியுமே ?''


வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!

உயரம் அதிகமாக அதிகமாக  
விழுந்தால் அடியும் பலமாய்தான்  இருக்கும் ...
இதற்கு பயந்தால் ...
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !

  1. Chokkan SubramanianSat May 31, 07:15:00 a.m.
    முதல் ஜோக் அருமை. ரூம் போட்டு யோசிப்பீங்களோ !!!




    1. அந்த அளவிற்கு எல்லாம் வசதி இல்லைங்கோ :)

      1. வலிப் போக்கன்Sat May 31, 10:29:00 a.m.
        முன்னாடியே சொல்லல என்றவருக்கு புத்தி மட்டு....




        1. அதானே ,தரகர் இவ்வளவு விவரமா சொல்லியும் புரிஞ்சிக்கிற துப்பில்லையே !

      2. Chellappa YagyaswamySat May 31, 03:57:00 p.m.
        பிய்த்து உதறுகிறீர்கள் நண்பரே!




        1. அதாவது ,டார்வின் கொள்கைக்கு அடிப்படையான குரங்கு குணம் இன்னும் விடலேன்னு சொல்றீங்க ,அப்படித்தானே ?

          1. KILLERGEE DevakottaiSat May 31, 09:51:00 p.m.
            தரகர் சாமர்தியசாலிதான்...பகவான்ஜி மாதிரி...




            1. உங்களுக்கு தெரியுது ,என் வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியலையே ! 

29 comments:

  1. எண்ணெய்னு சொன்னா எள்ளா நிப்பாங்களாஜீ?

    சிரிச்சே BP ஏறுது.

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை.தலைக்கீழாய் நிற்கக்கூடும் :)

      சிரிச்சா வயிறுதான் வலிக்கும் ,இப்போ BP யும் ஏறுதா :)

      Delete
  2. ''பொண்ணுக்கு காது சரியாக் கேட்காதுன்னு ஏன் முன்னாடியே
    சொல்லலே?''
    ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு சொன்னேனே!''

    தரகருக்கு ஒரு ஓப் போடுங்க :)))))

    ReplyDelete
    Replies
    1. கீழே ,தமிழன் அழைக்கும் தளத்துக்கும் போய் ரசியுங்கள் ஜி :)

      Delete
    2. அம்பாளடியாள் அவர்களே >>
      ஓராயிரம் பொய் சொல்லி கல்யாணம் முடித்ததற்கா :)

      Delete
  3. கம்ப ரசத்தைக் குடித்து மகிழ்ந்தேன் :)

    ReplyDelete
  4. Replies
    1. பீப்பீ வராமல் பெப்பே காட்டினாலும் , தாலி கட்டித்தானே ஆகணும் :)

      Delete
  5. தரகர் சரியான பத்திசாலிதான்!

    ReplyDelete
    Replies
    1. புத்திசாலி மட்டுமா தந்திரசாலியும் கூட :)

      Delete
  6. ஜீ,,,,,,,, இன்னும் எவ்வளவு இருக்கு?
    தரகருக்கு புத்தி பத்தல,
    அனைத்தும் அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு இருக்கா ,இது வற்றாத அமுத சுரபியாச்சே :)

      தரகர் சொன்னதைப் புரிஞ்சிக்கிற அளவுக்கு அவருக்குத்தான் புத்தி பத்தலே:)

      Delete
  7. தரகர் 'சிம்பாலிக்கா” தான் சொல்லுவாரு.... வெட்ட வெளிச்சமா சொன்னா..அவரு பொழப்பு ஓடுமா...????

    ReplyDelete
    Replies
    1. அது தெரிஞ்சும் தரகரை நம்பலாமா :)

      Delete
  8. இரண்டாவது ஜோக் அருமை. மூன்றாவது ஏற்கனவே கேட்டது நான்காவது சிந்திக்க வைக்கும் அறிவுரை

    ReplyDelete
    Replies
    1. அறிவுரை எல்லாம் இல்லைங்கோ,வாழ்க்கை அனுபவம் :)

      Delete
  9. 01. அதனாலே என்ன ? செல்லுல ஊதி நேரடி ஒலிபரப்பு செய்யலாமே...
    02. காது கேட்கா விட்டால் மாமியாரு எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாமே... ?
    03. இதென்ன ? தேவகோட்டையில் நின்று பார்த்தாலும் தெரியுமே...
    04. பலமான அடி வாங்கியவன்தான் பின்நாளில் பலமானவன் ஆவான்.
    (நான் அரசியல்வாதிகளைச் சொல்ல்லீங்கோ)

    ReplyDelete
    Replies
    1. 1.அப்படியே செய்ஞ்சா போச்சு :)
      2.மாமியாருக்கு பேசவே வராதே :)
      3.நிலவில் இருந்து பார்த்தா தேவகோட்டை கில்லர்ஜி தெரிவாரா :)
      4.ஏன் அரசியல்வியாதிகள் பலமாவதில்லையா:)

      Delete
  10. நானும் குடித்தேன்.

    ReplyDelete
  11. உயரம் அதிகமானாலும்
    விழுந்தால்
    அடியும் பலமாய் இருந்தாலும்
    வாழ்க்கையில் உயர / முன்னேற
    வேண்டுமென்றால்
    முயற்சி செய்யலாம்
    முயன்று தான் பார்ப்போமே!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் சாப்பிடுற மாதிரி எடுத்துக்க வேண்டாமா :)

      Delete
  12. பீப்பி ஜோக்கும் சீனப் பெருஞ்சுவர் ஜோக்கும் அருமை!
    த ம 10

    ReplyDelete
    Replies
    1. சீனப் பெருங்சுவரில் பீப்பீ வாசித்துக் கொண்டே வருவது போல் சிந்தித்தேன் இது நிஜத்தில் சாத்தியயமாகுமா :)

      Delete
  13. 1. அவங்க ஏறிவந்த பீப்பீ (பாயிண்ட் டு பாயிண்ட் 2..எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு சொன்னேனே!''
    3. னப்பெருஞ்சுவரில் இருந்துப் பார்த்தாலும் நிலா
    4. இதற்கு பயந்தால் ...உயர்வதற்கு வாய்ப்பே...........
    இவையெல்லாம் ஒரே சிரிப்பைத் தந்தன..
    நன்றி....நன்றி......சகோதரா............


    ReplyDelete
    Replies
    1. ஒரே சிரிப்புன்னா இடைவிடாத சிரிப்புதானே :)

      Delete
  14. சிரிப்பு பஞ்சர் ஆகவில்லை..
    தம +

    ReplyDelete
    Replies
    1. இது டியூப் லெஸ் பஞ்சராக வாய்ப்பே இல்லை :)

      Delete
  15. பீபீ சீனப் பெருஞ்சுவர் ஹஹஹஹஹஹ ரகம்...அனைத்தையும் ரசித்தாலும்...

    மற்றவற்றிற்கு பின்னர் வருகின்றோம்....இல்லன்னா மத்த பதிவர்களின் பதிவுகள் பல வெயிட்டிங்க் லிஸ்ட்ல...அதான் ஜி....எல்லாருக்கும் ஒரு வணக்கம் வைச்சுட்டு வர்ரோம்.....

    ReplyDelete
    Replies
    1. பெருஞ்சுவரை தாண்டியாச்சு ,இனியென்ன கவலை ,என்ஜாய் :)

      Delete