----------------------------------------------------------------------
மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் :)
''திருட்டுத் தொழிலை விடப்போறீயா ,ஏண்டா ?''
''பொதுப் பணித் துறையிலே கமிசன் 45சதம் ஆகிப் போச்சு ,மாமூலையும் உயர்த்தியே ஆகணும்னு 'எஜமானர்கள் 'கேட்கிறாங்களே !''
''திருட்டுத் தொழிலை விடப்போறீயா ,ஏண்டா ?''
''பொதுப் பணித் துறையிலே கமிசன் 45சதம் ஆகிப் போச்சு ,மாமூலையும் உயர்த்தியே ஆகணும்னு 'எஜமானர்கள் 'கேட்கிறாங்களே !''
அப்பன் திருந்தாமல் பிள்ளை திருந்துமா ?
''திருடிக் கொண்டா வந்தேனு கேட்டு ,உங்கப்பா
தோலை உரிச்சிட்டாரா ,அப்புறம் ?''
'முழு வாழைப் பழத்தையும் அவரே சாப்பிட்டு விட்டார் !''
தோலை உரிச்சிட்டாரா ,அப்புறம் ?''
'முழு வாழைப் பழத்தையும் அவரே சாப்பிட்டு விட்டார் !''
அக்னி வெயிலினால் வந்த மறதி !
''இப்படி கோடை மழையிலே நனைஞ்சிக்கிட்டு
வந்து இருக்கீங்களே ,கொண்டு போன குடை
என்னாச்சு ?''
''இதோ இருக்கே ...கோடை வெயிலை
மறைக்கத்தானே ,அதை வைச்சுக்கிட்டு இருக்கேன் ?''
இழப்பதற்கு ஒன்றுமில்லையா ,இதை தவிர ?
வெட்டப் பட்டு மடியில் விழும்
முடிகளைப் பார்க்கையில் ,,,
'முடி 'யாட்சி இழந்த மன்னனைப் போலாகிறேன் !
இதற்கே இப்படிஎன்றால்
இன்றைய ஆளும் 'மன்னர்களுக்கு '...
- 1. நல்ல முன்னுதாரணமான அப்பன்.. நாடும் வீடும் விளங்கிடும்.
2. பாவம்.. வெயில் கொடுமையில் - இப்படி ஆகிவிட்டது!..
3. மண்டையில தான் மிச்சம் இருக்கே!?..
|
|
Tweet |
1)திருட்டை ஒழிப்பதற்கு கமிஷன் தான் கமிஷ்னராக்கும்!
ReplyDelete2)உரிச்சு வாழைப்பழத்தை வாயில் ஊட்டிவிடாமல் விட்டாரே! சபாஷ்!
3)குடை காத்த குமரனுக்கு வாழ்த்துகள் பகவான் ஜி!
த ம + 1
நட்புடன்,
புதுவை வேலு
1.கமிஷனர் என்பதற்கு இதுதான் உண்மையான அர்த்தமாய் மாறி வருகிறது :)
Delete2.முழுசும் இல்லேன்னாலும் பாதியை ஊட்டியிருக்கலாம்:)
3.குடை சாய்ந்த குமரன் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)
நல்ல அப்பன் !!ரசித்தேன் ஜீ
ReplyDeleteபையனின் தோலை உரிக்காத , இவரா நல்ல அப்பன்:)
Delete1) எந்த விஷயம் எங்க இடிக்குது பாருங்க! பேனர் வைத்தாலும் வைத்தார்கள்... கமிஷன் அளவு தெரிந்து விட்டது!
ReplyDelete2) அடப்பாவி உரிச்சது வாழைப்பழத்தையா!
3) அடடா... வெயில் குடையை மழைக்கு உபயோகிக்க முடியாதோ! வராது வரும் மாமழைக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டாம் என்று விட்டிருப்பார்!
4) கஷ்டமாத்தான் இருக்கும்!
1,நாமதான் உலகம் தெரியாம இருந்திருக்கோம் ,45 ஆ ?:)
Delete2.உரிக்காம சாப்பிட்டு இருந்தால்தான் ஆச்சரியப் படணும்:)
3.மழையில் நனைந்தே வாழட்டும் :)
4.பதவி ஒன்றுதானே அரசியலில் குறி :)
வணக்கம்
ReplyDeleteஜி
அனைத்து அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் டெம்பிளேட் கருத்தும் அருமை ,ரூபன் ஜி :)
Deleteஅதானே பார்த்தேன்... நா கூட பொதுப்பணித் துறையில வேலை கிடைச்சிடுச்சோன்னு நெனச்சேன்...!
ReplyDeleteகவலைய விடு... இனிமே தோலை உரிச்சுப்புடுவேன்னு சொல்ல மாட்டாரில்ல...!
அக்னி ‘பகவானே’ மழையில நனையத்தான் கொஞ்சம் விடுங்கேளே... ரொம்பத்தான் குடையாதிங்க...!
‘முடி’ ஆண்டாலும் ’மூடி’ (பாட்டில்) ஆண்டாலும் எனக்கொரு கவலயில்ல’ பாட்டி(லி)ல் ஓடுகிறான்... பிடிங்க...!
நன்றி.
த.ம. 7.
கமிஷனே இவ்வளவு என்றால் ,அங்கே வேலைக்கு சேர எவ்வளவு கேட்பார்கள் :)
Deleteஉரிக்காமல் சாப்பிட்டாலும் அதிசயமில்லை :)
அவரோட சின்ன சின்ன ஆசையை நிறைவேற்றிக் கொள்ளட்டும்,ஜல்ப் பிடிக்காமல் போனால் சரிதான் :)
இன்றைய முடியாட்சியும் ,டாஸ்மாக் மூடியால்தானே ஓடிக்கிட்டிருக்கே :)
ரசித்தேன் ஜி...
ReplyDeleteமழையில் நனைந்து ரசித்ததுண்டா , ஜி :)
Deleteஅப்பனுக்கு பிள்ளை தப்பாம தான் பிறந்திருக்கு!
ReplyDeleteஜீன்ஸ் சோதனைக் கூட தேவையில்லை ,பழமே போதும் :)
Deleteஅப்பனுக்கு பிள்ளை தப்பாம தான் பிறந்திருக்கு
ReplyDeleteஉண்மைதான்!
உரிச்சு வச்சு பொறந்து இருக்குன்னு சொன்னா பொருத்தமா இருக்குமே :)
Delete01. இப்போதைக்கு எத்தனை சதவீதம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க...
ReplyDelete02. ஒரு நாளைக்கு அரளிக்கொட்டையை திருடிக் கொடுக்கச்சொல்லுங்க...
03. செருப்பை என்ன ? செய்தான்.
04. முடி இழந்தாலே இப்படியா ?
ஜி நலம்தானே.....?
1.பத்துன்னு இருந்ததுதான் தெரியும் :)
Delete2.அரைச்சு சாப்பிட்டு விடுவாரா :)
3.மழை நீரில் நனைந்தால் செருப்பை சுயரூபத்தைக் காட்டும் என்பதால் பத்திரமா கையிலே தூக்கிட்டு வந்தாரே :)
4.முடி இருந்தால் அதன் அருமை தெரியும் ?:)
உங்க பதிவுக்கு நேற்றே வாக்குபோட்டுட்டு இன்று இந்த மறு மொழியைச் சொல்றேன்னா பார்த்துக்குங்க :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம 11
ரசனையான 11க்கும் நன்றி :)
Deleteமகனை மிஞ்சிய அப்பனா...? அப்பனை மிஞ்சிய மகனா???என்பதில் வாழைப்பழ தோல் தடுக்கிறது..நண்பரே...
ReplyDeleteஆனால் ,இரண்டு பேருக்கும் ஒரே வித தோல்தான் :)
Deleteஅப்பன் என்றால் அம்மையும் நினைவு வருகிறார் :))
ReplyDeleteபெரிய அம்மையா ,சின்ன அம்மையா :)
Deleteகமிஷன் எல்லாம் இப்படி வெளில தெரிஞ்சா....
ReplyDeleteஇவ்வளவுதானா வாழைப்பழம் தானா...
தர்மத்தின் தலைவன் மாதிரியோ...
தெரிஞ்சாத்தானே கொடுக்கிறவன் தயாராய் வருவான் :)
Deleteவேறென்ன பழம் கொடுக்கணும் :)
வேட்டி கட்ட மறந்து வருவாரே ,அந்த தலைவனா :)
திருட்டை ஒழிக்கறதுக்குதான் நிறைய கமிசன் கேக்கறது புது ஐடியாதான் . ஜெயில்ல போட்டு தண்டனை குடுத்து திருட்டை ஒழிக்க முடியாதுன்னு புரிஞ்சிகிட்டாங்க
ReplyDeleteஇந்த கையிலே காசு ,அந்த கையிலே தண்டனை ,சரிதானே :)
Deleteஅனுமதி இல்லாத திருட்டை நிறுத்தி
ReplyDeleteஅனுமதி உள்ள திருட்டைத் தொடங்கிறாங்களோ
அனுமதியுள்ள திருட்டைச் செய்யணும்னா ஆளும் கட்சி அரசியல்வாதியா இருக்கணுமே :)
Delete