22 December 2014

உண்மைக் காதலன் கூட செய்யாத சூரசம்ஹார லீலைகள் !

இப்படியும் ஏமாற்றலாமா ?
             ''நான்  புதுசா வாங்கின செல்போனில் யார் நம்பரைப்  போட்டாலும் போக மாட்டேங்குது ,என்ன பிரச்னைன்னு பாரேன் !''
           ''அடப்பாவி ,பாக்கெட் கால்குலேட்டருக்கும் ,செல் போனுக்கும் உனக்கு வித்தியாசம்  தெரியாதா ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை ?

               ''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
             ''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
            ''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
             ''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
                                                          
                                                                   சைதை அஜீஸ்22 December 2013 at 09:18             
 அருமையான வியாபார யுக்தியை சிரிப்போடு கலந்து சொன்ன உங்களுக்கு   ஒரு பாராட்டு!
             ReplyDelete

Replies


  1. கால் பண்ணியும் மருந்து சாப்பிட மறப்பவர்களுக்கு வீட்டுக்கு நர்சை அனுப்புவதும் உண்டு ...ஆண் நர்ஸ் என்றால் ஒரு சார்ஜ் ,பெண் நர்ஸ் என்றால் இருமடங்கு சார்ஜ்  !
    நன்றி

  2. உண்மைக் காதலன் கூட செய்யாத சூரசம்ஹார லீலைகள் !

    'நான் எல்லாத்தையும் யமுனாவுக்காக மட்டும்தான் செஞ்சேன் ,ஆனா அவளே என்னைப் புரிஞ்சுக்கலேன்னு வேதனையா இருக்கு ...நிச்சயம் ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவா '
    'வர்மக்கலை கற்று  தந்த என் குருவுக்கு துரோகம் செய்ஞ்சுட்டோமேன்னு வேதனையா இருக்கு ...
    இப்படி இவ்வளோ பீல் பண்றது ...
    திருச்சி  சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ...
    நம்ம அஞ்சு கொலை ஆறுமுகம் அல்ல ...
    டாங் லீ கண்ணன் என்றழைக்கபடும் சாமியார் (?)தான் !
    யமுனாவுக்காக இந்தக் கள்ளக் காதலர் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல ...
    யமுனாவின் கணவரை ...
    கணவரின் நண்பரை ...
    நண்பரின் கார் டிரைவரை ...
    தான் கற்ற வர்மக் கலையை பயன் படுத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார் ...
     அப்பாவி பெண் யமுனாவின் வாழ்க்கையில் விளையாடிய பாவிகளைத்தான் கொன்றது கொலை அல்ல ...சூரசம்ஹாரமாம் ...
    இந்த சூரசம்ஹாரம் இத்தோடு முடியவில்லை ...
    யமுனாவின் மகனை ,மகளைக் கொன்றதில் முடிந்துள்ளது ...
    கராத்தே பயின்றதால் இவனுக்கு டாங் லீ என்று பட்டப் பெயர் வந்ததாம் ...
    வாய் திறந்தால் பொய்யாகவே கொட்டுவதால் ...
    டங் லை (Tongue lie ) கண்ணன் என்றே சொல்லலாம் !
  3. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....

  4. இத்தனை கொலை செய்தும்
    அவன் முகம் மட்டும் எப்படி இப்படி
    பாவமா இருக்கு

    அது குறித்து ஒரு கோர்ஸ் எடுத்தாக் கூட
    நிறைய பேர் சேருவாங்கன்னு நினைக்கிறேன்
    ReplyDelete

    Replies


    1. அநேகமாய் அந்த படம் கொ.மு .(கொலைக்கு முன் )படமாய் இருக்கலாம் ,கொ .பி . எப்படி என்று நாம் வேண்டுமானால் ஒரு நாள் ஜாலியா திருச்சி ஜெயிலுக்கு போய் பார்த்து விட்டு வரலாமா ?
      நன்றி

    2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
    3. எல்லோர் கண்ணிலும் வந்தால் அது 'மெட்ராஸ் eye '!



      நான்கு விழிகள் சந்தித்த கணத்திலேயே 
       பற்றிக் 'கொல்லும் 'தொற்று நோயா ...காதல் ?



33 comments:

  1. இப்பல்லாம் கால்குலேட்டரை விட பெரிசாய்டிச்செ செல்ஃபோன் ஜி!!

    டங்க் லை....ஹஹஹ் அருமை..

    அனைத்தையும் ரசிச்சோம்...ஜி

    ReplyDelete
    Replies
    1. ஏமாந்தவனுக்கு அது தெரியலியே :)

      டங்க் லை இப்போ உண்மையை உணர்ந்திருப்பாரா :)
      நன்றி

      Delete
  2. அனைத்தும் அருமை சிரிக்க வைத்தன

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது வம்பா கமெண்ட்போட்டால் நானும் சிரிப்பேன் இல்லையா :)
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    ஆகா....ஆகா... இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. குறிப்பா எதையாவது சொல்லுங்க ,ரூபன் ஜி :) அப்போதான் மற்றவர்களுக்கு நம் கருத்தின் மீது மதிப்பு ஏற்படும் ,தவறாய் பட்டால் மன்னிக்கவும் !
      நன்றி

      Delete
  4. அனைத்தும் அருமை - அதிலும் குறிப்பாக டாங் லீ - டங் லை சூப்பர்,

    ReplyDelete
    Replies
    1. இப்படி ,,பதிவில் படித்த எதையாவது சொன்னால்தான் எனக்கும் ஒரு திருப்தி ஏற்படுகிறது :)
      நன்றி

      Delete
  5. பாக்கெட் கால்குலேட்டர் – செல்போன் வித்தியாசம் தெரியாத ஆட்களும் இருப்பார்கள்.

    நான் மிகவும் ரசித்தது டாக்டரின் SMS சார்ஜ் ஜோக்தான். வழி முறையை சொல்லி விட்டீர்கள். இனி ஆரம்பித்து விடுவார்கள்.உங்கள் ஐடியாவிற்கு காப்பிரைட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

    பத்திரிகைகயில் அவன் படத்தைப் பார்க்கும் போது, ரமணி சார் சொல்வதைப் போல ஸ்ரீரங்கம் கண்ணன் அவ்வளவு அப்பாவியாகத்தான் முகத்தை வைத்துக் கொண்டு இருக்கிறான்.
    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ஆட்களும் இருப்பார்கள் ,ஏமாறவும் செய்வார்கள் :)

      மெடிசின் ஃபாலோ அப் வசதியும் உண்டுன்னு போர்டு கூட மாட்டுவார்கள் :)

      நெற்றியில் விபூதியுடன் இன்னும் எவ்வளவு அப்பாவியாய் இருந்து இருப்பான் :)
      நன்றி

      Delete
  6. Replies
    1. கண்டதும் வந்தால்தான் காதல் .யோசித்து வந்தால் கா..!
      நன்றி

      Delete
  7. //வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை ?//

    டாக்டர்கிட்டச் சொல்லி ஒரு அழகான நர்ஸ் ஏற்பாடு பண்ணியிருக்கலாமே?!

    ReplyDelete
    Replies
    1. 'பசி' மயக்கத்தில் என் மறுமொழியைப் படிக்கவில்லையா :)
      நன்றி

      Delete
  8. Replies
    1. மெக்னேஷ் ,நானே வர இரவாகி விட்டதே ,நடு இரவில் வந்து பயமுறுத்தாதீங்க :)
      நன்றி

      Delete
  9. இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி!..
    மார்கழி மாசம் - கோயிலுக்கு எல்லாம் போறதில்லையா?..

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிடித்த கமலஹாசன் வசனம் ...கடவுள் இல்லைஎன்று சொல்லவில்லை ,இருந்திருந்தால் நன்றாக இருக்குமே :)
      நன்றி

      Delete
  10. கால்குலேட்டர்...ஹஹஹா...
    மருந்துவர் டெக்னிக்க்சூப்பர்
    ஆஹா டங் லை...
    காதல்...ஐ...

    அனைத்தையும் ரசித்தேன்.

    தம 7
    .

    ReplyDelete
    Replies
    1. காதலியை கணக்கு பண்ண கால்குலேட்டர் தேவையில்லை ,அது ஒரு டெக்னிக் என்றால் ,அதை 'லை' என்றா நீங்கள் சொல்லப் போகிறீர்கள் :)
      நன்றி

      Delete
  11. ஹா...ஹா..ஹ்ஹா..
    ஆனா இப்போ இவ்வளவு சின்ன செல்போன் யாரும் வச்சுக்கரதில்லையே ஜி....!
    அடப்பாவி.... நிஜம்மாவே நல்ல பிசினஸா இருக்கே... ஆரம்பிச்சுடுவோமா.. ஹா...ஹா...ஹா...

    இந்த டாங்க்லீ வழக்கு எல்லாம் வழக்கு, கொலை நடந்தபோது சுடச்ச்டுஅப் படித்தால்தான் ஓகே! :)))

    கொஞ்சம் வயசாகிவிட்டால் காதல் என்றாலே "பற்றி"க் கொண்டு கூட வரும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,ஆண்ட்றாய்ட் செல் ,மினி கம்யூட்டர் தான் :)
      இதுக்கும் ஒரு app வரத்தான் போகிறது :)

      அசைப் போடுவதிலும் சுகம் இருக்கத்தானே செய்கிறது :)

      வாலிபத்தில் நெருப்பாய் காதல் 'பற்றி'க் கிடத்தானே செய்கிறது ?;)
      நன்றி

      Delete
  12. 01. ஒருவேளை பேலன்ஸ் இல்லையோ...

    02. இந்த தொல்லைக்கு அவனை ஹாஸ்பெட்டிலேயே தங்க வச்சிடலாமோ....

    03. டாங் லீ இவரு கங்கு லீ க்கு சொந்தக்காரரரோ...

    04. இன்று தொட்டுக்கொன்டால்தான் காதல் வருகிறதாம்.

    தமிழ் மணம் 9

    ReplyDelete
    Replies
    1. 1.வாங்கும் போது 'பேலன்ஸில்' அவனில்லை போலிருக்கு :)
      2.மண்டை போடும்வரை கட்டில்லேயே கிடக்க முடியுமா :)
      3.லட்சுமி ராய் ,ஐஸ்வர்யா ராய் அக்கா தங்கச்சியானால் அதுவும் நடக்கும் :)
      4.வந்த வேகத்தில் சென்றும் விடுமே ,இந்த காதல் :)
      நன்றி

      Delete
  13. கொலையா (வர்ம) கலையா!

    ReplyDelete
    Replies
    1. வர்மக் கலையால் இவர் செய்த கொலை மர்மம் எல்லாம் வெளியே வந்திடுச்சே :)
      நன்றி

      Delete
  14. ஜோக்ஸ் சூப்பர்! நன்றி!

    ReplyDelete
  15. ஜோக்ஸ் அருமை
    கடைசியில் சொன்ன கொடூரம் ...
    நினைவில் இன்னும் அந்த செய்தி இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சில கொடூரங்கள் மறக்க முடியாதவைதான் :)
      நன்றி

      Delete
  16. ,பாக்கெட் கால்குலேட்டருக்கும் ,செல் போனுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாம இருக்குற நாடு.... வல்லரசா ஆகுதாம்....!!!!

    ReplyDelete
    Replies
    1. மக்கள் கஞ்சிக்கில்லாமல் இருப்பார்கள் ,ஆனால் நாடு வல்லரசு ஆகிடும் :)
      நன்றி

      Delete
  17. ரசித்ததோடு நில்லாமல் ,வாக்கும் போட்டு இருக்கீங்க ..இரட்டை நன்றி !

    ReplyDelete