4 December 2014

கணவனுக்கு பிடித்தது,மனைவிக்கும் பிடிக்கணுமா?

                  ''உங்களுக்கு காரம் பிடிக்கும்னா மனைவிகிட்டே செய்யச் சொல்ல வேண்டியதுதானே ?''
           ''அவளுக்கு என்னை அதி'காரம்'  பண்ணத்தானே  பிடிக்குது ?''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

வடிவேலுவின் ஔவ்வ்வ் வள்ளுவருக்குப் பிடிக்குமா ?

            ''திருவள்ளுவர் இப்போ வந்தா ,வடிவேலு அடிக்கடி சொல்ற பஞ்ச் வார்த்தையை ரசிக்கமாட்டார்னு எப்படி சொல்றே ?''
            ''1330 குறள்லே எங்கேயும் 'ஔ 'என்ற  எழுத்து வரவே இல்லையே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....

''1330 குறள்லே எங்கேயும் 'ஔ 'என்ற எழுத்து வரவே இல்லையே !'' என்பது சிறந்த கண்டுபிடிப்பு!
'ஔ 'என்ற எழுத்து 'அவ்' எனவும் வரவில்லையா?
ReplyDelete


  1. அதை ஒருநாள் உட்கார்ந்து ஆராயணும் (நானல்ல ,யாராவது )
    நன்றி


  2. ஓஹோதானாம் இந்தியச் சரக்கு,சொல்வது பிரிட்டிஷ் பயணி !

    நம்ம ஊர் குடிமகன்கள் சாலையில் மட்டையாகி விழுந்துக் கிடப்பது ஒன்றும் காணக் கிடைக்காத அரிய காட்சியல்ல ...
    நேற்றைய தினம் ...அதிகாலை 2 மணி ...
    வெள்ளைக்காரன் ஒருவன் மதுரை 
    கட்ட பொம்மன் சிலை அருகே இப்படி விழுந்து கிடந்ததால் மனசு தாங்கவில்லை  நமது மக்களுக்கு ...
    காவல் துறையிடம் தெரிவித்து உள்ளார்கள் ...
    வந்த போலீசார் தட்டி எழுப்பி விசாரித்தால் ...
    அந்த வெள்ளைக்கார போதையனிடம் இருந்து ஒரு தகவலும் பெற முடியவில்லை ...
    விடிய விடிய லாட்ஜ்களில் விசாரித்து கண்டுபிடித்து ..
    அவனை அறையில் கொண்டுபோய் சேர்த்துள்ளார்கள்...
    போதை தெளிந்ததும் bad boys என்றே புலம்பினானாம் ...
    காரணம் ,ரூபாய் ஆயிரத்து ஐநூறுடன் அவன் பர்சைக் காணவில்லையாம்...
    நல்ல வேளை , ஆண் என்பதால் பர்ஸ்சோடு முடிந்தது ...
    இதுவே பெண் சுற்றுலாப் பயணி என்றால் எப்படிப்பட்ட விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும் ?
    ஏற்கனவே நமது பெருமைமிகு பாரதத்தை பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று வெளிநாடுகளில் முத்திரை குத்தியுள்ளார்கள் ...
    உங்களுக்கு என்னாச்சு என்று மட்டையனிடம் கேட்டதற்கு சொன்னானாம் ...
    என் நாட்டு பீர் என்றால் 1 1 டின் சாப்பிடுவேன் ,ஆனால்இங்கே  5டின்னிலேயே போதை ஏறி விட்டது ,இந்திய பீர் சூப்பரோ சூப்பர் என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் 
    நமது குடிமகன்கள் மட்டுமே தெரிந்து இருந்த மதுவின் புகழ் இங்கிலாந்திலும் பரவி விட்டது ...
    எல்லா நாட்டினரும் நம்ம சரக்கின் அருமையை உணர்ந்து சுற்றுலா வரப் போவது உறுதி ...
    அந்நிய பண வரவால் நமது பொருளாதாரம் உச்சிக்கே போகப் போவதும் உறுதி ...
    மதுக் கடைக்களை மூடச் சொல்லும் நமது கலாச்சாரக் காவலர்களை சில வருடங்கள் நாடு கடத்தி விடலாம் !
  3. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
  4. [[நல்ல வேளை , ஆண் என்பதால் பர்ஸ்சோடு முடிந்தது இதுவே பெண் சுற்றுலாப் பயணி என்றால் எப்படிப்பட்ட விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும்!]]

    கொஞ்சம் விளக்கமாக எழுதவும்! பெண் சுற்றுலாப் பயணி என்றால் என்ன? பெண் பயணி என்றாலும் அங்கேயும் 'பர்ஸைத்...தான்!
    தமிழ்மணம் +1
    ReplyDelete

    Replies


    1. இந்த பர்சில் இருந்தது பணம் என்றால் ,அந்த பர்சில் இருப்பது நம் நாட்டு மானமாச்சே !
      நன்றி

  5. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
  6. வாக்கு [போட்டவனை ] சாவடி !


               ''வாக்கு சாவடின்னு பெயர் வைத்தவன் தீர்க்கதரிசி !''
    ''ஏன்?''
               ''நம்ம வாக்கை வாங்கிட்டு ,இந்த அரசியல்வாதிங்க நம்மையே சாவடிக்கிறாங்களே !''
    ..........................................................................................................................
    நான்  எழுதிய இந்த ஜோக்கை பல வருடங்களுக்கு  முன்  பிரசுரித்த  ஜூனியர் விகடனுக்கு நன்றி !

  7. பாம்பை அல்ல ,பயத்தைக் கொல்வோம் !



    பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்றால் 
    பாம்பாட்டிதான் அரசனாக இருந்து இருக்க வேண்டும் !



30 comments:

  1. 01. தினம் அதுதானே நடக்குது... அப்படீனா ஆகாரம் செய்யிறது யாரு ?

    02. ஒருவேளை அவரே... வாவ் அப்படினு சொல்லமாட்டாரா ?

    03. நல்லவேளை ஆணாகப்போயிட்டான் பெண்ணாக இருந்தால் அவள் இங்கிலாந்து போனதும் ரேஷன் கார்டுல புதுப்பேரை சேர்க்க வேண்டியதாகி இருக்கும்,

    04. அவனே வாக்கரிசி போட்டுதானே வாக்கு வாங்குறான். அப்படித்தானே செய்வான்.

    05. போருக்கு போனால் அம்புக்கு பதில் பாம்புதான் பாயுமோ...

    த.ம 1

    ReplyDelete
    Replies
    1. 1.அதை வெளியே சொன்னா வெட்கக் கேடு :)
      2.அவரை பற்றித் தெரிந்தவர்களிடம் விசாரிக்கணும் :)
      3.அதுவும் ஆங்கிலோ இந்தியன் பெயராய் பார்க்கணுமோ :)
      4.வோட்டுக்கு காசு ,வாய்க்கரிசி மாதிரிதான் :)
      5.நாகாஸ்திரம் என்று சொல்வது அதைதானோ :)
      நன்றி

      Delete
  2. அனைத்து ஜோக்குகளையும் மிகவும் ரசித்தேன்
    கில்லர் அவ்ர்களின் அற்புதமான பின்னூடத்தையும்

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜியின் பின்னூட்டத்திற்கு என் மறுமொழி எப்படி சொல்லுங்களேன் ரமணிஜி:)
      நன்றி

      Delete
  3. Replies
    1. இதை தனியே போடுவதன் ரகசியம் என்ன ரமணிஜி?
      நன்றி

      Delete
  4. என்ன இருந்தாலும் நம்ம ஊர் சரக்கு மாதிரி வருமா என்ன!!

    இந்த 'ஔ' விஷயம் - எத்தனை நாள் ரூம் போட்டு கண்டுபிடிச்சீங்க?

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா நம்ம சொக்கிப் போய்விட்டீர்கள் :)

      அவ்வ்வ்..அதை மட்டும் சொல்லமாட்டேன் :)
      நன்றி

      Delete
  5. நம்ம ஊர் சரக்கு எல்லாமே எரிசாரியம் ...
    கொஞ்சம் கூட சமூகப் பொருப்பற்ற அரசுகளின் அற்புத சாதனை இது

    ReplyDelete
    Replies
    1. இதை விற்பதில் இலக்கு வேறு நிர்ணயித்து உச்சத்தைத் தொட்டுவிட்டோம் என்று பெருமை வேறு படுகிறார்களே :)
      நன்றி

      Delete
  6. த ம நான்கு ..
    உள்ளேன் அய்யா
    அப்பா அட்டெண்டென்ஸ் போட்டாச்சு

    ReplyDelete
    Replies
    1. மேலே போட்ட கருத்தே வருகையை உறுதிப் படுத்தி விட்டதே ,இது வேறு எதற்கு :)
      நன்றி

      Delete
  7. அனைத்தையும் ரசித்தேன் ஜி...

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,அந்த பிரிட்டிஷ் பயணியின் அனுபவத்தை ரசிக்க முடியவில்லை ,அப்படித்தானே ஜி :)
      நன்றி

      Delete
  8. இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்போது..அயல்நாட்டு பெண்மணிக்கு எப்படி பாதுகாப்பு தரமுடியும்.....அய்யோ ஓட்டுப்பெட்டியைக் காணவில்லை...!! ஓட்டு ப்பெட்டியை கண்டபிடித்து வைக்குமாறு நண்பர் பகவான்ஜீ யை கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ,பெண்ணின் பாதுகாப்பு அடிக்கடி கேள்விக் குறி ஆகிக்கொண்டுதானே இருக்கிறது !
      இப்போது கூட தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது ,அப் டேட் ஆகவில்லையே !
      நன்றி !

      Delete
  9. பகவான்ஜிக்கு சிரமம் கொடுக்கக்கூடாதுன்னு நானே ஓட்டுப்பெட்டியை பல இடங்களில் தேடி அலைந்து பெட்டியைக் கண்டு என்னுடைய ஓட்டுவை பதிவு செய்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா ,ஆகா ,உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டீர்கள் ,நன்றி :)

      Delete
  10. 1. அதிகாரம் பண்ணாமல் நமஸ்காரம் பண்ணினால் பிடிக்கும் இல்லையா?
    2. அவர் அவ் என்று சொல்லி விடுவாரோ.. (பின்னால் கமெண்ட்டிலும் அதைக் கேட்டிருக்கிறார்களா!

    3. அடப்பாவமே

    4, 5 . ஹா..ஹா..ஹா...

    ReplyDelete
    Replies
    1. 1.நமஸ்காரம் செய்து ,நமக்காரம் இல்லா காரம் செய்துக் கொடுத்தாலும் பிடிக்கும்தான் :)
      2.அதை ஆராய வேணும்ன்னு நானும் சொல்லி இருக்கேனே :)
      3.எங்கே போனாலும் குடிகாரன் மட்டையாகி விடுவது நல்லதுதானா :)
      நன்றி !

      Delete
  11. தம 9.

    வாக்குச்சாவடி செம அருமை.

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் இது அந்தக் காலத்திலேயே ஜூ,வியில் பிரசுரமானது :)
      நன்றி

      Delete
  12. வணக்கம் சகோதரர்
    மீண்டு(ம்) வந்தாச்சு. இப்படியெல்லாம் பதிவு போட முடியும்ங்கிற விசயத்தை உங்களிடமிருந்து இன்று தான் கற்றுக் கொண்டேன். கமெண்ட்ஸ் பதிவாக கலக்கிறீங்க. அன்று எழுதிய கவிதை இன்றும் அப்படியே பொருந்துகிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. திருமணத்திற்கு பிறகு இப்போதான் வந்து இருக்கிறீர்கள் ,மகிழ்ச்சி ..அதென்ன மீண்டு வந்தாச்சு ?பயங்கரமான பெர்முடாஸ் முக்கோணத்தில் தப்பித்த மாதிரி சொல்றீங்க ?:)
      நன்றி !

      Delete
  13. அனைத்தும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. என்று நீங்கள் சொல்வதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது ,அய்யா :)
      நன்றி !

      Delete
  14. Replies
    1. உங்களுக்கு சிறப்பு நன்றி ,உங்களின் ஒன்று ,ஒரு டஜனுக்கு பதிவை உயர்த்தி விட்டதே :)

      Delete
  15. என்னை அதி'காரம்' பண்ணத்தானே பிடிக்குது ?''
    ஔ 'என்ற எழுத்து வரவே இல்லையே !''
    அதை ஒருநாள் உட்கார்ந்து ஆராயணும்.
    பாம்பாட்டிதான் அரசனாக இருந்து இருக்க வேண்டும் !
    இப்படிப் பல......
    பதிவிற்கு நன்றி...
    வேதா. இலங்காதிலகம்.



    ReplyDelete
    Replies
    1. பலவற்றையும் ரசித்தமைக்கு நன்றி !

      Delete