15 May 2015

ஆறின கஞ்சி ஆகாதுன்னு ஆக்கியவள் அறிவாளா :)

------------------------------------------------------------------------------

இப்படி ஆள்கிட்டே நெருங்கி பழகலாமா :)
         ''தரித்திரம் கூட தொற்று நோய் மாதிரி தெரியுதா ,ஏண்டா ?''
      ''என் தரித்திரம் எப்போ தீரும்னு கிளி ஜோசியம் பார்த்தேன் ,ஜோசியர் கூண்டைத் திறந்ததும் கிளி பறந்து போயிடுச்சே !''

ஆறின கஞ்சி ஆகாதுன்னு ஆக்கியவள் 

அறிவாளா ?

        ''வியர்வைக் காயுமுன் கூலியைக் கொடுத்து விடுன்னு  சொல்றதை ,
நம்ம தேர்தல் கமிஷனருக்கு ஞாபகப் படுத்தினால் நல்லதா.ஏன்  ?''
          '' விரல்லே வச்ச  மையும் காணாமப் போயிடுச்சு ,
ரிசல்ட்டைச் சொல்ல இத்தனை நாளாகுதே!''



பழசை மறக்க நினைத்தாலும் ....!

            ''டேய் மச்சி ,H B D ன்னு சுருக்கமா ,பேஸ் புக்கிலே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பாதேன்னு சொல்றீயே ,ஏன் ?''
             ''முந்தி நாம குடிச்ச 'எச்சி பீடி 'ஞாபகம் வருதே !''

மனைவியின் அர்ச்சனை ,கணவனின் கற்பனை ?

ஆயில் புல்லிங் செய்யும் போது 
அழகாய் தெரிகிறாள் மனைவி ...
வாயை மூடிக் கொண்டிருப்பதால் !



  • நல்ல வேளை... மூணாம் நம்பர் கேஸ் ஆயில் புல்லிங் ..ன்னு ஆகிப் போச்சு!..
  • பினாயில் புல்லிங்.. ன்னு இருந்தா .....!?..... என்னாகி இருக்கும்!..
  • அழகாய் தெரிவதற்கு பதில் அஷ்ட கோணலாய் ஆகி இருக்கும் முகம் !


  • 27 comments:

    1. வாயை திறந்தால் ஆயில் பாய்லிங் ஆகி விடும்!
      பகவான் ஜி!
      த ம 1
      நட்புடன்,
      புதுவை வேலு

      ReplyDelete
      Replies
      1. அந்த பயம் இருந்தால் சரிதான் :)

        Delete
    2. 1) அட... அது புண்ணியம்தான் போங்க... கிளிக்கு விடுதலை கொடுத்துட்டாரே!

      2) இது இப்போ பொருந்தாதுன்னு நினைக்கறேன்! பழைய ஜோக்!

      3) ஹா...ஹா....ஹா...

      4) ஹா...ஹா...ஹா...

      ReplyDelete
      Replies
      1. 1.ஜோசியர் பிழைப்பிலே மண் விழுந்திருச்சே :)
        2.சென்ற பாராளுமன்ற தேர்தலில் நடந்தது இது ,ஓவ்வொரு மாநிலம் தேர்தல் முடியவே ஒருமாதம் மேலான பிறகுதான் முடிவு வெளியானதே :)
        3.சீ ,எச்சி பீடிதானே :)
        4.கொப்பளிப்பதும் அழகுதான் :)

        Delete
    3. நல்லா சிரித்தேன்...
      தம +

      ReplyDelete
      Replies
      1. அப்படின்னா நகைப் பணியைத் தொடர்கிறேன் :)

        Delete
    4. ஜோசியருக்கு நேரம் சரியில்லை...! ஹா... ஹா...

      ReplyDelete
      Replies
      1. இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது :)

        Delete
    5. கிளி பறந்து போயிருக்கும்..ஜோசியர்க்கு பாக்கி இருந்திருக்கும்...அதனால்தான் தேர்தல் ரிசல்டை சொல்வதற்கு காலதாமதம் ஆகின்றது..

      ReplyDelete
      Replies
      1. நெல்மநியைப் போடாமல் பட்டினிப் போட்டிருப்பாரா :)
        எந்த பாக்கி ,எதுக்கு தாமதம் ?

        Delete
    6. 01. போன கிளிக்கு பணம் கேட்டாரோ சோசியரு....
      02. மை போயிட்டா மறுபடியும் ஓட்டு போடலாமே...
      03. கஷ்டம்தான்
      04. வாயை மூடி விட்டவளுக்கு நன்றி.

      ReplyDelete
      Replies
      1. 1.கேட்காமல் விடுவாரா .கிளிக்கு றெக்கை முளைத்துடுத்து .அதான் பறந்துடுத்து என்று டயலாக் பேசிட்டு ஜூட் ஆயிட்டார் :)
        2.ரீ எலக்சன் வச்சா போடலாம் :)
        3.மலரும் நினைவுகள் ,வந்தா நல்லதுதானே :)
        4.நிரந்தரமா இல்லையே:)

        Delete
    7. Replies
      1. நன்று ,ஆயில் புல்லிங் தானே ,அய்யா :)

        Delete
    8. பாஸ்.. சும்மா சரமாரியா புதுசு புதுசா சிரிப்பு மூட்டிட்டே இருக்கீங்களே பாஸ்..

      நெசமாலுமே ஆச்சர்யமாத்தான் இருக்கு. உங்க பேஜ்க்கு வந்த உடனே மூடு மாறிடுது. மனசும்தான்.

      வாழ்த்துக்கள்.

      ReplyDelete
      Replies
      1. நல்ல மூடுக்கு தானே மாறுது ?;)

        Delete
    9. நம் தரித்திரம் ஜோசியருக்கு தொத்திக் கொள்ள . கிளிக்கு விடுதலை. ஆறின கஞ்சி பழங்கஞ்சிதானேஉன்கடமையைச் ஓட்டுப்போடுவதைச் செய் பலனை பகவானிடம் விட்டுவிடு அழகாய் எப்படித்தெரியும்?அனுமார் மாதிரி அல்லவா இருக்கும்

      ReplyDelete
      Replies
      1. ஜோசியர் யாரிடம் சென்று ஜோசியம் பார்க்கப் போறாரோ :)
        பழங் கஞ்சியை விரும்பிக் குடிப்பவர்களும் இருக்கித்தானே செய்கிறார்கள் :)
        தேர்தல் முடிவிலும் கீதை :)
        அனுமார் அழகாய் இல்லையென்றால் ,சாமி கண்ணைக் குத்தி விடாதோ :)

        Delete
    10. ஹாஹாஹா! அனைத்தும் சிறப்பு!

      ReplyDelete
      Replies
      1. நன்றி சுரேஷ் ஜி :)

        Delete
      2. This comment has been removed by the author.

        Delete
    11. Replies
      1. நன்றி துளசிதரன் ஜி :)

        Delete
    12. மனைவியின் அர்ச்சனை,
      கணவனின் கற்பனை?
      அழகான குட்டிக் கவிதை

      ReplyDelete
    13. வணக்கம்
      ஜி
      அனைத்தும் அருமை பகிர்வுக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete