28 May 2015

காதலன் ,காதலி என்றாலும் தப்புதான் :)

----------------------------------------------------------------------------------------

                                 Image result for திண்டுக்கல் பூட்டு

மறக்காம 'சிம்'மையும்  சேர்த்து புதைத்து இருப்பார்களா :)              

              ''செத்து போன பிறகும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த உன் புருஷன் ஆவி ,வராம இருக்க என்னடி செய்தே ?''

                       ''அவரைப் புதைத்த இடத்திலேயே அவரோட செல்போனையும் புதைச்சுட்டேன்  !''

புடவை செலக்ட் செய்ய ஒரு இரவு வேணுமாம் !

         ''கடையை அடைக்கப் போறோம் ,சீக்கிரம் புடவையை செலக்ட் 
பண்ணுங்க !''
           ''பரவாயில்லே ,பூட்டிட்டுப் போங்க ...காலையில் நீங்க வந்து 
திறக்கிறதுக்குள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து வைக்கிறேன் !''

பிறப்புதான் அப்படீன்னா வாழ்நாளிலுமா ?

          ''உங்க பையன் ஓசி ஓசின்னு அலைய ,அவனோட பிறப்புதான் காரணமா ,எப்படி ?''

  ''பிரசவத்துக்கு இலவசமா வந்த ஆட்டோவிலே பிறந்தவனாச்சே !''




காதலன் ,காதலி என்றாலும் தப்புதான்  !

இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது 
கள்ளச்சாவிகள்தான் !

  1. Jeevalingam KasirajalingamWed May 28, 04:54:00 a.m.

    "இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது
    கள்ளச்சாவிகள்தான்!" என்பது
    உண்மை தான்!
    பெண்கள் கண்கள்
    புடைவைகளில் வீழ்ந்தால்
    ஓரிரவு போதாது தான்!




    1. பூட்டு தரமா இருந்தா எந்த கள்ளச் சாவி நுழைந்தாலும் திறந்து கொள்ளாது!
      இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிற சேலையாவது கணவன் கண்ணுக்கு குளிர்ச்சி தந்தால் சரிதான் !
  2. Chokkan SubramanianWed May 28, 05:13:00 a.m.
    மூன்றும் அருமை.

    கவிதை மிக சூப்பர். கள்ளச்சாவிகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதில் தான் இல்லறப்பூட்டுக்களின் திடத்தை அறிய முடியும்.




    1. திண்டுக்கல் பூட்டில் நுழையும் சாவியில் ஆண் சாவி ,பெண் சாவி என்று இரண்டு வகை இருப்பது தெரியுமா சொக்கன் ஜி ?
    2. Chokkan SubramanianThu May 29, 06:50:00 a.m.
      அப்படியா என்ன???
      எனக்கு தெரியாது.
    3. google ஆண்டவரிடம் கேட்டு தெரிஞ்சுக்குங்க ,அப்படியும் தெரியலைன்னா நம்ம பாஸ் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் கேட்டுக்குங்க !

26 comments:



  1. ஓசி ஆட்டோவில போனா இத்தனை விவகாரமா..?

    ReplyDelete
  2. இந்தக் கள்ளச் சாவிகள்தான் நாகரித்தின் எரிகொள்ளி
    செமையா இருக்கு எல்லாம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம்
    ஜி
    ஆட்டோவில் பிறசவத்துக்கு இலவசம் என்ற வார்த்தை ...இதற்குத்தானா....
    ஆகா....ஆகா...பல சாவிகள் இருந்துதான் பல பூட்டுக்கள் இலகுவாகதிறக்கப்படுகிறது...பல பிரச்சினைகள் உருவாக காரணம்...
    மற்றவைகளை இரசித்தேன் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. 1. ஹா...ஹா...ஹா...

    2. அப்புறம் அதை எல்லாம் யார் எடுத்து அடுக்கறது? அப்போக் கூட பாதிதான் பார்த்திருப்பாங்க!

    3. ஹா...ஹா...ஹா.. உதவும் எண்ணம் வளரவில்லையா? என்ன கொடுமை!

    4. ஆம்!

    ReplyDelete
  5. 1. charger ரை கொடுத்து அனுப்புனாங்களா ??? அதகேளுங்க .....

    2.சாவியில் ஆண் சாவி? பெண் சாவி??? அதெல்லாம் தெரியால பாஸ்!!

    ReplyDelete
  6. சாவியில் ஆண் சாவி.. பெண் சாவி.. சுவராஸ்யமாக இருக்கிறதே! திண்டுக்கல் தனபாலன் ஜி தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
    த ம +1

    ReplyDelete
  7. "செல்"லின் மீது அவ்வளவு காதலா...? ஹா... ஹா...

    ReplyDelete
  8. சாவியில் ஆண் சாவி.. பெண் சாவி.. சுவராஸ்யமாக இருக்கிறதே! திண்டுக்கல் தனபாலன் ஜி தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
    த ம +1

    ReplyDelete
  9. இலவச ஆட்டோ! முதலாக அனைத்தும் நன்று!

    ReplyDelete
  10. ஒர் இரவுக்குள் புடவைத் தேர்வு முடியும் என்று நம்புகிறீர்களா ஜீ,,,,,,,,,,
    அனைத்தும் அருமை.

    ReplyDelete
  11. வெட்டிப் பேச்சு >>
    கால் வைச்சாலே காசு கேட்கிற ஆட்டோவில் ஓசின்னா சும்மாவா :)

    ReplyDelete
  12. சீராளன்>>
    போற போக்கைப் பார்த்தால் இந்த கொள்ளி அணையும் போலத் தெரியலே :)

    ReplyDelete
  13. ரூபன் ஜி >>
    பிறப்புதான் இப்படி என்றால் வளர்ப்பாவது சரியாக இருக்கணுமா,வேணாமா :)
    ஒரு பூட்டுக்கு சாவிகள் நிறைய இருக்கலாம் ,அசல் சாவி போல வருமா ,அதுதான் பூட்டைக் கெடுக்காது :)

    ReplyDelete
  14. கள்ளச் சாவிகள் இல்லறப் பூட்டை உடைக்கும் ஓசி ஆட்டொ ஜோக் ரசனை. புடவை ஜோக் பல ரூபங்களில் கேட்டது.

    ReplyDelete
  15. ஸ்ரீராம்>>
    1.செல்போனுக்கு இப்படி நிறைய ஆவிகள் அலைவதாகத்தான் தோன்றுகிறது :)
    2.இதுக்கு அப்புறம் மாட்சிங் பிளவுஸ் வேற இருக்கு ,விடிஞ்சுரும் :)
    3.ஆட்டோக்காரருக்கு இருந்த நல்ல மனசு ,இவனுக்கு வரலையே :)
    4.ஆம் ,கள்ளச் சாவிகள் 'கள'வாடுவதை ஏற்கவே முடியாது :)

    ReplyDelete
  16. Mythily kasthuri rengan ஜி >>
    பவர் பேக்கை கொடுத்திருப்பதாக கேள்விபட்டேன் :)
    கீழே ..சாவிகளைப் பற்றி , .சகோ .செந்தில்குமாரும் அறிய ஆவலாய் இருக்கிறாரே ,அவருக்கும் சேர்த்து சொல்லி இருக்கிறேன் :)

    ReplyDelete
  17. S.P. Senthil Kumarஜி >>
    ஆண் சாவி ,பெண் சாவிக்காக கூகுளில் தேடியதில் மேலேயுள்ள உள்ள படம்தான் சிக்கியது ....
    அந்த சாவியின் நுனி ,அதாவது பூட்டில் நுழையும் பாகம் 'ராடு' போல் இருக்கும் ,அந்த ராடின் உள்புறம் கடைந்து இருப்பார்கள் ,அதுதான் பெண் சாவி :)

    ReplyDelete
  18. 01. பேலன்ஸ் போட்டு விட்டாளா ?
    02. இந்த டீலிங் நல்லாத்தான் இருக்கு.
    03. தேர்தல் வந்துட்டா எல்லோருடைய நிலையும் இதுதானே... ஜி
    04. ஸூப்பர் ஜி 100 மார்க்.

    ReplyDelete
  19. திண்டுக்கல் தனபாலன்>>
    திண்டுக்கல் என்றதும் பூட்டு ஞாபகம் வந்தது அந்தக் காலத்தில் ,இப்போ உங்க ஞாபகம்தான் வருது ஜி :)

    ReplyDelete
  20. புலவர் இராமாநுசம்>>
    ஆட்டோவில் ஏறி வலம் வந்தமைக்கு நன்றி அய்யா :)

    ReplyDelete
  21. அவரைப் புதைத்த இடத்திலேயே அவரோட செல்போனையும் புதைச்சுட்டேன்!
    என்பதும்
    கடையை அடைக்கப் போறோம் ,சீக்கிரம் புடவையை செலக்ட்
    பண்ணுங்க!
    என்பதும்
    வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும்
    பெண்கள் ஆச்சே!
    கள்ளச்சாவிகள் தொல்லை
    தாங்க முடியவில்லை ஐயா!

    ReplyDelete
  22. KILLERGEE >>
    1.இருக்கும் பேலன்சில் யாரிடம் பேசுகிறார் என்பதை அறிந்து ரீசார்ஜ் செய்வதாக உத்தேசம் :)
    2..இந்த கொடுமைக்கு பேர் டீலிங்கா :)
    3.ஜனநாயகக் கூலி :)
    4.கள்ளச் சாவிக்கு நூறு மார்க்கா :)

    ReplyDelete
  23. mageswari balachandran ஜி >>
    நம்பிக்கைதானே வாழ்க்கை :)

    ReplyDelete
  24. S.P. Senthil Kumar ஜி >>
    பெண் சாவியைப் பார்த்தீர்களா :)

    ReplyDelete
  25. Bagawanjee KAThu May 28, 05:17:00 p.m.
    திண்டுக்கல் தனபாலன்>>
    திண்டுக்கல் என்றதும் பூட்டு ஞாபகம் வந்தது அந்தக் காலத்தில் ,இப்போ உங்க ஞாபகம்தான் வருது ஜி :)


    பாஸ்..ரொம்பச் சரியா சொன்னீங்க பாஸ்..

    ReplyDelete
  26. திண்டுக்கல்லுக்குப் போனா ,நமக்கு ,திண்டுக்கல் தலைப்பாகட்டி ஒரிஜினல் பிரியாணி வாங்கித் தருவார் என்று நினைக்கிறேன் :)

    ReplyDelete