11 February 2015

'மானிட்டர் 'அடிமைகளா இவர்கள் :)

             ''என்னடி சொல்றே ,உன் வீட்டுக்காரருக்கும் ,பையனுக்கும் 'மானிட்டர் 'தோஷம் பிடிச்சிருக்கா ?''

                '' பாட்டில் மானிட்டரைக்  குடிச்சுக்கிட்டு அவரும்   ,லேப்டாப் மானிட்டரை பார்த்துகிட்டு பையனும்  இருந்தா ,அதுதானே அர்த்தம் ?''


மனைவிக்கு புரியும்படி சொல்வது எப்பவும் நல்லது !

                 ''வாசல்லே எலக்ரீசியன்  வந்து 'எந்திரம் சிங்கிள் பேஸா ,
திரீ பேஸான்னு 'கேட்கிறான் ...ஒண்ணுமே புரியலே ,நீ வரச் 
சொன்னீயா ?''
           ''அட நீங்கதானேங்க,ஆர்டர் செய்த குபேர 'எந்திரம்' இன்னைக்கு 
வந்துடும் ,வந்தவுடனே மாட்டணும்னு சொன்னீங்க !''

நிறைய பேர் எந்திரம் வாங்கி பிச்சைகாரர்கள் ஆகிவிட்டார்கள்! விற்றவர்களோ பணக்காரர் ஆகிவிட்டார்கள்! எப்படியோ எந்திரம் நல்லா வேலை செய்யுது! ஹாஹா!
ReplyDelete


  1. நடிகர் சத்யராஜ் ஒரு படத்தில் ,தகடு தகடு என்று கிண்டல் அடிப்பார் ,அதே மாதிரி நீங்களும் எந்திர தகடை கிண்டல் செய்திருப்பது செம ஜோக் !
  2. பைத்தியமானவர் புலவரா :

             ''டாக்டர்,என் தாத்தாவுக்கு மாத்திரையால் 'சைடு எப்பெக்ட்'ஆயிடுச்சு !''
    ''என்ன  செய்றார் ?''
               ''மாத்திரையைப் பார்த்து 'மாத்திரே ,நீயுமா என்னை ஏமாத்திறே 'ன்னு பைத்தியமா புலம்புறார் !''


  3. ஸ்டெதஸ்கோப்புடன் இன்றும் சில 'DOG'டர்கள் !

    பெண் நோயாளிகளை 'தொடக் ''கூச்சப்பட்டு 
    ஸ்டெதஸ்கோப்பை கண்டு பிடித்தாரே ...
    அந்த  டாக்டரை  'தொட்டுக் 'கும்பிடத் தோன்றுகிறது ...
    இன்று ,வரம்பு மீறும் சில டாக்டர்களைப்  பார்க்கையில் !





21 comments:

  1. 01. அப்படினா வீட்டுல அப்பனுக்கும், மகனுக்கும் சண்டை வராது பிரட்சினையே இ்ல்லை.
    02. சிங்கிள் பேஸோ, திரீ பேஸோ, வாங்குனவன் குடும்பம் பீஸூ
    03. தாத்தா தேவயானி ரசிகரோ....
    04. ஆஹா அருமை பகவான்ஜி
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. 1.இந்த அம்மாவும் tv மானிட்டர் பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதானே :)
      2.டிவியில் இதையும் கூவி விற்கத்தானே செய்கிறார்கள் :)
      3.இதில் எங்கே வந்தார் தேவயானி,சொன்னால் தெரிஞ்சுக்கலாமே :)
      4.ஒரு சில dogடர்கள் அப்படித்தானே இருக்கிறார்கள் :)

      Delete
  2. 1. .ஹா..ஹா...ஹா.. இப்படிக் கூட ஒரு கஷமா?

    2. அப்போ என்ன மந்திரம் போட்டாலும் எந்திரம் வேலை செய்யாதுன்னு சொல்லுங்க... ஹா...ஹா...ஹா...

    3. ஹா...ஹா..ஹா...

    4. பெண் நோயாளிகளைத் தொட்டுப் பார்க்கக் கூச்சபட்டா ஸ்டெதாஸ்கோப் தோன்றியது? நியூஸ் டு மீ!

    ReplyDelete
    Replies
    1. ஸாரி, கஷ்டத்துக்கே கஷ்டம்! கஷம் ஆயிட்டுது!

      Delete
    2. 1.செல்லில், தமிழ் 'டைப்பிக்க' சிரமமாய் தான் இருக்கும் :)
      2.மாங்காய் கூட விழாது மந்திரத்தில் :)
      3.பைத்தியம் இப்படியும் புலம்புமா :)
      4 ரினே தியோஃபில் ஹையஸிந்த் லென்னே..இது ஸ்டெதாஸ்கோப்பை 1781ல் கண்டு பிடித்த பிரஞ்சு டாக்டரின் பெயர் ,அவர் அப்படித்தான் சொல்லி இருக்கிறார் :)

      Delete
  3. Replies
    1. மானிட்டரைத் தானே:)

      Delete
  4. இரண்டு மானிட்டர் தோஷத்தாலயும் மனித சந்தோஷம் போச்சுன்னு அந்த அம்மா எப்படி அழகா சொல்றாங்க

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப் பட்டிருப்பது அவங்கதானே :)

      Delete
  5. மானிட்டரம்மா என்ன செய்கிறார்கள்...?

    ReplyDelete
    Replies
    1. குடிக்கவுமில்லை ,பார்க்கவுமில்லை :)

      Delete
  6. உண்மையில் இனி டாக்டரைப் பார்க்கும்போதெல்லாம் Dog டெர் தான் நினைவுக்கு வருவார்.
    அப்படிச் செய்துவிட்டீர்கள் ஜி
    த ம கூடுதல் 1

    ReplyDelete
    Replies
    1. டாக்டர்களில் மனிதத் தெய்வங்களும் உண்டு , ,மற்ற துறையில் இருப்பதுபோல் இங்கேயும் சில 'கறுப்பாடுகள் 'இருக்கத்தானே செய்வார்கள் ?:)

      Delete
  7. வீட்டம்மா டீ.வி மானிட்டருக்கு அடிமையா இருப்பாங்கனு நினைக்கிறேன் . மானிட்டர் வாழ்க

    மாத்திரை சைட் எஃபெக்ட் இல்லைங்ணா . அவருக்கு இப்போ தான் முழு உண்மையும் தெரிஞ்சிருக்கு .

    டாக்'டர்ர்ர்ர்ர்' ஆக்கிட்டிங்களே ஜி !

    ReplyDelete
    Replies
    1. மானிட்டர் என்றாலே அந்தம்மாவுக்கு மயக்கமா வருதாம் :)

      சில டாக்டர்கள் அப்படிப்பட்ட மாத்திரையைத்தான் பரிந்துரைப்பதாக பரவலான குற்றச் சாட்டு உள்ளதே :)

      சிலர் அப்படித்தானே இருக்காங்க :)

      Delete
  8. 10க்கோர் குத்து.

    ReplyDelete
    Replies
    1. பத்தோடு ஒன்று விழுந்தாலும் ,தமிழ் மண மகுடத்தில் இன்று DD,நாளை நீங்கள்தானே இருப்பீர்கள் :)

      Delete
  9. வணக்கம்
    ஜி
    எல்லாம் நன்றாக உள்ளது இரசித்தேன் த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பத்து இல்லே ,பத்தோடு ஒன்று ,த.மாவை சொன்னேன் :)

      Delete
  10. நல்ல வேளை அப்பா கையில் இருக்கும் மானிட்டர் தான் எனக்கும் வேணும்னு பையன் சொல்லாம இருக்கானே!.....


    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. அதையும் கேட்கும் காலம் தூரத்தில் இல்லை :)

      Delete