20 February 2015

'கை கழுவுபவர்கள் ' நடி'கை'கள் மட்டும்தானா ?

--------------------------------------------------------------------------------

கொசு ஏமாறாது ,நாமதான் ஏமாறுவோம் :)
             ''கொசு விரட்டி லிக்யூட் தீர்ந்து போச்சு  ,வார்னிங் லைட்டாவது  எரியட்டும்னு ஆன் பண்ணி வைச்சேன் !''
                   ''கொசு ஏமாந்து போச்சா ?''
                   ''என்னையா ஏமாத்துறேன்னு  இரண்டு மடங்கா பிடுங்கி எடுத்துருச்சி  !''


கணவன் குறட்டை விடும்போது கண்டுபிடிச்சது ?

              ''கரடி தூங்குறப்போ மனுசனை மாதிரியே குறட்டை விடும்னு இப்போதான்  கண்டுபிடிச்சு இருக்காங்க,உனக்கெப்படி முன்னாடியே தெரியும் ?''
           ''குறட்டை விடுறப்போ உங்களைப் பார்த்தா அப்படித்தானேங்க  இருக்கு !''
ஓ... சிவபூஜையில் கரடி கத்திவிட்டதோ!
  1. சும்மா கத்தலே .ஊரையே கூட்டி அசிங்கப் படுத்திருச்சே !
  2. 'கை கழுவுபவர்கள் 'நடிகைகள் மட்டும்தானா ?

    ''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான் பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
    ''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின 'அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''



  3. திண்டுக்கல் தனபாலன்20 February 2013 at 08:33
    ஹா... ஹா... நிறைய...
    1. ஏழு பேரை கைகழுவின பிறகும் நடிகையின் கை சுத்தம் என்று நம்பி , ஏமாற இருக்கும் தொழில் அதிபர்களும் நிறைய !
    2. படிப்பு தானாய் வந்தால்தான் உண்டு !

      படிப்பில் கோட்டை விடும் மகனிடம் ...
      அந்தக் காலத்தில் தெருவிளக்கில் படித்தேன் ...
      எனச்  சொல்ல  வந்த  தந்தை வாயை அடைத்தது  ...
      'கரெண்ட் கட் ' !
    3. நிலைமை அப்படித்தான் போய் கொண்டிருக்கிறது...
      ReplyDelete

      Replies


      1. அந்த காலம் பரவாயில்லை ,தெருவிலும் விளக்கு ஒழுங்காய் எரிந்து இருக்கின்றது !இன்று வீட்டில்கூட ......???



28 comments:

  1. 01. கொசு (ஏ)மாறாது
    02.புருஷனை நேரடியாக திட்ட முடியலையோ....
    03. கம்பெனிகாரனையும் கை கழுவிடாமே...
    04. சகுனம் சரியில்லையே....
    05. தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. 1.கொசுவுக்கு நூறு கண்கள் இருக்குன்னு சொல்றாங்க ,எப்படி ஏமாறும் :)
      2.சான்ஸ் கிடக்கும் போது விடுவாங்களா :)
      3.அவங்க டீலே அவங்க பார்த்துப்பாங்க :)
      4.இந்த 'சகுனம்' தமிழக ஆளும் கட்சிகளின் செயலின்மையால் வந்தது :)
      5.அது சரி ,இதுக்கும் ஒரு நம்பரா :)இதை நண்பர் கிங் ராஜும் கடைப் பிடித்தால் நல்லாயிருக்கும் :)

      Delete
  2. // ''என்னையா ஏமாத்துறேன்னு இரண்டு மடங்கா பிடுங்கி எடுத்துருச்சி !'//

    கொசு பிடுங்கின பிடுங்குல தூக்கம் வராமதான் இந்த நடு ஜாமத்தில் பதிவு போட்டீங்களா பகவான்ஜி?!

    ReplyDelete
    Replies
    1. அர்த் சத்யா ...அதாவது பாதி உண்மை :)

      Delete
  3. இந்த காலத்தில் அப்பாவிகள் கிடைத்தால் பச்சபுள்ளைகள் கூட ஏமாத்துது பாஸ்!
    அதானே! நடிகைகள் மட்டும் தான் கைகழுவுகிறார்களா? சிம்புவையும் கூப்பிடுங்க பாஸ்:))

    ReplyDelete
    Replies
    1. சிம்புவை சிம்பாலிக்காய் சொன்னதா எடுத்துக்கலாம் ,நடிகைகள் கல்யாணம் செய்து கொண்டு வெட்டிவிடுவது தெரிகிறது ,நடிகர்கள் முதல்லேயே வெட்டி விடுவது எங்கே தெரியுது :)

      Delete
  4. * மருந்து இன்னும் தீரவில்லை என்று பேப்பரில் எழுதி ஒட்டிப் பாருங்களேன்.. ஹா..ஹா..ஹா..

    ** ஹா...ஹா...ஹா.... பாவம் புரு!

    *** ஹா...ஹா...ஹா... ஆண்கள் 'கைகழுவி' விடுவது செய்தியாவதில்லை!

    **** அடப்பாவமே....

    ReplyDelete
    Replies
    1. தமிழ்லே எழுதுவதா ,ஆங்கிலத்தில் எழுதுவதா என்றுதான் புரியலே :)

      கரடியா கத்துவதாய் கேள்விபட்டேன் :)

      இதிலும் ஆணாத்திக்கம்தானா :)

      படிப்பில் கோட்டை விடும் மாணவனின் கஷ்டம் கோட்டையில் உள்ளோர்க்கு புரிந்தால் சரி :)

      Delete
  5. OFF செய்யச் சொல்லி கொசு விரட்டி லிக்யூட் மேலேயே சில நேரம் சுற்றுகிறது ஜி...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. குளிரைத் தாங்க முடியாமல் ,லிக்யூட் மெசின் மேல் உட்கார்ந்து குளிர் காய்வதாகவும் கேள்விபட்டேன் :)

      Delete
  6. Replies
    1. கடியை எப்படி ரசிச்சீங்க:)

      Delete
  7. கொசு ஏமாந்து போச்சா? ஹாஹாஹா...!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆராய்ச்சியால் கண்டு பிடித்தது ...கொசு , கண்ணால் பார்த்து வருவதில்லை ,மூக்கால் முகர்ந்து பார்த்து வந்து கடிக்கிறது :)

      Delete
  8. நானும் அவ்வப்போது லிக்விட் தீர்ந்து போனாலும் ஆன் செய்து வைப்பதுண்டு. வாசனை வராவிட்டால் வெறும் லைட் என்று கொசுக்களுக்கும் தெரியும். ஏன் நடிகைகள் கை கழுவி விடுவது மட்டும் தெரிகிறது. இருந்தாலும் இப்படியாஒரு கணவனைக் கரடியுடன் ஒப்பிடுவது...ஹூம்.

    ReplyDelete
    Replies
    1. கரடி குறட்டை விடுவது உண்மைச் செய்தி ,கணவன் கரடியானது கற்பனைதான் :)

      Delete
  9. அந்த காலத்தில் தமிழ்நாட்டில்ஒவ்வொரு தெருவிலும் இரவில் மின்விளக்குகள் எல்லாம் எரிந்தன.....

    வரலாறு புத்தகத்தில் வரலாறு படைக்குமோ... இந்த கரண்ட் கட்.
    தம+1

    ReplyDelete
    Replies
    1. தெருக்கள் கூடிய அளவிற்கு மின் உற்பத்திக் கூடவில்லையே ,வரலாறு புத்தகத்தில் இது வரலாறுதான் படைக்கும் :)

      Delete
  10. Replies
    1. தமிழ் படத்தைப் போலவே ஆங்கிலப் படத்தை நீங்கள் விமர்சிப்பதும் அருமை :)

      Delete
  11. பசுவைக் கூட வைக்கோல் கன்று வைத்து ஏமாற்றலாம்! கொசுவை ஏமாற்ற முடியுமா? அனைத்துமே சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஏமாற்றி வேண்டிய மட்டும் பாலைக் கறந்து விட்டு ,பசுவை தெய்வமாய் வணங்கலாம் :)மனிதனின் இந்த போக்கு பிடிக்காமல்தான் கொசு இந்த கடி கடிக்கிறதோ :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பான கருத்துக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி :)

      Delete
  13. கொசு ஏமாறாது ,நாமதான் ஏமாறுவோம் :)..உண்தைான்

    ReplyDelete
    Replies
    1. நாம் இருக்கும் இடத்தை ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே கண்டுபிடித்து விடுமாம் கொசு ,நமக்கு கூட இல்லாத மோப்ப சக்தி உள்ள கொசுவை நாம ஏமாற்ற முடியுமா :)

      Delete
  14. ஏமாற்றாதே ஏமாறாதே....ன்னு அந்தாள் காதுல பாட்டு பாடியிருக்குமோ அந்தக் கொசு!

    ReplyDelete
    Replies
    1. கொசுவின் ரீங்கார இசையில் இந்த லிரிக்ஸ் கேட்கமாட்டேங்குதே :)

      Delete