4 February 2015

லவ் லெட்டரெல்லாம் ஓல்ட் பேஷன்:)

 ருசியைத் தேடுதோ நாக்கு :)
                    ''அந்த ஹோட்டல் சாப்பாடு 'ஹோம்லி மீல்ஸ் ' மாதிரியே இருந்ததா ,பரவாயில்லையே !''
             ''அட நீங்க ஒண்ணு,உப்புமில்லை ,உறப்புமில்லைன்னு  சொல்ல வந்தேன் !''


மாப்பிள்ளை தங்க 'கம்பி 'யாச்சே !

               ''மாப்பிள்ளைப் பையன் நடத்தை எப்படி ?''

                ''கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தாலும்  நன்னடத்தைக்காக 
ஒரு வருஷம் முன்னாடியே ரிலீஸ் ஆயிட்டார்னா நீங்களே பார்த்துக்குங்க !''

  
வலிப் போக்கன்4 February 2014 at 13:55
தங்கக் கம்பிதான் இரும்புக் கம்பிய எண்ணிக்கிட்டு இருக்கோ?????
ReplyDelete


  1. இரும்புக் கம்பியை எண்ணி முடிச்சிட்டு தாலிக்கயிரில் எண்ணி மூணு முடிச்சு போட வந்து இருக்கார் !
    நன்றி
    Delete
  2. ஒரு தண்டனையிலிருந்து நன்னடத்தையில் வெளியில்வந்து...
    அடுத்த முழு ஆயுளும் தண்டனையடைய நினைக்கும் இவனுக்கு யாராவது எடுத்துச்சொல்லுங்கப்பு!!!
    Delete
  3. யார் போய் சொல்றது ?எல்லோரும் தானே மாட்டிக்கிட்டு இருக்கோம் ?

  4. ஓ,,,,,,,,,,,,,,ஓ,,,,,,,,,,,,, நல்ல அமைதியான பெடியன் போல தெரியுது....வலை வீசவேண்டியதுதான்.....
    ReplyDelete

    Replies


    1. பெடியன் தானா வந்து விழும்போது வலை எதுக்கு ?


  5. லவ்  லெட்டரெல்லாம்  ஓல்ட் பேஷன்:)
  6.                 ''டாக்டரை ஏண்டா காதலித்தோம்னு இருக்குடி ?''\\
  7.                  ''ஏண்டி ?''
  8.            ''லவ் லெட்டர்லே என்ன எழுதி இருக்கார்னு புரிய மாட்டேங்குதே !''
  9. ..................................................................................................................................
    பிரசுரித்த குமுதம் இதழுக்கு  நன்றி !

  10. மாற்றம் மனைவியின் உருவிலா ?கணவனின் சலிப்பிலா ?


    ரூபாவதியாய்  காட்சி  தந்தவள் ...
    மோகம் முப்பது ,ஆசை அறுபது  நாளுக்குப் பின் ... 
    ரூப அவதியாய் !



29 comments:

  1. Home Meals-ம் அப்படித்தானா ஜி...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. பாவம் அங்கேயும் அப்படித்தான் என்றால் எங்குதான் போவார் :)

      Delete
  2. ரசித்தேன், சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. 1. மொபைலிலிருந்து கமெண்ட் தரும்போது சிலசமயம் ஒரே தடவை பப்ளிஷ் அழுத்தினாலும் இப்படி ஆகிவிடுகிறது.

      2. மொபைலிலிருந்து கமெண்ட் தரும்போது உங்கள் பதிவுகளின் அகலம் மொபைல் எல்லையைத் தாண்டுகிறது. அகலவாக்கில் ஸ்க்ரால் செய்தால் அடுத்த/முந்தைய பதிவுகளுக்குச் சென்று விடுகிறது.

      3.மொபைலிலிருந்து கமெண்ட் தரும்போதுதமிழ்மணத்தில் வாக்களிக்க முடிவதில்லை!

      Delete
    2. 1.பரவாயில்லை ,அதை நானே டெலிட் செய்து விட்டேன் ஜி :)
      2.ஓ,இப்படியும் ஒரு சிக்கல் இருக்கிறதா ,சரி செய்யப் பார்க்கிறேன் :)
      3.அதுசரி ,வீட்டுக்கு வந்து மெதுவாய் வோட்டு போட்டுக்கலாம் ...நானும் வரும் கமெண்ட்களை மொபைலில் பார்த்து வைத்துக் கொள்வேன் :)

      Delete
  3. ரசித்தேன், சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து ,சிரித்து தன்னிலை விளக்கம் தந்ததற்கும் நன்றி :)

      Delete
  4. ஹோம் மீல்ஸ்-ஹஹஹா... தம 3

    சிரித்தேன்......

    ReplyDelete
    Replies
    1. உங்க கைப் பக்குவம் எல்லோருக்கும் வருமா மேடம் :)உங்க பதிவில் வருகிற போட்டோக்களையே அள்ளி திங்கலாம் போலிருக்கே :)
      ஒரு சந்தேகம் ....வலைச்சர ஆசிரியராய் இருந்து கொண்டே பதிவும் போட்டு ,கமேண்ட்களையும் போட எப்படி முடிகிறது ?நீங்க இருக்கிற எகிப்தில் ஒரு நாளைக்கு முப்பது மணி நேரமா :)

      Delete
  5. 01. இங்கிலீஷை இப்படியும் இணைக்கலாமோ...
    02. ஏண்டா வெளியே வந்தோம்னு நினைக்கப்போறான்.
    03. 6 மாசத்துக்கு மெடிக்கல் ஷாப்பில் வேலைக்கு விட்டால் சரியாப்போயிடும்.
    04. ஆனா, ரூபா இருந்தால் அவதியை போக்கிடுமே...
    தமிழ் மணம் – 4
    (இன்றைக்கு ஏன் ? லேட்)

    ReplyDelete
    Replies
    1. 1.விளம்பரம் அப்படித்தானே பண்ணிக்கிறாக :)
      2.நாளை நடப்பதை யாரறிவார் :)
      3.ஆறு மாசமாகுமா :)
      4.ரூபா இருந்தாலும் இவருக்கு முடியணுமே :)
      (நேற்றிரவு ,பதிவைப் போட்டாச்சு ...இன்னுமா தூங்க வரலேன்னு இல்லாள் பூரிக் கட்டையை தேடுவது போலிருந்தது ,பயந்து போய் பப்ளிஷ் கொடுக்க மறந்துட்டேன் :)

      Delete
  6. வணக்கம்
    ஜி
    இரசிக்கவைக்கு நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி த.ம5
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஏளனம்:   கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் 'ஏளனத்தை ' விரும்பி ரசித்தேன் :)

      Delete
  7. அவன்தான் ஏள்கனவே ஆயுள்தண்டனை அனுபவிச்சிட்டானே !? மறுபடியும் இன்னொரு தண்டனையா ? அதிலும் நன்னடத்தையா இருந்தா புழச்சிப்பான் . இல்லாட்டி தினம்தினம் தூக்குத்தான் .

    தம+

    ReplyDelete
    Replies
    1. தனிமைத் தீவில் இருந்து தப்பித்து ,தீயிலே வந்து மாட்டிக்கிட்டானோ :)

      Delete
  8. ஹோம் மீல்ஸ்# ஹலோ அண்ணி இந்த பாஸ் என்ன எழுதுறார்னு கொஞ்சம் எட்டி பாருங்களேன்**ஏதோ நமளால முடிஞ்சது:)

    ReplyDelete
    Replies
    1. சோறே போடாம காயவிட்டாதான் திருந்துவாரோ (மைன்ட் வாய்ஸ்:)

      Delete
  9. ரசித்தேன்
    சிரித்தேன்
    நன்றி நண்பரே
    தம 7

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே....நானும் அதே அதே :)

      Delete
  10. ஹோம்லி மீளஸ்ன்னா உப்பு உரைப்பு இருக்காதா ஜி... (மிஸஸ் ஜி படிக்கமாட்டாங்களோ)
    சுவைத்தேன்... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. படித்தால் ரோசம் வந்திடும்னு படிப்பதே இல்லை அவங்க :)

      Delete
  11. ஹோம்லி மீல்ஸ் என்றால் உப்புசப்பு இல்லாததோடு குறை சொல்லவும் முடியாது என்று அர்த்தம் கொண்டேன்,எல்லாவற்றையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லா இல்லாட்டியும் ,மோசமா இல்லைன்னு நினைப்பதும் நல்ல அணுகுமுறை தான் :)

      Delete
  12. உப்புமில்லை ,உறப்புமில்லைன்னு .....
    நன்னடத்தைக்காக
    ஒரு வருஷம் முன்னாடியே ரிலீஸ்....
    இரும்புக் கம்பியை எண்ணி முடிச்சிட்டு தாலிக்கயிரில்.....
    பெடியன் தானா வந்து விழும்போது வலை எதுக்கு ?......
    என்று இப்படியெல்லாம் ரசித்தேன்.
    சிரித்தேன்.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததை ஒன் ஒன் லைன் ஆக சொல்லி இருப்பதை நானும் ரசித்தேன் :)

      Delete
  13. நகைச்சுவை மன்னரில்லை.
    நகைச்சுவை சக்கரவர்த்தி நீங்கள் பகவான் ஜி.
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. தமிழிலே உயர்வு நவிற்சி அணி என்று சொல்வார்களே ,அது ஏனோ நினைவுக்கு வருதே :)

      Delete
  14. உப்பு உறப்பில்லாத ஹோம்லி மீல்ஸ்! .....

    அதுவாது கிடைக்குதேன்னு சந்தோஷப் பட வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆலையில்லா ஊருக்கு ...,என்பதைப் போலத்தானே :)

      Delete