13 February 2015

இப்படியும் ஒரு பேரழகா :)

-------------------------------------------

நாணயம் வேணும்தான் ,அதுக்காக  இப்படியா ?

            ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப 
நாணயமானவரா ,எப்படி ?''
             ''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட 
வந்து கதவை தட்டுகிறாரே !''

பெண்டாட்டிக்கு வந்த ' 2 இன் 1 'ஐடியா !

            ''இரும்புச் சத்து கூட்டிக்கணும்னு டாக்டர் சொன்னதுக்கு நீ 
என்ன செய்யப் போறே ?''
          ''உங்க ஸ்கூட்டரை தள்ளுவண்டிக்காரன்கிட்டே   தள்ளிட்டு 
பேரீச்சம்பழம்  வாங்கிச் சாப்பிடலாம்னு  இருக்கேங்க !''
இரும்புச் சத்து வேணும்னு டாக்டர் சொன்னா... 
ஸ்கூட்டரையேல்ல உடைச்சு அந்த மனைவி 
சாப்பிடணும் நியாயமா? ஹி... ஹி... ஹி.



  1. கால்சியம் குறையுதுன்னா ,முழு சீயம் வாங்கி ,
  2. கால் சீயம் மட்டும் சாப்பிடச் சொல்வீங்க போலிருக்கே !
  3. முன் குறிப்பு ....சாதாரண கடலை வியாபாரி பல கோடி மதிப்புள்ள வெளிநாட்டு 
  4. கடன் பத்திரங்களை வைத்திருந்தார் என்று கைது செய்யப் பட்ட 
  5. கிடைத்த செய்தியால் உண்டான மொக்கை இதோ ...
  6. கடலை போட 100சதம் உரிமையுள்ளவர் 
  7. 'நிதி முறைகேடு செய்த கடலை வியாபாரிக்கு  நடிகைகளுடன் தொடர்பாமே ?''
  8. ''எவன் எவனோ கடலை போடும்போது ,கடலை வியாபாரி 'கடலை 'போட்டா தப்பா  ?''

  9. இப்படியும் ஒரு பேரழகா ?



    பல்லாயிரம் முகங்களைப் பார்த்த 
    புராதனக் கண்ணாடி ...
    உன் முகம் பார்த்ததும் 
    சுக்கு நூறாய்  சிதறியது ...
    பிறவிப் ப(ய )லன்  கிடைத்ததென்று !

24 comments:

  1. நடிகைய விட்டுட்டு கடலையா போடறது ? வித்தியாசமான ஆள் தாங்ணா ! ஹி ஹி

    அனைத்தும் அருமை அண்ணே !
    தம+

    ReplyDelete
    Replies
    1. சம்பாதித்ததை அங்கேதானே விட முடியும் :)

      Delete
  2. Replies
    1. மன்னியுங்கள் கில்லர்ஜி,நேற்றிரவு கணணி முடங்கியதால் பதிவு தாமதமாகி விட்டது !

      Delete
  3. 1. ஹா.ஹா...ஹா... பெர்ஃபெக்ட் தொல்லை!

    2. ஹா...ஹா.... நியாயம்தான். பால கணேஷ் பின்னூட்டமும் சூப்பர்.

    3. ஐயோ பாவம் அந்தக் கண்ணாடி!

    ReplyDelete
    Replies
    1. 1.ஒண்ணாந்தேதி 'டான்'னு வாடகையைக் கொடுக்கச் சொன்னது தப்பா போச்சே :)
      2.இரும்புக் கை மாயாவி கூட இரும்பை சாப்பிட்டதா தெரியலியே :)
      3.அதுக்கு சாப விமோசனம் கிடைச்சிருச்சோ :)

      Delete
  4. மனித நேயம் குறைஞ்சு போச்சினு பாவம் அந்த மனுஷனை தூக்கி எடைக்கு எடை போட்டுட போறாங்க.....
    தம 5.

    ReplyDelete
    Replies
    1. எடைக்கு எடை போடலாம் ,வாங்குவார் யாரோ :)

      Delete
  5. பிறவிப் ப(ய )லன் கிடைத்ததென்று !..எமக்கு அந்த பாக்கியம் கிடைக்காபோச்சு....!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் கறுப்புக் கண்ணாடி மாட்டிகிட்டு பிறவிப் பயனை அடைஞ்சிகிட்டே கிட்டே தானே இருக்கீங்க :)

      Delete
  6. Replies
    1. சரி, சரி ....உங்களின் கருத்து வந்து விட்டதே:)

      Delete
  7. வணக்கம்
    ஜி
    கதவை தட்டுவதும் ஒரு சமிச்சைதான்...(அலட்)
    கடலை ...-இளநீர் குடிப்பவன் வேறு.. அதை தூக்கி வீசுவது வேறு நபர் போலதான்...கடலை வியாபாரி அப்பாவி... ஜி மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா அவர் வாடகை தர வரலையா ,இவர் நெஞ்சில் யாரும் குடியேறி விட்டார்களா :)

      Delete
  8. கணினி முடக்கம்?
    ஆனால் தொடரும் சாதனைகள் அசத்தல்..
    நகைப்பணி தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாஸ் ,நொடிக்கு நாலு முறை கட் நெட்டாகிறது,தப்பு தப்பு ,நெட் கட்டாகிறது:)ஒருவழியா இன்னைக்கு காலையில் பதிவை வெளியிட்டாச்சு ,அதுவும் இப்போ ஹிட்டாச்சு :)

      Delete
  9. Replies
    1. காலையில் ஜோக்காளியை காணவில்லை என்று தேடி இருப்பீர்களே :)

      Delete
  10. ''எவன் எவனோ கடலை போடும்போது ,கடலை வியாபாரி 'கடலை 'போட்டா தப்பா ?''---எவர் சொன்னது தப்புன்னு...!!!

    ReplyDelete
    Replies
    1. அவரைக் கூட்டிட்டு வாங்க ,கடல்லே தள்ளிடுவோம் :)

      Delete
  11. 12 மணிக்கே... என்னவொரு நம்பிக்கை...???

    ReplyDelete
    Replies
    1. வீட்டு ஓனர்,இவர் நாணயத்துக்கு பயந்து ஒரு வாரத்திற்குள் வாடகை தரச் சொல்லி விட்டார் :)

      Delete
  12. பன்னிரெண்டு மணிக்கு டாண்ணு பணம் கொடுக்க தூங்காம காத்திருந்த அவரின் கடமை உணர்ச்சி..... அப்பா புல்லரிக்குது!

    ReplyDelete
    Replies
    1. கடமை உணர்ச்சியைப் பாராட்டி ,இனிமேல் வாடகையை நானே வந்து வாங்கிக்கிறேன் என்று சொல்லி விட்டாரே :)

      Delete