28 February 2015

'இச் 'சினால் பலன் இல்லைன்னாலும் ...)

படித்த செய்தி .....

இக்சி முறையில் எந்த வயதினருக்கும் செயற்கை முறையில் கருத்தரித்து, அழகான குழந்தைகளைப் பெற முடியும் என்பதை  55 வயதுப் பெண் நிரூபித்து, குழந்தைகள் இல்லாத எண்ணற்ற தம்பதியினருக்கு பெரும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் என்றால் மிகையாகாது.
தோன்றிய  மொக்கை ....
               ''டாக்டர் ,உங்க மருத்துவமனையில்  தம்பதிகளுக்கு  'இக்சி 'முறையில் பிள்ளைப் பிறக்க வைக்கிறீர்களாமே ,அதெப்படி ?''
               ''உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் ?உங்களுக்கு  'இச் 'முறையிலேயே கிடைக்க வேண்டியது  எல்லாமே கிடைச்சுப் போவுதே !''

இப்படி இக்கு வைக்கும் காரணம் என்ன ?

                    ''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை 
பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
               ''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர  மாறுதலுக்கு 
உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''
நல்லவேளை ” பயணிகள் கவனிக்கவும்!” என்று தலைவர் சொல்லாமல் விட்டார்!
ReplyDelete

Replies


  1. Bagawanjee KA28 February 2014 at 19:47
    டெல்லி வரை செல்லும் பார்லிமென்ட் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராய் இருக்கின்றது ,கள்ள வோட்டில் ஜெயித்த நல்லவர்கள் ஓசியில் செல்ல அரிய சந்தர்ப்பம் என்றும் அழைக்காமல் விட்டாரே !
  2. அரைகுறை அகராதியால் என்ன பயன் ?

    ''என் அகராதியிலே 'மன்னிப்பு 'ங்கிற  வார்த்தையே கிடையாது !''
    ''பிறகெதுக்கு அந்த அரைகுறை அகராதியை வச்சுக்கிட்டு இருக்கீங்க ?''

  3. நாம் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் !

    பாண்டுரங்க சுவாமிக்கு கோயில் கட்டும்
    பேறு பெற்றவர் நடிகை பண்டரி பாய் ...
    நாம் பெற்ற பேறு ...
    நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலத்தில் வாழ்வது !

26 comments:

  1. 01. இனி வரும் காலங்கள் எல்லா வயதினரும் இப்படித்தான் பெறும் நிலை.
    02. பழக்க தோஷமோ...
    03. அகராதியிலே பிறந்தது எல்லாம் இப்படித்தான் பேசும்.
    04. சாதாரண ரசிகன் நடிகைக்கு தாலி கட்ட முடியாதே... அதனாலதான் கோயில் கட்டுறான் போல...

    ReplyDelete
    Replies
    1. 1.ஆய்வுகள் அப்படித்தான் கூறுகின்றன ,ஆணின் விந்து அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறதாம் :)
      2.பட்டியலில் இல்லாதவர்கள் என் நெஞ்சில் இருக்கிறார்கள் என்றுகூட சொல்வதுண்டு :)
      3.ஜாதகத்தில் அகராதியில் பிறந்தான் என்று எந்த குறிப்பும் இல்லையே :)
      4.முடியாத வருத்தத்தில் அழுது முடங்கி விடாமல் .தொழுது தங்களைத் தேற்றிக் கொள்கிறார்களோ :)

      Delete
  2. 1) மொக்கைக்கும் சிரிப்பு வருகிறது.

    2) ஹா...ஹா...ஹா... தொழில் பக்தி.

    3) ஹா...ஹா....ஹா...

    4) அதானே!

    ReplyDelete
    Replies
    1. 1..'இக்சி'க்கும் சிரிப்பு வருதா :)
      2 ..பக்தி சரி நேர்மை ?
      3 .மன்னிக்கத் தெரியாதவன் இப்படிப் பீற்றிக் கொள்ளலாமா :)
      4.பொற்காலத்தில் தானே வாழ்கிறோம் :)

      Delete
  3. Replies
    1. பெரும்பான்மையோருக்கு போதும் :)

      Delete
  4. ,இச்” சினால் உடனடி பலன் இல்லாமல் போகாது...

    ReplyDelete
    Replies
    1. நீண்டகால பயனும் உண்டே :)

      Delete
  5. அதென்ன இக்சி முறை. இச் முறையில் குழந்தை பிறக்கும் என்று யார் சொல்வது.?

    ReplyDelete
    Replies
    1. மூன்றெழுத்தை கூகுளில் தட்டிப் பாருங்கள் ,மூன்று நொடியில் இக்சி புரிந்து விடும் :) 'இச்'சை எங்கேயும் தேட வேண்டியதில்லை :)

      Delete
  6. Replies
    1. ரசித்து மகிழ்ந்ததற்கும்.......என்னை மகிழ்வித்ததற்கும் நன்றி :)

      Delete
  7. ஹாஹாஹா! சிரித்துமகிழ்ந்தேன்! நன்றி!

    ReplyDelete
  8. தமிழ் மணம் வைகை 6

    ReplyDelete
    Replies
    1. வைகை வற்றாததில் மிக்க மகிழ்ச்சி :)

      Delete
  9. இக்சி இச்
    அருமையான செய்தீ
    அதனையும்
    நகைச்சுவையாக
    வெளிப்படுத்தியது அருமை!

    ReplyDelete
    Replies
    1. செய்தீ பரவினால் நல்லதுதானே :)

      Delete
  10. இச் முறை வைத்தியத்தில் டாக்டர் 'சப்'பென்று கன்னத்தில் வாங்காமல் இருந்தால் சரி தான் .

    தம+

    ReplyDelete
    Replies
    1. இந்த இச் இன்டோரில் நடப்பதாலும் டாக்டருக்கு வேலையில்லை என்பதாலும் சப் ஆகாது :)

      Delete
  11. ரயில்வே அதிகாரி சிரிப்பு வெடி அண்ணாச்சி.

    ReplyDelete
    Replies
    1. வானிலை அதிகாரிகூட இப்படித்தான் சொல்வார் :)

      Delete
  12. வணக்கம்
    இரசித்து மகிழ்ந்தேன்... நன்றாக உள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசனையான கருத்துக்கு நன்றி :)

      Delete
  13. ஹஹஹாஹ்ஹ எல்லாமே ஆனாலும் என்னதான் சொல்லுங்க அந்த மொக்கைதான் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. நானும் மொக்கையின் கடைசி வரியில் ...இப்போது ,'எல்லாமே' என்பதை சேர்த்து விட்டேன் ,மொக்கைக்கு கூடுதல் வலு சேர்ந்து விட்டது:)

      Delete