1 February 2015

செலவு செய்யாமல் காதலிக்க முடியுமா :)

  ------------------------------------------------------------
 ஃகாலி பிளவரா ,'காலி 'பிளவரா :)          
               ''நான் வாங்கி வந்த  ஃகாலி ப்ளவரில்  பூச்சி இருக்குன்னா ,எடுத்துப் போட்டு நறுக்க வேண்டியதுதானே ?''
            ''அதைத்தாங்க நானும் செஞ்சேன் ,மீதி ஒண்ணுமே தேறலே ..உண்மையில் இதுதாங்க 'காலி ' ப்ளவர் !''



கணவன் கண் கண்ட தெய்வமா ?

              ''என்னடி ,கணவனை நீ தெய்வம் மாதிரி நினைக்கிறீயா ,ஏன் ?'' 

          ''எனக்கு பிடித்த சனீஸ்வரன் இல்லேன்னாலும் ,என்னைப் பிடித்த சனீஸ்வரனாச்சே !''
சனீஸ்வரனோ முனீஸ்வரனோ, தலையணை மந்திரம் 
போட்டா ‘அர்த்தனாரி ஈஸ்வரன்’ ஆயிடுவாரே?!
ReplyDelete


  1. ஆகாததால் தானே இந்த சனி அர்ச்சனை ?இன்னும் விளக்கிச் சொன்னா ,தாம்பத்தியம் என்பதன் அர்த்தமே நாறிப் போகுமே !
  2. சைதை அஜீஸ்2 February 2014 at 01:59
    அவர் சனீஸ்வர்னென்றால் இவர் மூதேவியோ?
    ReplyDelete


    1. மிசஸ் சனீஸ்வரன் மூதேவி என்றால் நல்லாத்தானே இருக்கு ?

    2. செலவு செய்யாமல்  காதலிக்க முடியுமா ?

                      ''நம்ம காதல் தெய்வீக காதல்னு சொன்னா ,மனைவியான  நீயே கோவிச்சுக்கிறீயே ,ஏன் ?''
    3.                ''காதலிக்கும் போது ....பீச்சுக்குப் போனா  சுண்டலுக்கு காசு செலவாகும்னு ,கோவிலுக்கு  நீங்க வரச் சொன்ன காரணம் இப்போதானே புரியுது ?''

    4. காதலி : என்னாங்க பீச்சுக்கு போகவேண்டாம். கோவிலுக்குப் போகலாமா.

      காதலன் : பக்கத்தில செருப்பு வைக்க காசு வாங்காத கோவில் இருக்கா.

      காதலி : நடக்கற தூரத்தில ஒரு கோவில் இருக்கு.

      காதலன் : போற வழியில ஏதாவது பலகாரக்கடை இருக்கா.

      காதலி : இதுக்குள்ள மூடியிருப்பான்.

      காதலன் : சரி. உடனே கிளம்பு.

      கோபாலன்
      ReplyDelete


      1. நல்ல ஜோடிதான் !இவங்க கலயாணம் பண்ணிகிட்டா ,டெலிவரி நேரத்திலே பிரசவத்துக்கு இலவசஆட்டோ வர்ற வரைக்கும் காத்துகிட்டு இருப்பாங்க !
        நன்றி
        Delete
      2. நன்றி,

        எப்பயா பெட்ரொல் போட்ட.
        போறதுக்குள்ள பெட்ரோல் தீர்ந்துச்சுன்னா என் கதி என்னாகிறது அப்படீம்பாங்க.
      3.   பெட்ரோல் தீர்ந்தாலும் ஆட்டோவை தள்ளிகிட்டாவது போய் எங்களை அரசு ஆஸ்பத்திரி சேர்க்கிறது உன் பொறுப்பு என்று கண்டிஷனா பேசிகிட்டு ஆட்டோவிலே ஏறுவாங்க !

      4. கிணற்றில் குதித்த ஜோடி !

                  ''டார்லிங் ,நீயும் நானும் கிணற்றில் குதிக்கிற மாதிரி கனவுகண்டேன் !''
                 ''ஐயையோ ,அப்புறம் ?''
           ''நீயும்தானே குதிச்சே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''


      5. படிச்ச மேதைகள் இவர்கள்தானா ...?

        லைப்ரரி  வருகையாளர் பதிவேட்டில் ...
        வரிசை எண் 13 காலியாகவே இருக்கிறது !




26 comments:

  1. 01. காளியம்மாளோட காய்கறிக்கடையில வாங்கினால் இப்படித்தான் இருக்கும்.
    02. தீபாராதணை காண்பிச்சு மூஞ்சியிலே தீயை வைக்காமல் இருந்தால் சரி
    03. ரெண்டு இடத்திலும் சுண்டல்தான் பீச்சுக்குப் போனால் செலவு, கோயிலுக்குப் போனால் ஓசி.
    04. அப்புறம் நடந்தது மார்சுவரியிலே ரெண்டு பேரும் கிடந்தது நமக்குத்தான் தெரியுமே...
    05. வர்றது 12 பேர்தானோ...

    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. 1.இப்படி புழுத்துப் போன ஃகாலி பிளவரை எதுக்கு வாங்கிவந்தீர்கள் என்று மனைவி பத்திர காளிஅம்மன் ஆகாமல் இருந்தாலே போதும் :)
      2.சனீஸ்வரன் கருப்பசாமி ஆயிடுவாரே :)
      3.சுண்டல் மட்டுமா ஓசி :)
      4.மார்சுவரிக்கு அனுப்பி அனுப்பிட்டாங்களா ,இவங்க சாதி மாறி காதலிச்சு இருப்பாங்களோ :)
      5.பதிமூணாவதா வந்தவர்தான் மெத்தப்படித்தவர் :)

      Delete
  2. ரசித்தேன்
    சிரித்தேன்
    நன்றி நண்பரே
    தம 2

    ReplyDelete
    Replies
    1. ரசித்து சிரித்ததோடு நிற்காமல் கருத்துரையும் எழுதியதற்கு நன்றி :)

      Delete
  3. ஆக மொத்தம் தெளிவா இல்லைன்னா ஆளையும் காலி பண்ணிடுவாங்க பாக்கெட்டையும் காலி பண்ணிடுவாங்க.....அருமையான சிரிவெடிகள்.....நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாக்கெட்டில் உள்ளதை செலவு செய்யாமல் (உங்கள் g+ல் உள்ள )பேட்டன் டாங்கியா வாங்கப் போகிறோம் ,விடுங்க ஸ்ரீனி ஜி :)

      Delete
  4. Replies
    1. உங்கள் கண்டுபிடிப்பு அருமை ...இரண்டுமே காலிதான் :)

      Delete
  5. செலவு செய்தும் காதலி..காதலிக்கவில்லை...? என்று ஒரு அனுபவஸ்தரு சொன்னாதாக கேள்வி,

    ReplyDelete
    Replies
    1. இவரைவிட அதிகமா செலவு செய்றவன் கொத்திட்டுப் போயிருப்பான் :)

      Delete
  6. அந்த காலி ப்ளவர் வாங்கிவந்தது பாஸ் தான் என, நேத்து அஜய் google பிளஸ் சில் ஷேர் செய்திருந்ததாக தகவல்:)))

    ReplyDelete
    Replies
    1. அப்படியா என்று அஜயிடம் கேட்டேன் ,மேடம் அவங்க வீட்டு நினைப்பிலே சொல்லி இருப்பாங்கன்னு சொல்றானே :)

      Delete
    2. சமத்து பிள்ளை!! அப்பாகிட்ட உண்மையா சொன்னா என்ன நடக்கும்னு தெரிஞ்சு, நல்லாவே சமாளித்திருக்கிறார்:)))))

      Delete
  7. 1. ஹா...ஹா....ஹா... எவனோ ஒரு 'காலி'ப்பய ஏமாத்திட்டான் போல!

    2. ஹா...ஹா...ஹா...ஆனால் ஏதோ ஒரு ஈஸ்வர மூர்த்திதான்!

    3. ஹா...ஹா...ஹா... கொவில பொங்கல் பிரசாதம் கிடைக்கும்னு பொங்க வச்சிடப் போறான்!

    4. ஹா...ஹா... ஹா.. தண்ணியில்லாக் கிணறோ!

    5. என்று முடமாகுமா இந்த மூட நம்பிக்கைகள்!

    ReplyDelete
    Replies
    1. 1.ஏமாறவன் இருக்கும்போது காலிப் பயலுக்கு கொண்டாட்டம்தான் :)
      2.ஈஸ்வரிக்குத் தான் ஈஸ்வரனைப் பிடிக்கலே போலிருக்கு :)
      3.மதியம் அன்னதானம் சாப்பிட கூப்பிட்டா என்னாகுமோ :)
      4.குதித்த அவங்ககிட்டேதான் கேட்கணும் :)
      5.படிக்கத் தெரிந்த மூடர்களோ :)

      Delete
  8. ரசித்தேன்..ரசித்தேன்...ரசித்தேன்
    காலி ஃப்ளவர்....காலி...

    ReplyDelete
    Replies
    1. சமையல் டிப்ஸ்களை அள்ளி வழங்கும் உங்களுக்கு காலி பிளவரை ரசிக்க சொல்லியாத் தரணும்:)

      Delete
  9. //ஃகாலி ப்ளவரில் பூச்சி இருக்குன்னா//

    காரம் மசாலா சேர்த்து பூச்சிக் குழம்பு செய்துடலாமே!!!

    ReplyDelete
    Replies
    1. சைனாவில் அப்படி செய்து இருப்பார்கள் போல் தோன்றுகிறது :)

      Delete
  10. Replies
    1. # மார்ட்டின் ஸ்கார்சேசேயின் படங்களைப்பற்றி எழுதவேண்டுமெனில் எல்லாப்படங்களையுமே பெஸ்ட் என்றுதான் கூறவேண்டும்#
      இது நீங்கள் உங்கள் பதிவில் எழுதி இருப்பது ...என் பதிவுகளையும் , உங்களைப் போன்றே படிக்கும் அனைவரும் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறேன் :)

      Delete
    2. ஆல்ரெடி ஜோக்காளியோட பதிவுகள் எல்லாம் பட்டாசாத்தான் அண்ணா இருக்கு ,

      Delete
  11. ஹஹஹஹ் அனைத்துமே அருமை! " "காலி" ஃப்ளவர் ஹஹஹ்

    13 ??அது இங்கிலாந்தில்தானே...இங்கயுமா? இந்தக்காலத்துலயுமா? என்னவோ போங்க ஜி....

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் 13ம் நம்பர் வீடு படம் பார்த்தவங்க பேயறைஞ்ச மாதிரி அரண்டு போயிருக்காங்களே:)

      Delete
  12. காலி ஃப்ளவர் - ஹா ஹா....

    ReplyDelete
    Replies
    1. பொரித்து வைத்தால் அவரே முழு காலி ஃப்ளவரையும் காலி பண்ணிடுவாரே :)

      Delete