24 February 2015

வாலிப வயதை அறிந்த தந்தை :)

---------------------------------------------------------------------------

அன்பார்ந்த வலைவுறவுகளே ....
என் நல்ல நேரமோ ,உங்க கெட்ட நேரமோ தெரியலே ,நேற்று  மாலை ஏழு மணிக்கு தடைப் பட்ட வலை ,இன்று ஒரு வழியாக சரியாகி விட்டது ..தினசரி 'கண்ணி 'அறுந்து விடக்கூடாது என்பதால் இதோ அவசரப் பதிவு :)

வாழும்போதே கணவனை சாகடித்த சாந்தி !

                                 ''தூக்கு மாட்டிக்கிட்ட சாந்தியோட புருஷன் 
...சாகிறதுக்கு முன்னாடி லெட்டர்லே என்ன எழுதி இருக்காராம் ?''
                           '' என் ஆன்மாக்கூட'சாந்தி 'அடையணும்னு  யாரும் 
வேண்டிக்காதீங்கன்னுதான் !''
அவரு நல்ல மனுசன்ங்க. என் சொத்தெல்லாம் வசந்திக்கு என்று எழுதி வெக்காமப் போனாறே.
  1. சரிதான் ,அப்படியொரு வச(ந்)தி அவருக்கு இருந்திருந்தால் தூக்குக் கயிறை ஏன் முத்தமிடப் போறார் ?
    நன்றி
    Delete
  2. அங்கே பூட்டிய கதவைத் திறக்கும் வசதி இல்லையாம்.
    நன்றி,
    கோபாலன்
    Delete
  3. அதுக்காக திறந்த வீட்டிலே நாய் மாதிரி நுழைய முடியுமா ?
  4. அய்யோ பாவம்! செத்தும் சாந்தி வேணாம் என்கிறார்:)
    ReplyDelete
    Replies
    1. அந்த பாடுபட்டிருக்கார்னு புரிஞ்சுக்க முடியுது !
    2. வாலிப வயதை அறிந்த தந்தை !

                       ''என்னங்க .நம்ம பையன் படிக்காம , பத்மாவையே சுத்தி சுத்தி வந்துக் கிட்டு இருக்கான் ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் பாருங்க !''
                   ''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''
      ''.........?''


    3. வெள்ளையர்[ஹேர் ]க்கும் உண்டா ஹேர் டை ?

      நடுத்தர வயதினரின் தலைகள் எல்லாம் 'கரு கரு 'வென்று ...
      நன்றாய் தெரிகிறது ...
      நாட்டிலே ஒரு வியாபாரம் நன்றாய் ஓடுகிறது !

34 comments:

  1. 1) ...ஹா....ஹா....ஹா... இப்படியும் சாந்தி மேல வெறுப்பா!

    2) :)))))))))))))))))))))

    3) அதெல்லாம் இப்போ சர்வ சாதாரணம்!

    ReplyDelete
    Replies
    1. 1.என்ன காரணமென்று சாந்தியிடம்தான் கேட்கணும் :)
      2.செக்கு மாடு சுற்றி வரலாம் ஊர் போய் சேராது என்று பாடத் தோணலையா :)
      3.நடுத்தர வர்க்கம் இதையாவது கருப்பாக்கட்டுமே :)

      Delete
  2. Replies
    1. காலையில், விடுதலை விடுதலை என்று பாடியதற்கும் நன்றி :)

      Delete
  3. வெள்ளையர் ஹேர் கருப்பா இருக்கணும்னு இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு நரைமுடி வெள்ளை ,வெள்ளையர்க்கு எப்படி நரைக்கும் ?அவர்கள் என்ன கலர் டை அடிப்பார்கள் ?இப்படி போகிறது என் மயிர்ப் பிளக்கிற ஆராய்ச்சி:)

      Delete
  4. 01. சாந்தியை சந்தி சிரிக்க வச்சுருப்பான் படுபாவி.
    02. இப்ப அப்படியெல்லாம் கிடையாது ஜி கன்னியை விட்டவன் இங்கே வந்தால் தண்ணியை புடிச்சுருவான்.
    03. ஜெர்மனியிலே பச்சை கலருல டை அடிக்கிறாங்கே...
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. 1.வாழும்போது செய்ய வக்கில்லாதவன் , செத்த பிறகா செய்வது :)
      2.அப்படின்னா தேறவே மாட்டானா :)
      3.பச்சைக் கலரா ,நல்லாவா இருக்கும் :)

      Delete
  5. Ha ha ! Late'ah Vanthalum Latest'ah Vanthu Engala Vazhakkampola Sirikka Vachittiga !!

    TM+

    ReplyDelete
    Replies
    1. லேட் ஆனாலும் ,அருள் புரிந்த கூகுள் ஆண் டவருக்கு நன்றி சொல்லணும் :)

      Delete
  6. பாவம் அண்ணார் அம்புட்டு துன்பம் அடைஞ்சிருக்கார்....

    மண்டைக்கு நாம போட்டாலும் டை தான்
    நாம மண்டையப்போட்டாலும் டை தான்.

    தம+1

    ReplyDelete
    Replies
    1. தான் பெற்ற துன்பம் தன் ஆத்மா பெறக் கூடாதுன்னு நினைக்கிறாரோ :)
      டையில்லாட்டி டையடா பாட்டுதான் நினைவுக்கு வருது :)

      Delete
  7. வணக்கம்
    சாந்தி சம்பவம்
    சுவரில் எறிந்த பந்து மீண்டும் திரும்பி வருவது போலதான்.... ஜி த.ம 7
    மற்றவைகளை இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பந்துலே ஓட்டைப் போட்டாலும் திரும்பி வருமா :)

      Delete
  8. சாந்தி மேல அப்படி என்ன கோபம் ஜி...
    செக்குமாடு செக்கோஸ்லாவியா...
    ஹேர்டை...
    ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது ஜி.

    ReplyDelete
    Replies
    1. சாந்தின்னு பெயரை வச்சுகிட்டு இப்படி படுத்தினா கோபம் வராதா :)

      Delete
  9. கண்ணி 'அறுந்து விடக்கூடாது என்பது முக்கியம் தலீவரே......!!!

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துரையைப் படித்ததும் தும்மலா வருது ,பொடி வச்சு எழுதி இருக்கீங்களே :)

      Delete
  10. ஏங்க இப்படி எனக்காகவே எழுதின மாதிரி இருக்கு.....என் மனைவி பெயர் சாந்திஸ்ரீனிவாசன் தாங்க......

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,நீங்களும் நம்ம பார்ட்டிதான் :)எதுக்கும் கொஞ்ச நாள் பூரிக்கட்டையை ஒளிச்சு வைங்க :)

      Delete
  11. சாந்தி...வேண்டாமுன்னு அவரு சாந்தி அடைந்து விட்டார்...ஹஹஹஆ......

    செக்கோஸ்லவாக்கியாவுக்கும் செக்கு மாட்டிற்கும் என்ன சம்பந்தம்னு தெரிந்து விட்டது.....))))))........

    நாட்டுல வியாபாரம் கருப்பா ஓடுதுன்னு சொல்லுங்க....

    தம 9

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அவர் வேண்டுதலைப் பார்த்தீங்களா :)

      அமாவாசைக்கும் ,அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம் தான் :)

      இது வெளிநாட்டு வங்கியில் உள்ள கருப்பு அல்ல :)

      Delete
  12. ஆத்மா சாந்தி - அந்த
    ஆளுடைய சாந்தி
    இரண்டும்
    வேறு வேறு ஆச்சே!

    ReplyDelete
    Replies
    1. தெரிந்து இருந்தாலும் சாந்தி இந்த பாடு படுத்துதே :)

      Delete
  13. ஆன்மா சாந்தியை அடையாம வேற யாரை அடையணுமாம்!

    ReplyDelete
    Replies
    1. காதலித்து கைபிடிக்காமல் போன வசந்தியை அடைய நினைப்பாரோ :)

      Delete
  14. ஹா... ஹா...

    கணினி சரியானது மகிழ்ச்சி ஜி...

    ReplyDelete
    Replies
    1. கணினிக்கு அடிமைகள் ஆகிவிட்டோமே ,வருத்தப் படுவதா ,சந்தோசப் படுவதா ஜி :)

      Delete
  15. http://dindiguldhanabalan.blogspot.com/2015/02/Study-Education.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் ,ரசித்தேன் ...போட்ட கருத்துரை வந்ததா, செக் பண்ணிக்கிறேன் :)

      Delete
  16. அது சரி சாந்தி இல்லைனா ஆன்மா சாந்தி அடையாதா என்ன ஜி!!ஹ்ஹஹ்

    செக்கு மாடு போல ஒரே இடத்த/பொண்ண சுத்தி சுத்தி வந்து...லோக்கல் போல ....இன்டெர்னாஷனல் ஆகத் தெரியாத பையனா இருக்கானே ஜி!

    கரு கரு எல்லாம் இல்லை ஜி இப்ப கலர் கலரா டை அடிக்குறாங்கோ! பாக்கவே பயமா இருக்குங்கோ...

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ,இருக்கும்போது கிடைக்காதது ,இறந்த பின் எதுக்கு :)

      அதுதானே ,இங்கே பத்மா என்றால் ,வெளிநாட்டுக்குப் போய் ஃபுளோராவை சுற்றி வர வேண்டாமா :)

      ஒரு சிலர் மண்டையைப் பார்த்தா 'டெர்ரர்'ராத்தான் இருக்கு :)

      Delete
  17. தந்தனா நா என்று சொல்லியே....ஜோக்காளி திரும்ப வந்துட்டாரு எல்லாரும் ஜோரா கைதட்டுங்க பார்ப்போம்....

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணே முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு இப்ப திரும்ப வந்துட்டேன் ,அதுக்கும் சேர்த்து கையை மட்டும் தட்டுங்க :)

      Delete