17 February 2015

தேவை ..இந்திய சாப்ட்வேர் மூளைகள் :)

-----------------------------------------------------------------

சுவரிலே முட்டிக்கணும் போல இருக்கா :)

            ''நிலவில் இருந்து பூமியைப் பார்த்தா சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''

       ''இதிலே என்ன அதிசயம் ,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே ?''


பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்!

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை 2014/15 ஆண்டு  ரூபாய் 26 295 கோடிக்கு விற்கப் படும் என்று கூறியிருக்கிறார் ...
தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் ...
இது மிகப் பெரிய உலக சாதனை என்று தண்ணி அடிக்காமல் கொண்டாட்டம் போட நினைக்கும் நேரத்தில் ...
இன்னும் ஏன் தமிழகத்தில் ஒரு சம்பத் பால் தேவி தோன்றாமல் இருக்கிறார் என்று புரியவில்லை ...
அவருடைய 'குலாபி கேங் 'அமைப்பைப் பற்றி இங்கே விழிப்புணர்வு இல்லாதது ஏன் என்றும் புரியவில்லை ...
அந்த பெண்மணி உத்தரபிரதேச கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ...
பன்னிரண்டு வயதில் திருமணமாகி .இருபது வயதுக்குள் ஐந்து குழந்தைகளைப் பெற்றவர் ...
தினசரி குடிகார கணவனின் அடி தாங்காமல் நொந்து கிடந்தார் ...
இதைப் போன்றே பல பெண்களும் இருப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்தார் ...
பத்து பெண்களை சேர்த்துக் கொண்டு அனைவருக்கும் பிங்க் நிற சேலை அணிவித்தார்  ...
கையில் பிரம்புகளுடன் கிளம்பிய அவர்கள் ...
குடிவெறியில் ஆட்டம் போடும் கணவன்மார்களை பின்னி எடுத்து விட்டார்கள் ...
பத்து பெண்கள் இன்று பல ஆயிரம் பெண்களுடன் ...
UP மாநிலம் முழுவதிலும் இந்த அமைப்பு பரவியுள்ளது ...
லஞ்ச பேர்வழிகள் ,அநியாயம் பண்ணும் போலீஸ்காரர்கள் ,சமூக விரோதிகள் மேலும் இவர்களின் பிரம்படி விழுகிறது ...
''காப்பாற்ற கிருஷ்ணபரமாத்மா வருவார் என்றிருந்தால் கிராமத்து பெண்கள் அம்மணமாய் தான் இருக்கணும் ,காக்கவேண்டியவர்களும் ,சட்டமும் பெண் களை பாலியல் பண்டமாகத்தான் பார்க்கிறது ,எங்களை சட்டம் காப்பாறாதபோது ,நாங்கள் எதற்கு சட்டத்தை மதிக்கணும் ?''...
என்று கர்சிக்கும் இவரை மையப் படுத்தி பிங் கேங் படம் தயாராகிறதாம் ...
படத்தின் நாயகி 'சோளிக்குள்ளே என்ன இருக்கு 'பாடல் புகழ் மாதுரி தீட்சீத்தாம் ...
அவராவது பிங்க் நிற சோளிக்குள் இருக்கும் பெண்ணின் வீரத்தை ...
குடிகார கணவன்களுக்கு புரிய வைத்தால் சரி !

மேலும் விபரம் அறிய ...http://www.gulabigang.org/?page_id=196

 அம்பாளடியாள் வலைத்தளம்17 February 2014 at 22:08
பாரதி கண்ட புதுமைப் பெண்ணை வாழிய வாழிய என்றே வாழ்த்துகிறது
மனமும் .அருமையான பகிர்வு! மன்னிக்கவும் சகோதரா இதுவரைத்
தங்களின் தளத்தில் என்னை இணைத்துக் கொள்ளத் தவறி விட்டேன்
இன்று தான் தெரிய வந்தது இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம்
தங்களின் ஆக்கத்தையும் வாசிக்கத் தவற மாட்டேன் .மிக்க நன்றி
பகிர்வுகளுக்கு .
ReplyDelete

Replies


  1. மன்னிப்பா ?அது என் அகராதிலேயே இல்லாத வார்த்தை என்று நான் அலப்பறை செய்ய விரும்பலே ,பலரும் பெயரைப் பார்த்து ஜோக்காளி வெறும் காமெடி பீஸ் என்ற நினைப்பில் நீங்களும் வராமல் இருந்து இருப்பீர்கள் ...இந்த பதிவின் தலைப்பைப் பார்த்துகூட சிலர் முகம் சுளிக்ககூடும் ,நல்ல விஷயத்தை தேன்தடவிய மாத்திரைப் போல் தருவதில் தவறில்லை என நினைக்கிறேன் !
  2.  ரொம்ப முக்கியம் நடிகையோட வயசு ?

              ''தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறா பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்றீங்களே ,ஏன் லாயர் ?''
            '' நடிகைளோட வயசைத் தெரிஞ்சுக்க முடியுமானு ஒருத்தர் கேட்கிறாரே !''

  3. தேவை ..சாப்ட்வேர் இஞ்சினீயர் மூளைகள்  :)


    மட்டன்  ஸ்டாலில் ...
    ஆட்டு மூளைக்கு கிராக்கி ,ருசியாக இருப்பதால் !
    அமெரிக்காவில் ...
    இந்திய 'மூளைக்கு 'நல்ல கிராக்கி ,மலிவாக கிடைப்பதால் !









34 comments:

  1. மூளை ஒப்பீடு அருமை
    சீனச் சுவரளவு உங்கள் தொடர் சிந்தனையும்
    உயர்ந்து வருவது மகிழ்வளிக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்க kfc சிக்கனை சாப்பிட்டதால் உதித்த சிந்தனை முத்து(?)இது :)
      நீண்ட நாள் கழிச்சு வந்திருக்கீங்க ,நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைன்னு நினைச்சுக்கிறேன் :)

      Delete
  2. Replies
    1. த ம வை இப்படி தனியே காட்டும் உங்க பாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)

      Delete
  3. 1. ஆ....கடவுளே...என்னைக் காப்பாத்து!

    2. இவ்விவரம் அரைகுறையாய்ப் படித்திருந்தேன். ம்ம்ம்... என்ன செய்து என்ன? தமிழ்நாட்டிலிருந்து இனி டாஸ்மாக்கை விரட்ட முடியுமா?

    3. த.அ.உ. சட்டத்தைத் திருத்தி அமைக்கணும். இதுமாதிரி கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுக்கணும்!

    4. :)))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. 1.கொஞ்சமா முட்டிக்கிட்டு இருக்கக்கூடாதா ,இப்படியா வலிக்கிற மாதிரி முட்டிக்கிறது :)
      2.பேசாமல் டாஸ்மாக் நாடு என்று பெயரை மாற்றிடலாம் :)
      3.இதுக்கு உதவாத சட்டம் எதுக்கு :)
      4.உண்மைதானே :)

      Delete
  4. தலை வலிக்கிறது ஜி... சுவரில் முட்டி...!

    ஹா... ஹா....

    ReplyDelete
  5. உத்திரப் பிரதேசப் பெண்கள் தமிழ் நாட்டிலும் தோன்ற வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் தோன்றுவார்கள் ,இப்போதானே பாவ்பாஜி சாப்பிட ஆரம்பித்து இருக்கிறார்கள் :)

      Delete
  6. வீரப்பெண்மணி வாழ்க.....
    இந்திய மூளை...அருமை....
    தம5

    ReplyDelete
    Replies
    1. கண்ட கண்ட மசாலா படங்கள் தமிழில் டப் செய்யப் பட்டாலும் ,இது போன்ற படங்கள் கண்டுகொள்ளப் படுவதில்லை :)

      Delete
  7. மலிவா..கிடைத்தால் கிராக்கி ஏற்படாதே.....!!!! மலிவா ..கிடைக்கும் இந்திய மூளைக்கு கிராக்கியா....????

    ReplyDelete
    Replies
    1. அந்த பொருளாதார விதி ,இந்திய மூளைக்கு பொருந்தாது :)

      Delete
  8. உத்தரப் பிரதேசத்தின் பிரம்பு அளவுக்கு இல்லாவிட்டாலும் -
    பூரிக் கட்டை தமிழ்நாட்டில் வெகு பிரசித்தம் ஆயிற்றே!..

    வள்ளுவர் இரண்டடியில் சொல்வது புரியாவிட்டாலும் -
    ஒரே அடியில் புரியவைத்து விடும் வனிதாமணிகள் இருக்கின்றார்களே!..

    இதிலே என்ன ஒரு முக்கிய விஷயம்..ன்னா - மனிதாபிமானம் ஜாஸ்தி!..
    அப்படியே பக்கத்து வீட்டுக்குத் தெரிஞ்சாலும் -
    வீட்டுக்கு வீடு வாசப்படி தானே..ன்னு யாரும் கண்டுக்கிறதில்லை!..

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டைகள் ஒண்ணாச் சேரலையே :)
      குடி மட்டும் இல்லேன்னா என் புருஷன் தங்கம்னு சொல்லிக்கிறவங்க ரொம்பப் பேரு :)

      Delete
  9. அதே சீனப்பெருஞ்சுவர்ல இருந்து பார்த்தா , சூரியன் தெரியும் . ஆனா , சூரியன்லருந்து சீனப்பெருஞ்சுவர பாக்கமுடியுமா ஜீ ?
    தேவி , காளியானால் தான் , காலிப்பயல்களின் களவாணித்தனம் குறையும் .
    தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டலாவது , கார வச்சிருந்த சொப்பனசுந்தரிய யார் வச்சிருக்காங்கனு தெரியுமா ?

    தம+

    ReplyDelete
    Replies
    1. சூரிய தீக்குழம்பை வெளியே கடாசிவிட்டு சொல்லுங்கள் ,அப்புறமா ,தெரியுதான்னு பார்த்து சொல்கிறேன் :)
      தண்ணி அடிக்க களவாடுவது பெருகித்தான் வருகிறது :)
      நிச்சயமா தெரிஞ்சிக்கலாம் உடனே வாங்க ,நல்ல லாயரைப் பார்க்கலாம் :)

      Delete
  10. குடி பற்றி சீரியசாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். எனக்கு மதுக் கடைகளை மூட வேண்டும் என்று சொல்லும் ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் ஏன் அறப் போராட்டத்தில் இறங்க கூடாது. என்று கேட்கத் தோன்றுகிறது. நான் சந்தித்த பல தென் மாநிலத்தவர்கள் அவர்களின் மாநிலங்கள்தான் மது அருந்துவதில்முதலிடம் வகிக்கிறார்கள் என்று ஜம்பமாகச் சொல்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. போதை தெளிந்து எழுந்து பார்த்தால் ,குப்பைத் தொட்டி பக்கத்தில் கிடந்து இருக்கேன்னு தங்களை தாங்களே பாராட்டிக் கொள்ளும் குடிமகன்களும் இருக்கிறாங்களே :) இதிலுமா ஜம்பம் ?

      Delete
  11. 01. அப்ப கணக்கு சரிதான்.
    02. வரவேற்க வேண்டிய விசயமே.. இந்த மா3 ‘‘வீச்சருவாள்’’ வீராயிகள் தமிழ் நாட்டுக்கும் வரவேண்டும்.
    03. வழக்கறிஞர் சகி ‘’லா’’வை படிச்சவரோ....
    04. உண்மை உண்மை பகவான்ஜி.

    தமிழ் மணம் 100 ஆனா, முடியலே அதனாலே 8.

    ReplyDelete
    Replies
    1. 1.போட்ட மனக் கணக்கு என்னைக்கு தப்பாச்சு:)
      2.வீச்சருவா வீராயி, பசி பரமசிவன் ஜி தளத்திலும் வந்திருந்தாங்களே ,உங்க சொந்தமா :)
      3.கனவுக் கன்னி என்றும் கிழமாவதில்லையே :)
      4.வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் நீங்களே சொல்லும்போது பொய்யாகுமா :)
      நல்ல வேளை,108 வராம போச்சே :)

      Delete
  12. இந்திய மூளை மலிவுதான்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாலைந்து நாமும் வாங்கி வைத்துக் கொள்ளலாமா :)

      Delete
  13. //UP மாநிலம் முழுவதிலும் இந்த அமைப்பு பரவியுள்ளது ...// //கர்சிக்கும் இவரை மையப் படுத்தி பிங் கேங் படம் தயாராகிறதாம்//

    நம் தேசத்துப் பெண்கள் முழு விடுதலை பெறும் காலம் விரைவில் வரும் என்பதற்கான அறிகுறி இது.

    நல்ல தகவலைத் தேடி எடுத்துத் தந்திருக்கிறீர்கள் பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. முதலில் ஆண்கள் மதுவின் பிடியில் இருந்து விடுதலை பெறும் காலம் வரட்டுமே :)

      Delete
  14. நிலவிலிருந்து பார்த்தா எங்க ஊர் டாஸ்மாக் கடை தெரியுமா பகவான்ஜி?

    ReplyDelete
    Replies
    1. டாஸ்மாக் கடை மட்டுமில்லே ,திரும்பவும் பயன்படுத்த ' யூஸ் அன் துரோ ' கப்புகள் அங்கே கழுவப் படுவது கூடத் தெரியும் :)

      Delete
  15. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர்லே டாஸ்மாக் கடை இருக்கா ரூபன் ஜி ?

      Delete
  16. அருமையான ஜோக்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அன்பான கருத்துக்கு நன்றி :)

      Delete
  17. சீனப்பெருஞ்சுவலிருந்து நிலா தெரியும்! ஆஹா... நல்லாத் தான் கொடுக்கறீங்க டீடெய்லு!

    ReplyDelete
    Replies
    1. நிலவில் இருந்து பார்த்தால் தெரிவது அல்லவா டீடைல்லு:)

      Delete