12 February 2015

காஜல் அகர் 'வால்' மனதில் இருக்கும் வரை :)

-----------------------------------------------------------------------------

ராஜா ரொம்பத்தான் நொந்திருக்கிறார் :)                

            ''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு நாம ஏன் போகணும் ?''

             ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''

நடிகை காஜல் அகர் 'வால்' மனதில் இருக்கும் வரை :)

             ''ஊழலுக்கு எதிரா போராட்டம் பண்ணி அரவிந்த் கேஜ்ரி 'வால்' டெல்லியில் 
ஆட்சியில் இருக்கார் ,தமிழ்நாட்டிலே மட்டும் ஏன் இப்படி ஒரு அதிரடி மாற்றம் வர மாட்டேங்குது ?''
           ''நம்ம இளைஞர்கள் மனதில் காஜல் அகர் 'வால் 'ஆட்சியில்லே
 நடந்துகிட்டு இருக்கு ?''


வால் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் அரவிந்தை திரைப்படங்களிலும் காஜலை அரசியலிலும் பார்க்கலாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடுதானே.

கோபாலன்
ReplyDelete

Replies

  1. ஜனநாயகம் என்றாலும் மோசமான ஜனநாயகமா இருக்கே ?
  2. இன்றைய இளைஞர்கள் நீதிபதியின் கணிப்பு !

                 ''இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை நான்கு பெட்டிகளில் அடங்கி விடுகிறது என்று முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லி இருக்காரா ...அதென்ன நாலு பெட்டி ?''
               ''டிவி,ரேடியோ ,கம்ப்யூட்டர், சவப்பெட்டியாம் !''


  3. சந்துரு எப்பவும் உண்மையத்தான் சொல்வார். ஆனா, இதுல ரேடியோவுக்குப் பதிலாக செல்பேசி (சின்னப்பெட்டியாக இருந்தாலும்) வச்சிக்கலாம்..
    ReplyDelete



    Replies


    1. இதை 'வச்சுகிறதில்' கட்டின பெண்டாட்டிக்கு கூட ஆட்சேபம் இருக்க முடியாது ! தாராளமாய் வச்சுக்கலாம் !
    2. மனைவி என்றதும் ஞாபகம் வருவது:)

                   ''என்னங்க ,நீங்கதான் மந்திரியாச்சே ,ஏதாவது ஒரு திட்டத்திற்கு 
      1. என் பேரை வைங்களேன் !''
          1. ''அடுத்து புயல் வரும்போது ஞாபகப் படுத்து !''


    3. பாடல் அருமை !படத்தின் பேர் கொடுமை !



      எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்பது 
      ஆயிரத்தில் ஒரு வார்த்தை !
      'ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் ' என்று தொடங்கும் இனிமையான 
    4. பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர்  ...
    5. கொம்பேறி மூக்கன் !
















  • 33 comments:

    1. 01. மன்னர் சக்களத்திகளை அனுப்பி வைக்கலாமே,,,,
      02. ரெண்டு வாலும் சேர்ந்து பால் போடாமல் இருந்தால் சரி.
      03. வப்பாட்டி கிட்டே அடங்காமல் இருக்கானே அதுவே பெரிய விசயம்
      04. பொண்டாட்டி பேரு ரீட்டாவா ?
      05. சினிமா நாயகன் உண்மையிலேயே வில்லனாக இருக்கிறதில்லையா ?

      ReplyDelete
      Replies
      1. தமிழ் மணம் - ஐந்தருவி

        Delete
      2. 1.தங்களுக்குள் சண்டைப் போட்டுக்கிற சக்களத்திகள் யாரும் சண்டைக் களத்திற்கு வந்ததாய் சரித்திரம் இல்லை :)
        2.கோல்கீப்பரா நம்ம கூப்பிடாம இருந்தாலும் சரிதான் :)
        3.மேன்மைக்குரிய கனம் நீதிபதி அவர்களே ,நோட் திஸ் பாய்ன்ட்:)
        4.அப்படின்னா ,ரிவால்வர் இல்லே தூக்கியிருப்பாங்க :)
        5.வில்லன் ,நம்பியார் ஒழுக்கமாய் வாழ்ந்ததைப் போலவா :)

        Delete
    2. தமிழ்நாட்டிலே காஜல் அகர் வால் ஆட்சி நடந்துகிட்டு இருக்கா! :)

      ReplyDelete
      Replies
      1. சென்ற ஆண்டு , அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்தபோது காஜல் ,இப்போ ...ஹிஹி ...சொன்னாதான் தெரியுமா :)

        Delete
    3. 1. இந்தச் சண்டைக்கு அந்தச் சண்டை தேவலாம் போல!

      2. அதானே... இங்கே அதுபோல ஒரு அதிகாரி இல்லை போல.

      3. பணப்பெட்டி லிஸ்ட்டில் இல்லையா?

      4. புயலுக்குத்தான் மனைவி பெயரா... ஹா...ஹா..ஹா..

      5. ஹா..ஹா..ஹா..


      ReplyDelete
      Replies
      1. 1.சக்களத்தி சண்டையை அடக்க முடியாதவர் போரில் ஜெயித்து விடுவாரா :
        2.இருக்காங்க ,அரசியலுக்கு வர தயங்கிகிட்டு:)
        3.சந்தோஷப் படலாம் :)
        4. இனி ,புயலுக்கு பிந்தைய அமைதி இருக்குமா அவர் வாழ்வில் :)
        5.ரோஜா ஒன்று முத்தம் கேட்டதா:)

        Delete
    4. ஹா ஹா ஹா ! அனைத்தும் அருமை அண்ணே ! சென்ற ஈஆண்டு கெஜ்ரிவால் ஜோக்கு , இந்த வருஷமும் செம டைமிங்கா இருக்கே ! இதுதான் தொலைநோக்குப்பார்வையோ ?

      தம+

      ReplyDelete
      Replies
      1. செம டைமிங்குதான் ,A K வந்த மாதிரி K A யும் முன்னணிக்கு வருவார் :)

        Delete
    5. அருமை பகவானே..
      வலையுலகின் முதல்வரே... உமது நகைப்பணி தொடரட்டும்

      ReplyDelete
      Replies
      1. கோவில் வேண்டுதல் போலிருக்கிறதே :)

        Delete
    6. Replies
      1. அப்படித்தான் ,நம்ப முடியலே ...ரோஜா கொம்பேறி மூக்கனிடம் முத்தம் கேட்பது :)

        Delete
    7. அனைத்துமே அசத்தல்....
      தம 7

      ReplyDelete
      Replies
      1. அரசருக்கு அந்தப்புரமே அனத்தலாய் இருக்கும் போலிருக்கே :)

        Delete
    8. அட...அந்தப்புரத்திலுமா....? அந்தச் சண்டை....!!!!

      ReplyDelete
      Replies
      1. எந்தப் புறமாய் இருந்தால் என்ன ,சண்டையிடாத சக்களத்திகள் உண்டா :)

        Delete
    9. ''அந்தப்புரத்தில் நடக்கிற சண்டையைக் காணச் சகிக்கலையே!''
      அப்படித்தானிருக்கும்...

      மதுரையில் நாம் நேரில் சந்திக்க விரும்பியும்
      எம்மைக் கடவுள் தடுத்துவிட்டார் போலும்
      எனக்கு மிகவும் துயர் தான் எஞ்சியது!

      ReplyDelete
      Replies
      1. அன்று ,விமான நிலையத்தில் ..உங்களால் வெளியே வர முடியாத சூழ்நிலையாய் இருக்குமென்று ,தெரிந்த ஒருவரின் உதவியால் உள்ளேயும் வந்து தேடிப் பார்த்தோம் ...வந்திறங்கிய பயணிகள் பட்டியலிலும் உங்கள் பெயர் இல்லையென்று தெரிந்ததும் எமக்கும் துயர்தான் எஞ்சியது !

        Delete
      2. விமான நிலையத்தின் வெளிச்செல்லும் வாசலில் நின்று பார்த்தேன். அதன் முன்னேயுள்ள உணவுச் சாலையில் உணவருந்தியாறு பார்த்தேன்.
        சந்திக்கமுடியவில்லை.
        அடுத்த ஆண்டு சந்திப்போம்.

        Delete
      3. #எம்மைக் கடவுள் தடுத்துவிட்டார் போலும்#
        அப்போதாவது கடவுள் தடுக்காமல் இருப்பாரா :)

        Delete
    10. அருமை
      ரசித்தேன் நண்பரே
      தம +1

      ReplyDelete
      Replies
      1. ரசித்ததற்கு காணிக்கையாய் வாக்கிட்டமைக்கும் நன்றி :)

        Delete
    11. அருமையான ஜோக்ஸ்! நன்றி!

      ReplyDelete
      Replies
      1. ரசித்ததற்கு நன்றி !

        Delete
    12. வணக்கம்
      சிறப்பான நகைச்சுவை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி...
      த.ம 11

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete
      Replies
      1. ரசித்ததற்கு நன்றி !

        Delete
    13. அனைத்தும் ரசிக்க வைத்தது,.

      ReplyDelete
      Replies
      1. ரசித்ததற்கு நன்றி !

        Delete
    14. அந்தப்புரத்து அக்கப்போர் உண்மைப் போரை விட அதிக பிரச்சனை தான்....

      ReplyDelete
      Replies
      1. அரசருக்கு புரிந்தது ,உங்களுக்கும் புரிந்து விட்டதா :)

        Delete
    15. அனைத்தும் அருமை!

      ReplyDelete
      Replies
      1. அன்பான கருத்திற்கு நன்றி :)

        Delete