ஆசை மட்டுமா நூறு வகை ?
''உங்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து ஒரு மாசமாச்சே , என்ன நோய்னு இன்னுமா கண்டுபிடிக்க முடியலே ?''
''என்ன நோய் இல்லைன்னுதான் கண்டுபிடிக்க முடியலையாம் !''
பிணமும் தேடுமோ துணை (வி )யை ?
''உன் வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக்கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
''சனிப் பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''
மீண்டும் வருமா பொற்காலம் :)
முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி ...
அது அந்த காலம் !
விலைவாசி விண்ணில் பறக்க
இது வியா 'பாரி 'களின் காலம் !
அச்சோ பாவம்!! அவருக்கு நம்ம விவேக் சொல்வாரே "ஒரே மருந்து" அதை தான் கொடுக்கணும் பாஸ்!
ReplyDeleteஒரே அடியாக போய் சேர்ந்து விடுவாரே :)
Deleteஒரு மாசம் "நோய்" சமாளித்திருக்கிறது...? ஹிஹி...
ReplyDeleteநம்ம யாழ் பாவாணன் சொன்னது சரிதானா :)
Delete''என்ன நோய் இல்லைன்னுதான் கண்டுபிடிக்க முடியலையாம்!''
ReplyDeleteஅப்ப
''சனிப் பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே, டாக்டர்!''
இப்ப
எனக்குப் புரியுது!
என்ன புரியுது ,அடுத்த ஞாயிற்றுக் கிழமை பால் ஊற்ற வேண்டியிருக்கும் என்றா :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
பொற்காலத்தை தானே :)
Deleteஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதாவது பழமொழி இருக்கும் ஆப்பரேஷன் என்றாலே சாவுதான் நினைவுக்கு வருகிறதா.
ReplyDeleteமரண பயத்தை எல்லோராலும் வெல்ல முடியலையே :)
Delete01. டாக்டருக்கு வேற பேஷண்டு எவனும் மாட்டலையோ ?
ReplyDelete02. மனைவினா இப்படித்தான் இருக்கணும்.
03. கவிதை அருமை ஜி வாழ்த்துகள்
(உங்களோட இந்தக்கவிதை பாரி அறிவாளியா ? அப்படினு என்னைக் குழப்பிடுச்சு அதனாலே இதற்காகவே ஒரு மினிபதிவு போடுறேன். ஐடியா தந்த உங்களுக்கு நன்றி)
தமிழ் மணம் 4
1.சிக்கும் வரைக்கும் ஆராய்ச்சி செய்துகிட்டே இருக்கட்டும் :)
Delete2.இவரோட இங்கே வாழ்ந்ததே போதும்னு நினைக்கிறாரோ :)
3.பாரியின் கருணை மனத்தை அறிவு கொண்டு அளக்கக் கூடாதே :)
துணை இருக்கிறவங்க... ஏன்? தனியா போகனுமமுங்கிறேன்....
ReplyDeleteமேலே போறதுக்கும் துணை வர வேண்டுமா துணைவி ?அந்தக் கொடுமை ஒழிக்கப்பட்டு பல வருடம் ஆச்சே :)
Deleteகொடி முல்லைக்கு தேர் தந்தது மன்னராட்சி
ReplyDeleteகோடானுகோடி பேருக்கு ‘பார்’ தந்தது மக்களாட்சி
இதுக்குத்தானா பாடுபட்டார்கள் ,சுதந்திரப் போராட்ட வீரர்கள் :)
Deleteசூப்பர் அண்ணா !
ReplyDeleteதம+
ஆசை நூறு வகை ... பாட்டு உங்களுக்கும் பிடிக்கும்தானே :)
Deleteஆசை மட்டுமா நூறு வகை இல்லை..அதுக்கு மேலே........
ReplyDeleteஅதுக்கும் மேலே என்றால் பேராசை ஆச்சே :)
Deleteசிரித்து வயிறுவலி வந்தால் தளம் பொறுப்பேற்காது என்ற ஒரு எச்சரிக்கைத் தகவல் உங்கள் தளத்திற்கு இருந்தால் நல்லதுதான்.
ReplyDeleteஹ ஹ ஹா
த ம கூடுதல் 1
இந்த வயிறு வலி வந்தால் நல்லதுதானே செய்யும் ?
Deleteவணக்கம்
ReplyDeleteஒவ்வொரு நகைச்சுவையும் கருத்துள்ள வகையில் இரசித்து சிரிக்கும் வகையில் உள்ளது. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசனையான கருத்துக்கு நன்றி :)
Deleteஹாஹாஹா! ரசித்தேன்!
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி :)
Deleteஅனைத்துமே கலக்கல் ரகம்...ஹஹஹஹ் செம....
ReplyDeleteஜி ப்ழைய காலத்திலும் இந்தக் கள்ளு எல்லாம் உண்டே ஜி...என்ன பேரு வேணா வேற சோம பானம், சுரா பானம்....அப்புறம் நாட்டுப் புறக் கள்ளு,இளனீ, பதனீ எல்லாம் இட்டு செய்வது....பூமிக்கடியில் பெரிய ஜாடிகளில் திராட்சை இறக்கி வைத்து புளிக்க வைத்து பீர் செய்வது என்று பல அப்போதும் உண்டு ஜி...என்ன இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சமாகக் தெரிகின்றது அவ்வளவே இல்லையோ ஜி?!!!
போதை தருவன அன்றும் இருந்திருக்கலாம் ,ஆனால் போதைக்கு மக்களை அடிமையாக்கி கஜானாவை நிரப்புவது இந்த காலம்தானே :)
Delete