16 November 2014

சோனாவின் டிஷ்யூக்கு பதிலடி!

அன்புள்ள வலையுலக உறவுகளே ,
நேற்று நம்ம கில்லர்ஜியின் கனவில் காந்திஜி வந்து கலக்கி இருக்கிறார் ...அந்த கலக்கலை நீங்களும் ரசிக்க இதோ லிங்க்>>>http://killergee.blogspot.in/2014/11/1.html

------------------------------------------------------------------------------------------------------------

கிளினிக் வாசல்லே ஆட்டோ இதுக்குத்தானா ?

             ''இப்படியே உட்கார்ந்துகிட்டு இருந்தா சுகப் பிரசவம் ஆகாது!''
                ''நடந்துகிட்டே இருக்கவா டாக்டர் ?''
               ''ஊஹும் ..வாசல்லே நிற்கிற ஆட்டோவிலே ஒரு மணி நேரம் சுத்திட்டு வாங்க !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தங்க நகைங்க HALL MARK தானா நல்லாப் பாருங்க !

                    ''HALLMARK நகைன்னு நம்பி வாங்கின நகைங்க கறுத்துப் போச்சு !''
                  ''கடையிலே போய் கேட்க வேண்டியது தானே ?''
                 ''நல்லாப் பாருங்க ,நாங்க HALF MASS ன்னுதான் அதிலே போட்டு இருக்கோம்னு சொல்றாங்க !''

உப்பு விலை ஏறினால் உடம்புக்கு நல்லதா ?

மீண்டும் ஒரு உப்பு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் போலிருக்கிறது ...
மிசோரம் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் உப்பு கிலோ ரூபாய் முன்னூறாம்...
உப்பே கிடைக்காது என்று வதந்தி பரவியதால் இந்த விலையேற்றமாம்...
வதந்தியின் வேகம் மங்கள்யான் ராக்கெட்டுக்குகூட  இருக்குமா என்று தெரியவில்லை ...
ஏற்கனவே கோழிக்கறி விலையே கிலோ ரூபாய் எண்பது விற்கும் போது  வெங்காயம் விலை நூறானது ...
இப்போ உப்பு விலை முன்னூறு என்றால் ...
ஒருகாலத்தில் உப்புதான் சம்பளமாய் தரப் பட்டதாம் ,இப்போ சம்பளமே உப்பு வாங்கக்கூட காணாது  போலிருக்கே ...

உப்பு பதுக்கியவர்களைக் கண்டு பிடித்து 'உப்புக் கண்டம் 'போடுமா அரசு ?
இல்லை ,உப்புக்கு சப்பாணியாய் ...வதந்தி பரப்பியோர் என்று நாலு பேரை கைது செய்துவிட்டோம் என்று கடமையை முடித்துக் கொள்வார்களா ?
சாதா உப்பு விலையை கேட்கும் போதே அயோடெக்சை தேடவேண்டியிருக்கிறது  ...
அயோடின் உப்பு என்றால் ஐந்நூறு ரூபாய் ஆக்கி விடுவார்களோ ?
உப்பின்றி சாப்பிட நேர்ந்தால் மக்கள் வரும் தேர்தலில் சொரணை உள்ளவர்கள் என்பதைக் காட்டுவார்கள் !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

சோனாவின் டிஷ்யூக்கு பதிலடி!

                                    'அந்த நடிகையோட  'டிஷ்யூம் ,டிஷ்யூம் 'ன்னு சண்டை போடணும்போலிருக்கா  .ஏன்?''
                   ''ஆம்பளைங்க  எல்லாம் எனக்கு டிஷ்யூ பேப்பர் மாதிரிதான்னு பேட்டி கொடுத்து இருக்காங்களே!''


                                                             

30 comments:

  1. உப்பு விலை முன்னூறா?
    டிஷ்யூ பேப்பர்
    ஆட்டோ பிரசவம்
    ஹால்ப் மாஸ்
    கலக்குறீங்க ஜீ....

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சேர்ந்த கலக்கல்தான்,கலங்காமப் படித்ததற்கு நன்றி !

      Delete
  2. ஆட்டோவிலே ஒரு மணி நேரம் சுத்திட்டு வந்தா சுகப் பிரசவம் ஆகுமா? நடிகர் விவேக் ஒரு படத்தில இப்படி நடித்த நினைவு வருகிறதே!
    HALLMARKன்னு நம்பி HALF MASS ன்னுதான் ஆயிட்டா...
    ஒரு காலத்தில் உப்புத் தான் சம்பளமாய்த் தரப்பட்டதாம், இப்போ சம்பளமே உப்பு வாங்கக்கூடக் காணாது போலிருக்கே ...
    எல்லாம் கால மாற்றமோ?
    ஆம்பளைங்க எல்லாம் டிஷ்யூ பேப்பர் மாதிரிதான்னு என்றால்
    பொம்பளைங்க எல்லாம் என்ன மாதிரி?
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. பொம்பளைங்க என்ன மாதிரின்னு அவர்களே சொன்னால் கேட்டுக்கலாம் :)
      நன்றி

      Delete
  3. ஆட்டோ காமெடி..
    கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. சும்மாவே ஆட்டோ அதிருது ,மழை பெய்து மோசமாய் இருக்கும் இப்போதைய சாலையில் போனால் ,ஆட்டோவிலேயே பிரசவம் நிச்சயம் :)
      நன்றி

      Delete
  4. சுகப் பிரசவத்தையும் கத்தி போட்டு காசு பார்க்கலாம்னு மருத்துவர்கள் ஆகிவிட்ட இந்த காலத்தில் ஆட்டோவில் போய் பிரசவம் ஆகும் என்று அக்கறையாக சொன்ன மருத்துவரைப் பாராட்டத்தான் வேண்டும்!!

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆட்டோவும், டாக்டர் வாடகைக்கு விடும் ஆட்டோவா இருக்குமாங்கிற சந்தேகம் வருதே :)
      நன்றி

      Delete
  5. Replies
    1. நல்ல வேளை,ஆபரேசன் தியேட்டரில் குலுக்குவதற்கு ஒரு ஆட்டோ வைத்துக் கொள்ளாமல் போனார் :)
      நன்றி

      Delete
  6. கனவில் காந்தி பற்றி கரந்தையார் பதிவில் பார்த்தேன்.

    இது நல்ல டீலா இருக்கே!

    அட, உண்மையா இருக்காங்களே...

    உப்பு விலை ஏறுதா.... அட!


    ReplyDelete
    Replies
    1. காந்தியாரிடம் என்னையும் அவர் மாட்டி விட்டிருப்பதையும் பார்த்து இருப்பீர்களே !

      புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் போட்டுக் கொண்டிருப்பார்களோ :)

      ஆனால் தரத்தில் உண்மையா இல்லையே :)

      திடீர் திடீர் என்று என்ன விலை ஏறும்னு யாராலும் சொல்ல முடியலே :)

      நன்றி

      Delete
  7. முதல் ஜோக் சூப்பர்! மற்றவையும் சிறப்பே! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சூப்பரான கருத்துக்கு என் சிறப்பான நன்றி !

      Delete
  8. நாம ரெண்டு பேரும் கரந்தை அண்ணாவால் மாட்டியிருக்கோம்:)
    ஜோக் பயங்கரமா இருக்கு பாஸ்!!!

    ReplyDelete
    Replies
    1. மாட்டிகிட்ட நாம இரண்டு பேரும் 'காந்திஜி 'பதிவு போட்டு தப்பித்தும் விட்டோமே :)
      நன்றி !

      Delete
  9. உப்பு ரொம்ப தப்பு.
    தம5

    ReplyDelete
    Replies
    1. தப்புதான் ,மீண்டும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்து விடலாம் :)
      நன்றி

      Delete
  10. அதான் பல ஆட்டோவில பிரசவதிற்கு இலவசம்னு போட்டுருக்காங்களோ?!!!

    நல்ல மாஸ்..ஹஹஹஹஹஹஹ்

    உப்பு விலை கூட ஏறுதா!? ஆஹா அப்ப பிபி பேஷன்ட்ஸ் கு நல்லதுனு சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. நல்ல காரியம் ஆட்டோவில்நடந்தாலேன்னா ,ஆஸ்பத்திரியில் நடந்தாலேன்னா :)

      மாஸ் இப்படியும் வேலைக் காட்டுதே :)

      பி பி இல்லாதவங்களுக்கு பிரசரை கூட்டுதே :௦நன்றி

      Delete
  11. Hallmark ஜோக்கை அதிகமாகவே ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்கள் கனவில் வந்த காந்தியை ரசித்தேன் !
      நன்றி

      Delete
  12. எமது ‘’கனவில் வந்த காந்தி’’ பதிவை விளம்பரப்படுத்தி இந்த ‘’விளம்பரம் தலையில் விழும் பாரம்’’ அல்ல ! என்பதை வலியுருத்தி இனிய நண்பர் பகவான்ஜி கில்லர்ஜியை கிளர்ச்சியடைய வைத்து விட்டீர்கள் அதற்க்கு தங்களுக்கு ஞானி ஸ்ரீபூவுவின் ஆ(ச்)சி உண்டாகட்டும்.

    01. நம்ம ஊரு ஆட்டோவுல ஏறுனா சுத்திட்டு எங்கே ? வர அப்படியே வீட்டுக்கு போக வேண்டியதுதான்... புதுக்குழந்தையோட.

    02. ஆஹா, இப்படியுமா ? நடக்குது.

    03. இதுகூட அரசியல்வாதிகளுக்கு சா(ஜா)தகம்தான் மக்கள் சும்மாவே 500 ரூபாய்க்கு வாயப்பொழந்துக்கிட்டு ஓட்டுப்போடுறாங்க இனி அடுத்த தேர்தல்ல ஒரு ஓட்டுக்கு ரெண்டு பாக்கெட்டு உப்பு.
    (அது சரி நான் காந்தி பதிவு போடவும் நீங்க அவரோட உப்பு சத்தியாக்கிரகத்தை எடுத்துட்டியலே. இதுதான் கில்லர்ஜிக்கும், பகவான்ஜிக்கும் உள்ள ஒற்றுமை)

    04. எப்படி கசக்கி வீசிடுறதா ?

    பகவான்ஜி, தங்களது பதிவின் எழுத்துக்கள் கடந்த நான்கு நாட்களாகவே ஒன்றின்மேல் ஒன்றாக வருகிறது படிப்பதற்க்கு சிரமாக இருக்கிறது கவனிக்கவும் கில்லர்ஜி..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கனவில் வந்த காந்தி பலர் கனவிலும் வந்து கலக்கிகிட்டு இருக்காரே !
      எழுத்துருவை கவனிக்கிறேன் கில்லர்ஜி!
      நன்றி

      Delete

  13. ஆட்டோ மேட்டரை, நீங்கள் நகைச்சுவையாக சொன்னாலும், அதில் உண்மை இருக்கிறது. சிறுநீரகத்தில் கல் பிரச்னையால் கடும் வலியில் அவதிப்பட்ட ஒருவர், ஆட்டோவில் அரை மணி நேரம் பயணித்து மருத்துவமனை வருவதற்குள் வலி சரியாகி விட்டது. பரிசோதித்த எனக்கு நன்கு அறிமுகமான டாக்டர், கல் கீழே இறங்கி விட்டதற்கு, ஆட்டோ பயணம்தான் காரணம் என்றார்.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லேயே ,உண்மையிலே இப்படி ஒரு தீர்வு கிடைக்கிறதா :)
      நன்றி

      Delete
  14. ஆட்டோ நகைச்சுவை உண்மைதான்!

    ReplyDelete
    Replies
    1. சமயத்தில் ஆட்டோ குலுக்கலும் நன்றுதான் போலிருக்கே :}
      நன்றி

      Delete
  15. உப்பின்றி சாப்பிட நேர்ந்தால் மக்கள் வரும் தேர்தலில் சொரணை உள்ளவர்கள் என்பதைக் காட்டுவார்கள் !-----அப்படியும் சொரணை வரவில்லையென்றால்..........????

    ReplyDelete
    Replies
    1. சொரணை உள்ளவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள் ,ஆனால் ,வந்த புதிய ஆட்சியும் தமிழர்கள் சொரணையை சோதனை செய்யத் தொடங்கி விட்டதே :)
      நன்றி

      Delete