9 November 2014

மனைவி தண்டம்னு சொல்லுறதும் சரிதானா ?

 -----------------------------------------------------------------------------------
இன்னிக்கு ,NVபிரியர்களுக்கு முதல் படையல் !
       
                      ''உங்க உடம்புத் தேற 'சுவரொட்டி 'யை நல்லா அரைச்சுக் கொடுக்கணும்னு உங்க மனைவிகிட்டே சொன்னேன் ,அதுக்கென்ன இப்போ ?''
           ''கொஞ்சம் விளக்கமா சுவரொட்டின்னா ஆட்டு மண்ணீரல்னு சொல்லி இருக்கக் கூடாதா ,டாக்டர் ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ஏற்கனவே மனைவி தண்டம்னு சொல்லுவா ...!

              ''அவருக்கு காந்தீயக் கொள்கையிலே ஈடுபாடு அதிகமாச்சு  சரி ,தண்டாயுதபாணிங்கிற பெயரை ஏன் தண்டபாணின்னு மாத்திக்கணும்?''
                ''ஆயுத பாணியா  இருக்க பிடிக்கலையாம் !''

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


கு ..க ..என்றாலும் ஜனத்தொகை குறையலேயே!

           ''பொறந்ததும் குவாகுவான்னு அழ வேண்டிய அந்த  குழந்தை ஏன் குகாகுகா ன்னு அழுவுது ?'' 
              ''ஆறாவதா பொறந்த குழந்தை ஆச்சே !அப்பனுக்கு குடும்ப கட்டுப்பாட்டை ஞாபகப்படுத்துது!'' !''
 

36 comments:

  1. “சுவரொட்டி“ ஜோக் செம.....

    அனைத்தையும் ரசித்துச் சிரித்தேன் பகவான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. பாவம் ,அந்த மனுஷன் லூஸ் மோசன்லே ரொம்ப பாடு படுறார் போலிருக்கே :)
      நன்றி

      Delete
  2. Replies
    1. ஞாயிறு முதல் படையல் சரிதானே :)
      நன்றி

      Delete
  3. முத்திரையான நகைச்சுவைகள் ஜீ...

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,படித்ததும் நித்திரையை தரவில்லையே :)
      நன்றி !

      Delete
  4. சுவரொட்டின்னா "கீ......ச்" னு கத்திகிட்டே இருக்கும், கண்லயே படாதே...அது இல்லையா?

    ஏன், நிராயுதபாணி என்று மாற்றிக் கொள்ளலாமே...

    அப்போ அந்தக் குழந்தைக்கு சுவாமிநாதன் என்று பெயர் வைங்க!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது அந்தம்மாவுக்கு தெரியாம போனதும் நல்லதுதான் :)

      கல்யாணமான பிறகு ஆயிடுவாரே :)

      சுவாமி நாதன்னா முற்றுப் புள்ளின்னு அர்த்தம் இருக்கா ?;)
      நன்றி

      Delete
    2. தந்தைக்கே (ஓம் என்ற சொல்லின் அர்த்தத்தைக் கற்பித்து) குருவானவன் சுவாமிநாதன்தானே? அதுதான் சொன்னேன்!

      Delete
    3. அட முருகா ,எனக்கு இது கிளிக் ஆகாமப் போச்சே:)
      என் வீட்டிலும் ஒரு சுவாமிநாதன் எனக்கு கணினியை கற்றுத் தந்துக் கொண்டிருக்கிறானே :)
      நன்றி

      Delete
  5. பேஷ்..பேஷ்..நல்லா..சொன்னிங்க..போங்க.....ஆயுத பாணியா இருந்தா..யாருக்குத்தான் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இவர் ஆயுதத்தை விட்டுட்டார் ,இன்னொருவர் தண்டத்தையே விட்டுட்டாரே :)
      நன்றி

      Delete
  6. நன்றாக சிரித்தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. படிக்கவும் இருக்கு ,திங்கவும் இருக்கு சுவரொட்டின்னு நினைச்சுச் சிரீச்சீங்களா:)
      நன்றி

      Delete
  7. Replies
    1. சண்டே ஸ்பெசல் வோட்டுக்கு நன்றி !

      Delete
  8. சிரித்தேன் ரசித்தேன்
    சுவரொட்டின்னா ஆட்டு மண்ணீரல்னு எனக்கு இப்பத்தான் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. கடையிலே பெரும்பாலும் சுவரொட்டி என்றுதானே கேட்டு வாங்குகிறார்கள் :)
      நன்றி

      Delete
  9. 01. சொன்னவரு, மனைவிகிட்டே சொல்லாம மாமியாரு கிட்டே சொல்லியிருக்கலாம்.
    02. அப்படீனாக்கா,,, வேலாயுதம்னு பேரு உள்ளவரு ?
    03. அப்படீனாக்கா,,, குவா குவா ன்னா ‘’குவாட்டர்’’ கேட்குதுனு அர்த்தமாஜி ?

    ReplyDelete
    Replies
    1. 1.அதுசரி ,சுவரொட்டி மகளுக்கும் சேர்த்து வாங்கியிருப்பாங்களே:)
      2.போய் பன்னிவேட்டை ஆடட்டும் :)
      3.இனிமேலாவது குவாட்டரை நிறுத்தி குடும்பத்தைக் கவனின்னு சொல்லுது :)
      நன்றி

      Delete
  10. ஹா ஹா... சுவரொட்டின்னா ஆட்டு மண்ணீரலா?

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு பெயரும் இருக்கு ,அது ....கல் குத்தி :)
      நன்றி

      Delete
  11. மூன்றுமே டாப்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அதிலும் அந்த' தண்டம்' ரொம்ப டாப் ,இல்லையா :)
      நன்றி

      Delete
  12. கு.க. சூப்பர்ஜி

    ReplyDelete
    Replies
    1. அவரைக் கேட்டால்',மரத்தை வைத்தவன் தண்ணி ஊற்றுவான்'னு சொல்லிட்டு ,இவர் ஊத்திக்கப் போயிடுறாரே :)
      நன்றி

      Delete
  13. Replies
    1. உங்க ஞாபக சக்தி அபாரம் :)
      நன்றி

      Delete
  14. அப்பனுக்கு குழந்தை கு.காவை ஞாபகத்தின விசயம் வீரத் துறவிக்கு தெரிஞ்சுச்சு..அம்புட்டத்தான் குழந்தைக்கு ஞாபகமே..இருக்காது..

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,வீரத் துறவியார் வந்தா சோறு போடப் போறார் :)
      நன்றி

      Delete

  15. 'சுவரொட்டி'
    ஆயுத பாணியா
    குகாகுகா ன்னு
    மூன்று நகைச்சுவை
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மூணும் மூணு விதமா இருக்கா :)
      நன்றி

      Delete
  16. ''..சுவரொட்டின்னா ஆட்டு மண்ணீரல்னு ..''

    ''..'ஆயுத பாணியா இருக்க பிடிக்கலையாம் !''
    ''..அப்பனுக்கு குடும்ப கட்டுப்பாட்டை ஞாபகப்படுத்துது!'' !''..''
    அப்பப்பா! ...என்ன நகைச்சுவை!..எங்கே போய் யோசிப்பீங்க...
    நன்று...நன:று....
    வேதா. இலங்காதிலகம்.
    ..''

    ReplyDelete
    Replies
    1. ரூம் போட்டு யோசிக்கும் அளவிற்கு வசதி இல்லையே :)
      நன்றி

      Delete
  17. தண்டயுத பாணி , தண்டபாணி ஆனது அருமை!

    ReplyDelete
    Replies
    1. தண்டபாணியை மனைவி தண்டம் ஆக்கினது அதைவிட அருமை :)
      நன்றி

      Delete