20 November 2014

ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?

ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?

                ''விதவை  என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லி 

கேவலப்படுத்தும் ஆணாதிக்க சமூகமே ,விதவைக்கு  எதிர்ப்பதமாக 

ஒற்றை  ஆண்பாற் சொல்கூட இல்லையே என்று வருத்தப் படுகிறேன் 

'என்று பேசிவிட்டு அமர்ந்து இருக்கும் எதிர் அணி

தலைவியைப்   பார்த்து கேட்கிறேன் ...பத்தினி என்பதற்கும் தான் 

எதிர்ப்பதமாக எந்த ஒற்றை சொல்லும் இல்லை என்பதற்காக நாங்கள் 

 வருத்தப்படுகிறோமா?''


இதற்கு சென்ற வருடம் வந்த கமெண்ட்டில் மறக்க முடியாதது ...இதோ .........
அருமையான கேள்வி!!! அசத்தலான் பதில் !!!! எறிந்தவர்க்குத் தெரியவில்லை இது பூமராங்க் ஆகும் என்று ஆனால் பூமராங்காக ஆக்கித் திருப்பி விட்டவர்க்குத்தான் கை கொடுக்க வேண்டும்!!! விதவை கைம்பெண் ஆனால்....விதுரன் கைம் ஆண்!!! என்றால் என்ன? ( பிறகு தன் கைதானே தனக்குதவி !!!)
ReplyDelete

Replies


  1. அடடா ,தமிழ்லே புகுந்து விளையாடுறீங்களே ...அந்த நிலையில் கைம்பெண்ணை கட்டிக்கிறது வாழ்க்கையை இனிதாக்குமே!
    நன்றி துளசிதரன் ஜி !

 சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...


தந்தைக்கு மரியாதை !

உயிரோடு 

இருந்தவரை 

'ஏசி 'ய பிள்ளைகள் ...
இறந்தவரை வைத்தார்கள் 
AC பெட்டியில் !
நேற்றைய 'சிரி'கதையின் தொடர்ச்சி மட்டுமல்ல ,முடியும்கூட ......

கேட்காத காதும் கேட்கும்!



26 comments:

  1. பெரியவர்களும் அன்புக்கு ஏங்குகிறார்கள் என்பதை புரிய வைத்த கதை.அருமை.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கு ஏங்காத உள்ளமும் உண்டா ,சொக்கன் ஜி ?
      நன்றி

      Delete
  2. தந்தைக்கு மரியாதை கவிதை சூப்பர்.
    கதையின் முந்தைய பகுதியை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. 'சிரி'கதையின் கருவும் தந்தையை மையப்படுத்தி இருப்பதே ,இன்றையப் பொருத்தம்::)
      நன்றி

      Delete
  3. கதையின் முடிவு : செம அடி...!

    ReplyDelete
    Replies
    1. செம அடி ,திருந்த வேண்டியவர்கள் திருந்தினால் சரி :)
      நன்றி

      Delete
  4. அற்புதமான கதை! அதுவும முடிவு ! எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முடிவு. நிஜமாகவே சாட்டையடிதான்!

    மிக்க நன்றி ஜி! எங்கள் சென்ற வருட பதிலை நினைவில் கொண்டு இங்கு அதை வெளியிட்டு மகிழ்ந்ததற்கு மிக்க மிக்க நன்றி ஜி!

    ReplyDelete
    Replies
    1. சாட்டை அடி உறைக்கவேண்டியவர்களுக்கு உறைக்குமா :)
      நன்றி

      Delete
  5. தரமான ‘உளவியல்’ கதை.

    தொடர்ந்து கதைகளும் எழுதுங்கள் பகவான்ஜி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பசியைத் தீர்க்க முயற்ச்சி செய்கிறேன் :)
      நன்றி

      Delete
  6. "விதவை கைம்பெண்
    ஆனால்...
    விதுரன் கைம் ஆண்!" என்று
    தமிழ் படிக்க வைத்த
    ஏக'ப்பட்ட' பத்தினி விரதனை
    பாராட்டலாம் வாங்க...
    ஆசை அறுபது நாள்
    மோகம் முப்பது நாள்
    என்று கூறு வந்த
    கதையும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. கைம்மாண் என்று சொல்வதும் நல்லாத்தானே இருக்கு :)
      நன்றி

      Delete
  7. சிரி கவிதை சூப்பர்! முதல் கேள்விக்கு பதில் இல்லைதான் போல! கதை ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. ஏன் பதில் இல்லை ,நம்ம துளசிதரன் ஜி ,புது தமிழ் சொல்லை அறிமுகப் படுத்தி இருக்காரே :)
      நன்றி

      Delete
  8. 01. விதவைக்கு எதிர்ப்பதம் ‘’விதவன்’’ என்றும், பத்தினிக்கு எதிர்ப்பதம் ‘’பத்தன்’’ என்று சொல்லலாமே... இதுவரை இல்லையெனில் இனியெனும் சொல்லலாம்... அரபு மொழியில் கூட விதவை பெண்களை ‘’அர்மலஹ்’’ என்றும், ஆண்களை ‘’அர்மல்’’ என்றும் சொல்கிறார்கள்.

    பெண்கள் அர்மலஹ் ( ارمـــلـة )

    ஆண்கள் அர்மல் ( ارمـل )

    02. கவிதை மனதை கணக்க வைத்தது.

    03. கதையும் மனதை தைத்து விட்டதே...

    ReplyDelete
    Replies
    1. அரபு வார்த்தையைச் சொன்ன உங்கள் நண்பருக்கும் ,உங்களுக்கும் நன்றி :)

      Delete
  9. AC பெட்டியில் ! உண்மைதானே!

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் போது தந்தையிடம் ' நெருப்பு 'வார்த்தைகளை வீசியவர்கள் ,இறந்த பின் இப்படி செய்வது தகுமா ?
      நன்றி

      Delete
  10. ஆகா............இப்படியும் கேட்கா..த ....காதை..கேட்க வைக்கலாமா...???

    ReplyDelete
    Replies
    1. உளவியல் ரீதியா பாதிக்கப்பட்டிருந்தால் :)
      நன்றி

      Delete
  11. மகிழ்ந்தேன்
    த ம ஒன்பது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்தது பதிவை ,நான் ரசித்தது த ம ஒன்பதை :)
      நன்றி

      Delete
  12. வணக்கம்
    சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.....இரசிக்கவைக்கும் கதை.. பகிர்வுக்கு நன்றி
    த.ம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. எனது வலைத்தளத்தில் ” குளம்பியும் குழப்பமான தமிழும்” என்ற எனது பதிவினில் நான் தங்களுக்கு தந்த மறுமொழியை இங்கு தருவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

    மறுமொழி> Bagawanjee KA said...

    சகோதரர் கே.ஏ. பகவான்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // எனது தளத்தில் நண்பர் துளசிதரன் ஜி ,கைம்பெண்ணுக்கு எதிர்ப்பதமாக கைம்ஆண் (கைம்மாண்)என்று சொல்லலாமே என்று யோசனைக் கூறியுள்ளார் !>>>http://www.jokkaali.in/2014/11/blog-post_48.html">ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?
    த ம 3 //

    உங்கள் வலைத்தளம் சென்று பார்த்தேன்.நண்பர் துளசிதரன் ஜி , அவர்கள் கைம்பெண்ணுக்கு எதிர்ப்பதமாக கைம்ஆண் (கைம்மாண்) என்று (கைம்மாண்) சொன்ன சொல் பொருத்தமானதா என்று தெரியவில்லை. ஆனால் கணவனை இழந்த பெண்ணுக்கும் (WIDOW), மனைவியை இழந்த ஆணுக்கும் (WIDOWER) பொதுவான “கம்மனாட்டி” என்ற ஒரு பெயர்ச் சொல் தமிழில் உண்டு. நமது தமிழ்நாட்டு கிராமங்களில் மக்கள் இந்த சொல்லை சர்வ சாதாரணமாக் புழங்குவார்கள். இடக்கடரடக்கல் கருதி யாரும் எழுதுவதில்லை.



    ReplyDelete
    Replies
    1. பொம்மனாட்டி என்பதைப் போலல்லவா இருக்கிறது இந்த கம்மனாட்டி :)

      Delete