10 September 2014

ஜொள்ளும் சொல்லுமோ செல்லும் இடத்தை ?


                   ''கண்டக்டர் ,நான் எங்கே இறங்கப் போறேன்னு சொல்லவே இல்லையே,ஆனால் சரியா எட்டு ரூபாய் டிக்கெட் கொடுக்கிறீங்களே ,எப்படி ?''
              ''முன்னாடி நிற்கிற சுடிதார் போட்ட பொண்ணை நீ பார்க்கிறப் பார்வையிலேயே தெரிஞ்சிப் போச்சே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாமா ?
           
                         ''ஏன் டாக்டர் ,ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட்ன்னு சொல்றீங்க ?''
                   ''ஆபரேஷனில பொழச்சுக்கிட்டவரு.பில்லைப்
பார்த்ததும் போய் சேர்ந்து விட்டாரே !''

 தோடுன்னா சரி  ,'தோடு 'விடத்தான் கூடாது !

சிறிய வயதில் காது குத்திய போது ...
தோடு வாங்கித் தராமல் 
'வெளக்கமாத்து 'குச்சி குத்தி 
ஏமாற்றிய அப்பாதான் ...
திருமணத்திற்கு மகளுக்கு தொண்ணூறு பவுன் நகையும் 
மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் ,செயின் ,
பிரெஸ்லெட்டும் போட்டு அழகு பார்க்கிறார் !

21 comments:

  1. Replies
    1. நோயாளி செத்ததையும் ரசித்தீர்களா ?
      நன்றி

      Delete
  2. 01.கண்டக்கடர் மனோதத்துவ நிபுணருக்கு படிக்கலாமே...

    02. ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் இந்தபபழமொழி இதுக்குத்தானா....

    03.மருமகனுக்கு காது குத்தமுடியாதே...

    ReplyDelete
    Replies
    1. 1.படிக்காமலே அவர் மனோதத்துவ நிபுணராய் ஆகிவிட்டாரே )))))))

      2 விளக்கம் சரிதானே ?

      3.கடுக்கன் போட்டால் வேண்டாம்னா சொல்லப் போறார் ?

      நன்றி

      Delete
  3. எட்டு ரூபாய் டிக்கெட்
    சுடிதார் போட்ட பெண்
    இறங்கும் வரைக்கா...
    பணத்தொகை அதிர்ச்சியால்
    ஆள் முடிஞ்சுதா?
    'வெளக்கமாத்து 'குச்சி குத்தி
    தொண்ணூறு பவுன் நகை போடுறாரா
    நீங்க நகைச்சுவையில
    நல்லாப் போடுறியளே!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நல்லா ரசிக்கிறீகளே,நன்றி !

      Delete
  4. விவரமான கண்டக்டர்தான்! அடடே! நகையாலே அலங்கரிச்சிட்டார் போல! மூன்றுமே சிறப்பு! சிரிப்பை வரவழைத்தது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எவன் எந்தப் பெண்ணைப் பார்க்கிறான் என்று பார்க்கும் விவரமான கண்டக்டர்தான் !
      நன்றி

      Delete
  5. கண்டக்டர் சொன்னதும் சரிதானே ?
    நன்றி

    ReplyDelete
  6. புத்திசாலி கண்டக்டர்!

    பில் செட்டில் பண்ணாமலேயே போயிட்டாரா.... அடப் பாவமே...

    ஓ... இதுக்குத்தான் சேர்த்து வச்சாராமா...

    ReplyDelete
    Replies
    1. நோயாளி பில்லை செட்டில் பண்ணாம போனதால் ,டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் என்று கேள்வி பட்டேன் !
      நன்றி

      Delete
  7. கண்டக்டர்ர்க்கு டிக்கெட் கொடுக்கிற வேலையோடு இந்த வேலையையும் சைடா செய்றாரு போல........

    ReplyDelete
    Replies
    1. அந்த பொண்ணு கையிலே ரெண்டு ரூபாய் அதிகமா வாங்காம ,பத்து ரூபாய் டிக்கெட்டைக் கொடுத்து வசூலை அள்ளுவதாக கேள்விபட்டேன் !
      நன்றி

      Delete
  8. 3 ன்றயும் நல்லா கவனித்தீரா?
    என்ன?
    மூணுக்குமே கணக்கு சம்பந்தம் உள்ளதை.

    ReplyDelete
    Replies
    1. அடடா ,உங்கள் கூரிய அவதானிப்பு ,என்னை கவனிக்க வைத்து விட்டதே !
      நன்றி

      Delete
  9. ஹாஹாஹா....மூன்றுமே சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. மூணுமேவா?
      நன்றி

      Delete
  10. கண்டக்டரும் ஜொள்ளாராக இருந்திருப்பாரோ? (பாம்பின் கால் பாம்பு அறியும்)

    பாவம் டாக்டர், வருமானம் போச்சு

    அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. பை நிறைய காசும் ,கண்நிறைய கலரும் காணும் கண்டக்டர் கொடுத்து வைத்தவர்தான் ))))))

      இப்படி அதிர்ச்சி கொடுத்தது டாக்டரோட தவறுதானே ?

      ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  11. அதிர்ச்சி வைத்தியம் அதிர்ச்சி தந்தது......

    ReplyDelete
    Replies
    1. அதிர்ச்சி நமக்கில்லை ,நோயாளிக்குத் தானே ?
      நன்றி

      Delete