19 September 2014

அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் !

------------------------------------------------------------------------------
தலைவலிதான் போச்சே ,அப்புறமும்
                  ''நேற்றுபூரா ஒற்றைத்தலைவலி ,   வலி வலது பக்கமா ,இடது பக்கமான்னு  ஞாபகம் வர மாட்டேங்குது  ,டாக்டர்  !''
           ''ரொம்பவும் யோசிக்காதீங்க  , இரட்டைத்  தலைவலி வந்திடப்போவுது !'' 
 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் !

"அப்பா ,நீங்க வாங்க வேண்டாம்னு சொன்ன வைரத் தோடு அம்மா காதுலே மின்னுதே ,எப்படி ?"
"நான் சொல்ற எதைத்தான் 
உங்கஅம்மா காதுலபோட்டுகிட்டா ?"

எங்கே இன்னொரு புத்தன் ?

எந்த மரத்தடியில் புத்தன் ஞானம் அடைந்தாரோ 
அந்த போதி மரம் கூட பட்டுப் போயிருக்கும் ...
அடையாறு ஆலமரத்திற்கு வயது 
நானூற்று ஐம்பது ஆனபின்பும் ...
அந்த மரத்தடியில் யாரும் ஞானம் அடைந்ததாய் தெரியவில்லை !

28 comments:

  1. 01. இவரு கம்யூனிஸ்டுகாரரோ...

    02. தோடையாவது காதுல போட்டுக்கிட்டாளே...

    03. பிறப்பான் புத்தன் உலகம் அழிந்த பிறகு...

    ReplyDelete
    Replies
    1. 1 அந்த கட்சிக்காரங்கதான் எதையும் மறக்காமல் கேட்கிறார்களே,இவரை அந்த கட்சியில் சேர்க்காதீங்க ))))))))

      2.அதுசரி ,அதையுமா காதிலே போட்டுக்காம இருப்பாங்க ?)))))))

      3.அதுவும் சரிதான் ,நல்லதை மனிதன் கேட்பதாகத் தெரியலையே ?
      நன்றி

      Delete
  2. ரொம்பவே யோசிக்கிறீங்க ஜி...! ஹிஹி...!!

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் யோசிப்போமில்லே))))))
      நன்றி

      Delete
  3. Replies
    1. சிரித்த காரணத்தை கமெண்டிலே சொல்லுங்க )))))
      நன்றி

      Delete
  4. மூன்றுமே அருமை ஜி!

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் ஜோக் போரடித்து விட்டதா ,சுருக்கமான கருத்தாய் இருக்கே ))))))
      நன்றி

      Delete
  5. Replies
    1. ஒன்று ஹீ ,இரண்டு ஹி சரி ,மூன்றாவது ?)))
      நன்றி

      Delete
  6. இரட்டைத் தலைவலியா?
    காதுலபோட்டுக்கிட்டது ஏது?
    அடையாறு ஆலமரத்திற்கு
    அகவை நானூற்று ஐம்பதா?
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இரட்டைத் தலைவலி ஒரே தலைக்கு வந்தா எப்படி சமாளிக்கிறது ))))
      நன்றி

      Delete
  7. ஹாஹாஹா! ரெண்டு ஜோக்கும் கலகல! மூனாவது தத்துவமும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எத்தனையோ சிலுவை செய்தோம் ,இன்னொரு இயேசுவைக் காணவில்லையே என்ற தத்துவம் போலத்தான் இதுவும் )))
      நன்றி

      Delete
  8. தலைவலி, காதுவலி...ஒரே வலியா...இருக்கே........

    ReplyDelete
    Replies
    1. எந்த வலியாஇருந்தால் தான் என்ன ,வலிப்போக்கன் நீங்க இருக்கும் போது)))))))))))
      நன்றி

      Delete
  9. அம்மானாலே அட்ராசிட்யா தான் இருப்பங்களோ பாஸ்:)))) (எதோ நம்மளால முடிந்தது)

    ReplyDelete
    Replies
    1. அட்ராசிட்டி அம்மா ......(இருங்க ,வாசல்லே ஆட்டோ சத்தம் கேட்குது ,போய்ப் பார்த்துட்டு வந்துர்றேன் )
      நன்றி

      Delete
  10. ஜி... நகைச்சுவையில் கலக்குறீங்க ஜி...

    ReplyDelete
    Replies
    1. நான் கலக்கக் காரணம் உங்க ஆதரவுதான் !
      நன்றி

      Delete
  11. Aamaam......''..'ரொம்பவும் யோசிக்காதீங்க , இரட்டைத் தலைவலி வந்திடப்போவுது !'' ..
    ''..நான் சொல்ற எதைத்தான் உங்கஅம்மா காதுலபோட்டுகிட்டா ?"..
    ''..அடையாறு அந்த மரத்தடியில் யாரும் ஞானம் அடைந்ததாய் தெரியவில்லை !...'''
    nanru.....kalakkal...
    Vetha.Langathilakam


    ReplyDelete
    Replies
    1. தமிழும் ஆங்கிலமும் கலந்துகட்டி comment போட்டதற்கு நன்றி !
      நன்றி

      Delete
  12. இரண்டு பக்கமும் தலைவலி! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கஷ்டம்தானே ?)
      நன்றி

      Delete
  13. இரட்டைத் தலைவலி வந்தாலும் வந்திரும் இப்பவே ஓடிடலாம் :))))))

    ReplyDelete
    Replies
    1. வரப் போறது யாரு ?சொன்னா நானும் எச்சரிக்கையா இருப்பேனே )))))))
      நன்றி

      Delete
  14. தலைவலிக்காக போய் டாக்டரோட பீஸ் பார்த்து, நெஞ்சு வலி வந்துடப்போகுது!!!

    அதானே, எல்லோர் வீட்டிலும் நடக்கிறது தானே, குடும்பத்துல இதெல்லாம் சகஜமப்பா.

    நல்ல தத்துவம்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஆட்கள் நாலு பேர் வந்தால் டாகடருக்கு வேண்டுமானால் நெஞ்சு வலி வரலாம் )))))))
      நடப்பது எது வேண்டாம் என்கிறதை போட்டுக்கிறதுதானே ?)))))))

      தத்துவம் சொல்லும் ஆட்களுக்கு நாட்டிலே பஞ்சமேமில்லையே ?)))))
      நன்றி

      Delete