---------------------------------------------------------------------------------
பசங்க எப்படா ஸ்கூல் விடும்னு இருப்பாங்களோ ?
'' நம்ம பள்ளிக்கூட மணியை ,உடனே எலெக்ட்ரிக் மணியாய் மாற்றணுமா ,ஏன் ?''
''தெருவிலே சோன்பப்டி வண்டிக்காரன் அடிச்ச மணி சத்தத்தைக் கேட்டு எல்லாரும் வெளியே ஓடிட்டானுங்களே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
அன்று அபார்ஷனுக்கு உதவிய தோழி ...இன்று ?
''குழந்தைப் பிறக்காததற்கு , காரணம் நான் இல்லைன்னு லேப் ரிசல்ட் சொன்னாலும் என் புருசன் நம்ப மறுக்கிறார்டீ!''
''கல்யாணத்திற்கு முன்னாடியே உண்டாகி அபார்ஷன் பண்ணிக்கிட்டதை சொல்லிப் பாரேன் !''
விரலில் எட்டிப் பார்த்தது ஒரு துளி இரத்தம் ...
குத்திய முள் கேட்டது ...
நான் ரசிக்கும் ரோசாவை நீ ஏன் பறித்தாய் ?
வணக்கம்
ReplyDeleteதலைவா...
முதலாவது இரண்டாவது நகைச்சுவை நன்றாக உள்ளது பல தடவை இரசித்தேன்...பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரோஜாமுள் கேள்வி கேட்டதால் உங்களால் ரசிக்க முடியலையா ?
Deleteநன்றி
எலக்ற்றிக் மணியை அடிக்க தக்க சமயத்தில் கரண்ட் இருக்குமா?
ReplyDeleteஇன்னைக்கு சொன்னா டைவர்ஸ் தான்..தோழி புண்ணியத்தில்.
அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பதை அறியாத ரத்தம்.
என்ன உங்களுக்கும்' எலக்ற்றிக்' ஷாக் அடித்த மாதிரியிருக்கே ))))
Deleteஅன்று உபக்காரம் இன்று உபத்திரவம் ?)))
நம் இரத்தத்தின் இரத்தம்தானே))))
நன்றி
பாஸ்!இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)
ReplyDeletehttp://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html
உங்களுக்கு விருது கிடைத்த உடனேயே நினைச்சேன் ,சரியாய் போச்சு !.நீங்கள் எனக்களித்த versatile விருதுக்கு மனம் கனிந்த நன்றி !
Deleteபிழி திருத்தம்.......மேலே உள்ள கமெண்டில் எலக்ட்ரிக் என மாற்றி வாசிக்கவும்.
ReplyDeleteதம 2
இதுலயும் 'பிழை'.... என்ன ஆச்சு இன்னைக்கு?...
Deleteஎலக்ட்ரிக்கையும் ,பிழையையும் பிழையின்றி எடுத்தாச்சு ,கவலையை விடுங்க கிங் ஜி !
Deleteநன்றி
பார்த்து எலெக்ட்ரிக் பெல் வைத்த பின் - பக்கத்து வீட்டு காலிங் பெல் அடித்தாலும் ஓடிப் போய் விடுவார்கள்....
ReplyDeleteவிவிகாரமான தோழியா இருப்பாங்க போல!
சரியான கேள்வி தானே முள் கேட்டது!
போறப்போக்கைப் பார்த்தா ஐஸ் வண்டிக்காரன் கூட பெல் அடிக்கக்கூடாது போலிருக்கே !))))))
Deleteதோழியே வில்லி ஆயிடுவாங்ளோ)))))))
அதுக்கு இரத்தம் சரியான பதில் சொல்லிக்கட்டுமே !))))
நன்றி
"நான் ரசிக்கும் ரோசாவை
ReplyDeleteநீ ஏன் பறித்தாய்?" என்பதை
முள் கேட்கிறதா? - படத்தில
வில்லன் கேட்குமாப் போல இருக்கே!
உண்டாகி அபார்ஷன் பண்ணிக்கிட்டதை
சொல்லிப் பார்க்கிறதா
குடும்பம் பிரிந்தால் என்னாகும்?
மணி சத்தத்தைக் கேட்டு
எல்லாரும் வெளியே ஓடிட்டானுங்களே!''
இந்தக் காலத்துப் பிள்ளைகள்
அப்படித்தான்!
எப்படியெல்லம்
இப்படித் தகவல் பகிர முடிகிறதோ?
உங்களின் ரசனை என்னை இப்படியெல்லாம் பகிர வைக்கிறதே !என் செய்ய ?))))
Deleteநன்றி
குழந்தை பிறக்காததற்கு தான் காரணமாக இருப்பது தெரிந்திருந்தாலும் சோத்தாங் கை பயலுக ஒத்துக்க மாட்டாங்கே...ஜீ
ReplyDeleteஆண்மை சோதனைக்கு சாமியாரே ஒத்துழைப்பு தராத இக்காலத்தில் ,சோத்தாங் கை பயலுக ஒத்துழைப்பு தருவாங்களா ?)))))))
Deleteநன்றி
வீண்வாதம் இன்றி வலைப்பூ வளர வாழ்த்துக்கள் !தகவலுக்கு நன்றி !
ReplyDeleteஹஹாஹஹஹஹ..ரசித்தோம் ஜி!
ReplyDeleteஇன்றைய நாளில் கடைசியாய் வந்து ரசித்ததற்கு நன்றி !
Deleteஜி என்னஜி! நெட் படுத்தும் பாடு.....பதில் போட்டா காக்கா உஷ் ஆவது.....அப்புறம் பல வலைத்தளத்துல ஒரே கம்ப்யூட்டர் கோழிக் குஞ்சா போகுது.....நண்பர்கள் பகுதியில்...ஹாஹஹாஹ்....ப்ளாகர் அப்படியே ஃப்ரீஸ் ஆகி எரர் வருவதால்.....அப்புறம் கரன்ட் வேறு ஸோ அதனாலதான் ஜி....பொறுத்துக்கங்க ஜி!
Deleteநம்ம வலைத்தளம் எல்லாம் அப்படியே இருக்குதானு அப்பப்ப செக் செய்யணும் போல .....பதிவர் ஆரூர் மூனா அவர்களின் வலைத்தளம் காணாமல் போய்விட்டதாம்...ஐடி/பாஸ்வோர்ட் திருடப்பட்டதால்.......
எனக்கு உங்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை ஜி ,எனக்கும் நீங்கள் சொல்லும் பிரச்சினை வரத்தான் செய்கிறது .முன்பு என் தளத்தை திறந்தால் கம்ப்யூட்டர் மொழியில் ஏதோ தெரிந்ததே ,அதைப் போல பிறர் தளங்களை திறக்கையில் எனக்கும் தெரிகிறது .சில நொடிகளில் சரியாகி விடுவது ஆறுதலைத் தருகிறது !
Deleteநன்றி
ரசிக்க வைத்த நகைச்சுவை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅரபு தேசத்தில் இருந்து ,நாளின் துவக்கத்தில் வந்து ரசித்தமைக்கு நன்றி !
Delete