26 September 2014

மனைவி எழுத்தாள கணவனை இப்படி அவமானப் படுத்தலாமா ?

                   ''பாத்திரக் கடைக்கு மனைவியோட  ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
             ''பாத்திரத்திலே பெயரை வெட்டுறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், ,நீங்க பக்கம் பக்கமா எழுதி பைசாவுக்கு  பிரயோசனம் இல்லையேன்னு  குத்திக் காட்டுறாளே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
கல்யாண மொய் மணி ஆர்டரில் வந்திருந்தா வருத்தமில்லே!
            ''தந்தி சேவையை பத்து வருசத்திற்கு முன்னாடியே நிறுத்தி தொலைச்சிருக்கணும்னு  வருத்தப் படுறீங்களே ,ஏன் ?''
''அப்போ நடந்த என் கல்யாணத்திற்கு முப்பது வாழ்த்து தந்தி வந்தது ...நான் இன்னும் இருபது வாழ்த்து தந்தி அனுப்ப வேண்டி இருக்கே !''

டயாபெடிக்சுக்கு உணவு பழக்க வழக்கம் !

'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி  ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'

31 comments:

  1. 01. சொந்த அனுபவத்தை இப்படியா போட்டு உடைக்கிறது

    02. இப்படியுமா மிச்சப்படுத்துறது

    03. நல்லவேளை ஆறு வேளையும் சூப்புதான் குடிக்கணும்னு சொல்லாம போனாரே....

    ReplyDelete
    Replies
    1. ஏம்பா கில்லர் ஜி க்கு சூப்புன்னா ஆவாதோ?!!! ஸ்ரீ பூவு சூப்புதான் பரிந்துரைக்கறார்னு கேள்விப்பட்டோம்.....

      Delete
    2. 1.என் சொந்த அனுபவம் மட்டுமா ,தமிழ் எழுத்தாளர்கள் 90சதம் பேரின் நொந்த அனுபவம் இதுதானே ?)))))))

      2.இப்போ தந்தி இல்லாததால் அந்த செலவையும் மிச்சப் படுத்தி விடுவார் ,SMS ல் வாழ்த்து அனுப்பிடுவார் ))))))))

      3.சூப்பு குடிக்கிற காலமும் வராமயாப் போயிடும் ?)))))

      நன்றி

      Delete
    3. துளசிதரன் ஜி ,ஸ்ரீ பூவு பரிந்துரைப்பது என்ன சூப்பு என்று சொன்னால் ,நாலு பேருக்கு நலமாய் இருக்குமே )))))
      நன்றி

      Delete
  2. 1. ஹா...ஹா... ஹா... இது சோதனைதான்!

    2. பதிலுக்கு பதில். அதனால என்ன? கைல எழுதி நேர்ல கொண்டுபோய் வாசல்லேருந்து கொடுத்துட்டு வந்துடலாமே...

    3. அல்சருக்கும் அப்படித்தான் சொல்றாய்ங்க..... :))))

    ReplyDelete
    Replies
    1. 1.சாதாரண சோதனையா ,எழுத்தாளருக்கு இதை விட ரணவேதனை இருக்குமா )))))))

      2.அருமையான ஐடியா ,அப்படியே சாப்பிட்டும் வந்து விடலாம் )))))))

      3.அப்படின்னா ,ஜாலிதான் ...தின்னுகிட்டே இருக்கலாமே )))))
      நன்றி

      Delete
  3. பதிவுலக நண்பர்களே, இந்த பதிவில் வரும் முதல் ஜோக்கை மட்டும் உங்கள் மனைவியிடம் காட்டாதீர்கள். அப்புறம் பகவான்ஜீக்கு ஏற்பட்ட அனுபவம் தான் உங்களுக்கு ஏற்படும்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஅ சரியாச் சொன்னீங்க நண்பரே! ஆனா ஜோக்காளி பாவம் நண்பரே! எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மள எல்லாம் சிரிக்க வைச்சு ரிலாக்ஸ் பண்ண வைக்கிறாரு!! கொடி பிடிக்கலாமா...ஹாஹ்ஹஹ

      Delete
    2. சொக்கன் ஜி ,காசு வர்றது ,போறது இருக்கட்டும் ,எங்கேயோ இருக்கும் உங்களை என்னோடு இணைத்து இருப்பது இந்த எழுத்து தானே ?எவ்வளவு சம்பாதித்தாலும் இந்த நட்பு தரும் சுகம் வேறெதிலும் கிடைக்குமா ?))))))
      நன்றி

      Delete
    3. துளசிதரன் ஜி ,ரிலாக்ஸ் உங்களுக்கு மட்டும்தானா ,எனக்கும் கிடைக்கிறதே ))))))
      மதுரை திருவிழாவுக்கு வாங்க ,கொடியைப் பிடிச்சிடுவோம் )))))))
      நன்றி

      Delete
  4. ஹாஹாஹா...குத்து உங்களுக்கா ஜோக்காளி!!!!???? !!!!!

    ஹாஹாஹா.....இப்பதான் லேட்டஸ்ட் டெக்னாலஜி வந்துருச்சே....ஜி...

    ஸ்ரீ ராம் அவர்கள் சொன்னதே...தே...தே....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் சேர்த்துதான் )))))))

      செலவில்லாமல் மெயிலோ ,sms அனுப்பிடலாம்னு சொல்றீங்களா ?

      ஆறுவேளை சாப்பாடா ?வயிற்று எரிச்சல் படுவாங்களே )))))))
      நன்றி

      Delete
  5. கேப்பக் கஞ்சி உடம்புக்கு ரொம்ப நல்லம் என்று யாரும் சொல்லாம
    விட்டுட்டாங்களே ச்சே ...இன்றிலிருந்து வெறும் கேப்பக் கஞ்சி
    குடியுங்க சகோதரா :)))))))))))))

    ReplyDelete
    Replies
    1. கேப்பக் கஞ்சி மட்டுமே குடித்து உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக்க உலகியற்றியான் )))))

      Delete
  6. நீங்க பக்கம் பக்கமா எழுதி
    பைசாவுக்கு பிரயோசனம் இல்லையேன்னு
    என் பெண்டாட்டியும்
    என்னையும் குத்திக் காட்டுறாளே!

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களையுமா ?)))))
      நன்றி

      Delete
  7. பக்கம் பக்கமா எழுதினாலும் பிரயோசனமில்லை என்று மனைவயிானவர் சொல்றது சரிதானே!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி ,என்னை மாதிரி சிக்கனமா எழுதணும்னு சொல்றீங்களா ?))))))))
      நன்றி

      Delete
  8. ஆஹா இப்படியெல்லாம் கேவலப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்களா? ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எப்படியெல்லாம் கேவலப் படுத்த இருக்காங்களோ ))))
      நன்றி

      Delete
  9. எப்பிடிதான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ:)))))))))))))))))))))))))))))))))
    ரொம்ப நாள் கழிச்சு இனிக்கு சிரிச்சு ,சிரிச்சு கன்னம் வலிக்குது:))))))))))
    இந்த எழுத்தாளர் ஜோக் உங்களோட இதுவரை வந்த ஜோக்கில் மிக மிக அட்டகாசமான ஜோக் னு நினைக்கிறேன். (இனி இதைவிடவும் பெஸ்ட் டா எழுதுவீங்கனாலும்)
    இது தான் ஜோக் of the year:)))
    தம 6

    ReplyDelete
    Replies
    1. #ரொம்ப நாள் கழிச்சு இனிக்கு சிரிச்சு ,சிரிச்சு கன்னம் வலிக்குது:))))))))))#
      அப்படின்னா சிரிக்கும் படியா நான் எழுதியே நாளாச்சு போல இருக்கே )))))
      நன்றி

      Delete
  10. ஹா...ஹா.
    இரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் நீங்கள் தரும் மருத்துவத் தகவல்களும் ரசிக்கும் படியாவே இருக்கே !
      நன்றி

      Delete
    2. டயாபெடிக்சுக்கு இப்படி சாப்பிறது சரிதானா என்று டாக்டர் நீங்கதான் சொல்லணும் ))
      நன்றி

      Delete
  11. கல்யாண மொய்..வாங்குறவர் ரெம்ப..கஞ்சனா இருப்பார்..போலிருக்கே.........

    ReplyDelete
    Replies
    1. மொய் செய்யாமல் வாழ்த்து தந்தி அனுப்பினவங்களுக்கு தந்திதான் அனுப்பணும்னு நினைச்சா ,அவர் கஞ்சனா?))))
      நன்றி

      Delete
  12. நகை கடைக்கு கூட்டி போயிருக்கலாம்ல....

    ReplyDelete
    Replies
    1. பாத்திரக் கடைக்கே இப்போதான் கூட்டிட்டு போயிருக்கார் ,நகைக் கடைக்கு போய் ஏசியில் வேண்டுமானால் ஓசியில் உட்கார்ந்துட்டு வருவார் )))))
      நன்றி

      Delete
  13. என்னே அந்த எழுத்தாளருக்கு வந்த சோதனை! :)

    ReplyDelete
    Replies
    1. தன் எழுத்து மூலமாய் வாசகர்களை சோதித்து இருப்பாரோ )
      நன்றி

      Delete