29 September 2014

பூவின் மணம் பூவையருக்கும் உண்டா ?

---------------------------------------------------------------------------
 சம்பாதிக்க வக்கில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்டா ...?                    
             ''ஹலோ ,ஹலோ ,நல்லா சத்தமா பேசும்மா ,கிணற்றில் இருந்து பேசுற மாதிரி இருக்கு !''
           ''அங்கிருந்துதான்ப்பா பேசுறேன் ,,என்னை எப்படிப்பட்ட பாழும் கிணற்றில் தள்ளி இருக்கீங்கன்னு இப்பவாவது புரியுதாப்பா ?சீக்கிரம் வந்து காப்பாத்துங்க !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


டாக்டர் கையெழுத்து புரியாதுதான் ,அதுக்காக இப்படியா ?

            ''ஹலோ டாக்டர் ,உங்க பிரிஸ்கிரிப்சன்படி மருந்தை நோயாளி  வாங்கிட்டு போய்விட்டார் ,ஏன் கேக்குறீங்க ?''
           ''அதிலே பேனா எழுதலைன்னு நான் கிறுக்கி இல்லே பார்த்திருந்தேன் ?''


பூவின் மணம் பூவையருக்கும் உண்டா ?

உள்ளூறும் ஓர் திரவம்  பூவிதழ்களின் வழியே 
வியர்வை போல் வெளியேறி ஆவியாகும் போது
நறுமணமாகிறது நம் நாசிக்கு  ...
மனிதனுக்கு இப்படியோர் இயற்கை மணம் இல்லைதான் ...
உழைப்பினால் உண்டாகும் வியர்வை நாறலாம்...
பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !

28 comments:

  1. 01.விவரமான பொண்ணு புருஷன் கிணத்துல தள்ளி விடும்போதுகூட செல்போணை எடுத்துகிட்டு போயிருக்கே...

    02. இது எந்த மெடிக்கல்காரன் செஞ்சவேலை ?

    03. ஆஹா தத்துவம் உண்மையிலேயே மணக்குது நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. 1.பொழச்சு போகட்டும்னு புருஷன் காரன் கருணை உள்ளத்தோடு தள்ளி விட்டிருக்கான் ))))))

      2.டாக்டரோட டீலிங் உள்ள எல்லா மெடிக்கல்காரனும் செய்ற வேலைதான் இது )))))))

      3.உண்மையில் உழைச்சுத் திங்கிறவங்களுக்கு மணக்கத்தான் செய்யும் இது )))
      நன்றி

      Delete
  2. பூவின் மணம்
    பூவைத் தாங்கும்
    காம்புக்கு உண்டென்றால்
    பூவைச் சூடும்
    பெண்ணுக்கு இருக்காதா?

    ReplyDelete
    Replies
    1. இருக்காதான்னு நீங்களும் கேட்டா எப்படி ?)))))
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    தலைவா.

    கருத்துள்ள நகைச்சுவைகள்... நன்றாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நான் வேண்டுமென்றே கருத்தை திணிக்கவில்லை ரூபன் ஜி )))))
      நன்றி

      Delete

  4. //சம்பாதிக்க வக்கில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்டா ...?//

    கொஞ்சம் சிரிக்க வைத்து ரொம்பவே சிந்திக்க வைக்கும் நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைத்ததா ,என்னால் நமபவே முடியலே ))))))))
      நன்றி

      Delete
  5. Replies
    1. கிணற்றில் இருந்து வந்த குரலை நீங்களும் ரசித்தீர்களா )))))
      நன்றி

      Delete
  6. அருமையான கருத்து க(வி)தை ..

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி தளத்தின் நூறாவது தொடராளியாய் சேர்ந்து இருக்கும் அய்யனார் அவர்களுக்கு வந்தனம் !
      உங்களின் ரசிக்கும்படியான கருத்துக்கு நன்றி

      Delete
  7. ஹா...ஹா...ஆஹா.... என்ன ஒரு டச்!

    ஹா...ஹா... அடப்பாவிகளா... அதுக்கும் மருந்தா!

    தத்துவம் நம்பர்...?

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஆழமா யோசிச்சு எழுதியதால் வந்த டச் )))))

      ஸ்டாக் லிஸ்ட்டில் உள்ளதை டாக்டர் எழுதுவார் என்ற நமபிக்கைதான் ))))

      நம்பரை சொல்வேன் ,கூட்டுத் தொகை ஒன்பது வரலையேன்னு வருத்தப்படக் கூடாது ,சரியா ?))))
      நன்றி

      Delete
  8. ''..சீக்கிரம் வந்து காப்பாத்துங்க !''.....ஙே!..............
    ''..'அதிலே பேனா எழுதலைன்னு நான் கிறுக்கி இல்லே பார்த்திருந்தேன் ?''......இது தானே நடக்குது.....
    ''...அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !...''' unmai.....
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையாய் அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  9. ரெண்டு ஜோக்கும் கிளாசிக் காமெடி! தத்துவம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கிளாசிக் காமெடி ரகத்தில் சேர்த்ததற்கு நன்றி !

      Delete
  10. ரசிக்க வைத்த நகைச்சுவைகள்...
    கிணத்துக்குள்ள் இருந்து பேசுறவன் ரொம்பப்பேரு இருங்கானுங்க போல....

    ReplyDelete
    Replies
    1. கிணற்றுக்குள்ளே தள்ளி பேசுறவனும் இருக்கத்தானே செய்றான் ?)))))
      நன்றி

      Delete
  11. சம்பாதிக்க வக்கில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்டா ...? ....இந்த வசவிலிருந்து நான் தப்பிச்சேன் ஜீ...

    ReplyDelete
    Replies
    1. வருவாய்க்கும் அதிகமா சம்பாதிக்காதவரை பிரச்சினை இல்லை )))))))
      நன்றி

      Delete
  12. முதல் இரண்டும் ஹாஹாஹாஹா தான் என்றாலும் முதல் ஜோக் கொஞ்சம் உண்மை என்று யோசிக்கச் சொல்லுதே இல்லையா ஜி!?

    உண்மை உண்மை!

    ReplyDelete
    Replies
    1. அப்பன்காரன் செய்த காரியத்தை புருசனும் செய்ஞ்சா,பாவம் பொம்பளை என்னதான் செய்வா ?)))
      நன்றி

      Delete
  13. 1. இதுக்கு பேர் தான் கிணத்துக்குள்ள உட்கார்ந்து யோசிக்கிறதோ?

    2. டாக்டர் நல்லா எழுதினா கூட அது யாருக்கு புரியும்
    3. நாள் கவிதை

    ReplyDelete
    Replies
    1. 1.இது யோசிக்கிறது இல்லை ,உயிருக்கு யாசிக்கிறது ))))))

      2மருந்துக் கடைக் காரருக்கு மட்டும்தான் புரியும் )))))

      3.மே நாள் கவிதைன்னு சொல்றீங்களா ))))

      நன்றி

      Delete
  14. நல்ல கவிதை - கவிதை தானே! :)

    முதல் - சமயோசிதமாய் சொல்லி விட்டாரே!

    ReplyDelete
    Replies
    1. கவிதை இல்லையோ )

      அந்த பொண்ணு அந்த பாடுபடுறா போலிருக்கே )
      நன்றி

      Delete