12 September 2014

இப்படி சந்தேகப்பட்டா கல்யாணம் கைகூடுமா ?

 -------------------------------------------------------------------------------
பையனுக்கு இப்படியும் பாரதி நினைப்பு !         
          
          '' பாரதி பிறந்த நாள் வந்தாலே எனக்கு என் தமிழ் வாத்தியார் ஞாபகம்தான் வரும் !''
            ''பாரதியாரோட கவிதைகளை அவர் அவ்வளவு அழகா சொல்லி தருவாரா ?''
            ''ஊஹும் ,அவரோட பொண்ணுங்களுக்கு  மகா,கவி ,பாரதின்னு  பெயர் வச்சிருக்காரே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

இப்படி சந்தேகப்பட்டா கல்யாணம் கைகூடுமா ?

''தீ அணைப்புத் துறையிலே வேலைப் பார்க்கிற வரனைப் பார்த்தா நல்லாத்தானே இருக்கு ,ஏண்டி வேணாங்கிறே ?''
''வேகமா வந்து அணைப்பார்ங்கிற நம்பிக்கை வர மாட்டேங்குதே  !''

மனைவியால் நொந்தவரின் கேள்வி !

என் மாமனார் போனார் ...என் மாமியாருக்கு மகிழ்ச்சி !
என் அம்மா போனார்  ..என் மனைவிக்கு மகிழ்ச்சி !
எனக்கு மகிழ்ச்சி ...என் அம்மாவின் ஒரே மருமகள் போனால்தான்  வருமோ ?

28 comments:

  1. 01. நான்கூட என்னமோனு நினைச்சேன்...

    02. இப்படியும் சந்தேகம் இருந்தால் குடும்பத்துக்கு ஆகாது...

    03. அதுசரி மாமனாரும், மாமியாரும் எங்கே போனாங்க ?

    ReplyDelete
    Replies
    1. 1.அதென்ன என்னமோ ?சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கிறோம் ))))))

      2.எப்படியும் அணைப்பார் என்ற நம்பிக்கை வேணும்னு சொல்றீங்க ,அப்படித்தானே )))

      3.எல்லோரும் எங்கே போவாங்களோ ,அங்கேதான் !
      நன்றி

      Delete
  2. பாரதி உன்னுடைய நிலமையை பார்த்தாயா!

    அந்த பொண்ணு, போலீஸ்காரன் வரனாக வந்தால் என்ன சொல்லும்? (கடைசியாகத்தானே வருகிறார்கள்)

    நாட்டில் நிறைய பேருக்கு இந்த மாதிரி தான் நடக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பாரதி நீ சொந்தப் பெயரான சுப்பையா என்றே மாற்றிக்கொண்டால் நல்லது ))))))

      மாமூல் கொடுத்தால் முன்னாடியே வர வாய்ப்பு அதிகம் ))))

      நிறைய பேரில் நாமும் அடக்கம்தானே ))
      நன்றி

      Delete
  3. ஹா...ஹா..ஹா.. அவர் சொல்லிக்கொடுத்த தமிழரசி ச்சீ... தமிழ் ஞாபகத்துக்கு வரல்லையாக்கும்!

    ஹா...ஹா... ஆஹா.... எதிர்மறைச் சிந்தனை!

    இருங்க... ரெண்டாம் தாரம் படிக்கிறேன்.. ச்சீ... ரெண்டாம் தரம் படிக்கிறேன்.... அடப்பாவி... தப்புங்க...


    ReplyDelete
    Replies
    1. பயபிள்ள ,டியூசன் படிக்க வாத்தியார் வீட்டுக்கு போயிருந்தால்அல்லவா , தமிழ் ஞாபகத்திற்கு வந்திருக்கும் ))))))))

      அணைக்கனும்னு நினைக்கிறது எதிர்மறைச் சிந்தனையா )))))

      ரொம்பத்தான் நொந்து போயிருப்பார் போலிருக்கே ))))
      நன்றி

      Delete
  4. ஹாஹாஹா ....நல்ல தமிழ் வாத்தியார்.....

    இரண்டாவதும் அருமை ஜி.....ஹாஹாஅ....... சொக்கன் சார் சொன்னதும் அட ஆமாம்ல....



    ReplyDelete
    Replies
    1. இந்த வாத்தியார் வீட்டில் டிவுசன் படிக்க இடம் கிடைக்காத காரணம் இப்போதானே புரியுது ))))))

      வேகமாய் வரணும்ன்னா 108 ஒட்டுனரைதான் கட்டிக்கணுமோ)))
      நன்றி

      Delete
  5. மகா கவி பாரதி யார் னு கேட்டா உடனே சொல்லிடுவாங்களே ?

    ReplyDelete
    Replies
    1. பாரதியாரை தெரியாது என்பவர்கள் கூடச் சொல்லி விடுவார்கள் )))
      நன்றி

      Delete
  6. Replies
    1. இரட்டிப்பு நன்றி !

      Delete
  7. ஹா... ஹா....
    தீ-அணைப்பு அருமை அண்ணா...
    பார்றா மாமனாரும் அம்மாவும் போன இடத்துக்கு மனைவியையும் போகச் சொல்லிட்டு இவரு இங்க என்ன பண்ணப் போறாராம்....

    மகா... கவி... பாரதி... அட சூப்பரு...

    ReplyDelete
    Replies
    1. வள்ளுவர் சொன்ன மாதிரி ,இடுப்பு உடை நழுவும் போது எவ்வளவு வேகமா செயல் பாடு நடக்குமோ ...அப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்னு நினைக்கிறாங்க போல )))

      இவரும் சீக்கிரம் போய் சேரலாம்னு திட்டமாய் இருக்குமோ ?

      நீங்களும் அவரோட மூன்று பொண்ணுங்களையும் பார்த்து இருப்பீங்க போலிருக்கே )))

      நன்றி

      Delete
  8. பாரதியை பய எப்படி ஞாபகம் வச்சிருக்கான்னு பாவம் அந்த வாத்தியாருக்கு தெரியாமலே இருக்கட்டும் பாஸ்:)))

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாருக்கு நாம என்ன சொல்லித் தர வேண்டியிருக்கு ?))))))
      நன்றி

      Delete
  9. வணக்கம்
    இரசிக்கவைக்கும் நகைச்சுவை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் பாரதி ,கவி ,மகாவை ரசித்தீர்களா ,ரூபன் ஜி ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. எல்லாவற்றையும் தானே ?
      நன்றி

      Delete
  11. பையனுக்கு
    அவரோட பொண்ணுங்களில தான்
    கண்ணோ...
    அவரு
    அணைப்பார்ங்கிற நம்பிக்கை
    அவவுக்கு இல்லையாமோ...
    அவ போனால் தான்
    அவருக்கு நோகுமாமோ...
    நன்றாக
    ஆய்வு செய்திருக்கிறியளே!

    ReplyDelete
    Replies
    1. வாத்தியார் பாரதியாரை ரசித்தால் ,பசங்க அவர் பொண்ணுங்களை ரசிக்கிறாங்களே))))))

      நன்றி

      Delete
  12. நல்ல ஆய்வு!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆய்வுக்கு உதவியவர்களுக்கும்,கருத்து சொன்ன உங்களுக்கும் நன்றி !

      Delete
  13. அவர்கள் மணியாட்டி வருவதற்குள்ள முழுவதும் சாம்பலாகிவிடும் நிலையை இப்படி நாசூக்கா சொல்வது தங்களைத் தவிர யாருமில்லை ...தலைவரே........

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை எழுந்து வருமான்னு பார்க்க வருவார்களோ ?)))))
      நன்றி

      Delete
  14. நல்ல ஞாபகசக்தி! இந்த சந்தேகம் தேவையா?

    ReplyDelete
    Replies
    1. வல்லாரைக் கீரை சாப்பிடாமலே இவ்வளவு ஞாபகசக்தின்னா ,இன்னும் ......)))))))))

      தீயை அணைப்பது என்பது பொதுக்காரியம் .சொந்த காரியத்தில் வேகமாய் இருப்பார் என்று ஏன் நம்ப மறுக்கிறாங்க ?))))))
      நன்றி

      Delete