22 September 2014

இப்பவுமா துணை வருவாள் துணைவி ?

------------------------------------------------------------------------------
நொந்து நூடுல்ஸ் ஆனவர், ,நூடுல்ஸ் ஸ்டால் போடலாமே !

''புத்தகத் திருவிழாவில் ,அந்த பதிப்பாளர் போட்ட புத்தகம் விற்கலைன்னு எப்படி சொல்றே ?''
''அடுத்த வருடம் புத்தக ஸ்டாலுக்கு பதில் டெல்லி அப்பள ஸ்டால் போடப் போறேன்னு சொல்றாரே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

இப்பவுமா  துணை வருவாள் துணைவி  ?
''உங்க வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக் கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
''சனி பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''

குற்றவாளியைவிட மோசமானவன் தப்பிக்க விடுபவன் !

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது 
இது நீதித் துறையின் அடிப்படை அம்சம் !
காவல் துறையில் உள்ள கறுப்பாடுகள் இதை சுயநலத்திற்காக வேறுவிதமாக புரிந்து கொண்டு செயல் படுவார்களோ ?
ஆயிரம் குற்றவாளிகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ...
மாட்டிக் கொண்ட ஒரு குற்றவாளியை தப்பிக்க வைத்தால் என்ன குடிமுழுகியா போய்விடும் என நினைத்து  ...
கிரிமினல்களையும் ,பயங்கரவாதிகளையும்  தப்ப விடுகிறார்களோ !

26 comments:

  1. 01. வியாபாரம் சூடுபுடிச்சு பறக்குறதுக்கா ?

    02. டாக்டர் மேல இவ்வளவு நம்பிக்கையா ?

    03. மாற்று சிந்தனையை வரவேற்போம்.

    ReplyDelete
    Replies
    1. 1.நம்ம ஊர்லே எழுதி ,பதிப்பித்து சம்பாதிப்பதே விட டெல்லி அப்பளம் சுட்டு நிறையவே சம்பாதித்து விடலாம் போலிருக்கே ))))))
      2.இருக்காதா பின்னே ,கைராசியான டாக்டராச்சே ?))
      3.நல்லவேளை மாமூலை வரவேற்ப்போம் என்று சொல்லலே )))))
      நன்றி
      3.

      Delete
  2. :))) சனிப் பிணம் தனியாகப் போகாது தான் :))

    ReplyDelete
    Replies
    1. இது உண்மைதானா என்பதற்கு விஞ்ஞான விளக்கம் இருப்பதாக தெரியவில்லை )))))
      நன்றி

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  4. ரசித்தேன் பகவான் ஜி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனைக்கு என் நன்றி !

      Delete
  5. இந்தியக்குற்றவியல் சட்டமே , ஒரு அறைகுறை பாதகசாதகங்களை கொண்டு சுழல்கிறது . சாதகங்களை குற்றங்கள் புரிவோரும் , பாதகங்களை , சாதரண குடிமக்களும் அனுபவிக்கிறார்கள் .

    அருமை அண்ணா !!!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. நடப்பைப் பார்த்தால் நீங்கள் சொல்வது போல்தான் இருக்கிறது !
      நன்றி

      Delete
  6. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசிப்புக்கு நன்றி அய்யா !

      Delete

  7. குற்றவாளியைவிட தப்பிக்க விடுபவன்
    மோசமானவன் தான்! - அதை
    காவற்றுறையே செய்தால்
    நாடு எப்படி உருப்படும்!

    ReplyDelete
    Replies
    1. காவல் துறையிலும் சில புல்லுருவிகள் இருக்கத்தானே செய்கிறார்கள் ?அதனால் தானே இப்படியெல்லாம் நடக்கிறது ?
      நன்றி

      Delete
  8. மூன்றையுமே ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மூன்றையும் ரசித்தமைக்கு முத்தான என் நன்றி !

      Delete
  9. மூன்றுமே அருமை! ஜி!

    கொஞ்சம் வேலைப்பளு அதனால் தங்கள் தளத்திற்கு தாமதமாக வருகின்றோம்....வேலைப்பளுவின் காரணம்.......வலைச்சரத்தில் காணலாம்....ஜி பொருத்துக் கொள்ளுங்கள் ஜி!

    ReplyDelete
    Replies
    1. வலைச் சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றுக் கொண்டது அறிந்து மகிழ்ச்சி !உங்களின் பன்முகத் திறமையால் கலக்குங்க ஜி ,வாழ்த்துகள்!
      நன்றி

      Delete
  10. எல்லாம் இன்ப மயம்.

    ReplyDelete
    Replies
    1. அது எனக்கு பிடித்த கமலின் நகைச்சுவை படமும்கூட !
      நன்றி

      Delete
  11. Replies
    1. நவரசமாய் ஆக்கியதற்கு நன்றி !

      Delete
  12. அந்த டாக்டரை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு தான் கணவரை அங்க கூட்டிட்டு போயிருக்கு போல அந்த பொண்ணு!! என்ன கிரிமினலா யோசிக்கிறாங்கப்பா:)))

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ஜோடியா 'அங்கே'போக சம்மதம் இல்லை போலிருக்கே )))
      நன்றி

      Delete
  13. துணையாக வருபவள்தானே துணைவி............

    ReplyDelete
    Replies
    1. வீதி வரை மனைவி என்று கவியரசர் சொன்னது தவறா ?)))))))
      நன்றி

      Delete