13 September 2014

வாடி ,போடின்னு கணவன் சொல்ல காரணம்...!

----------------------------------------------------------------------------

கடைக்காரர் செய்தது சரிதானே?  

''அந்த ஜெராக்ஸ் கடைக்காரர் உன்கிட்டே காசே தர வேண்டாம்னு சொல்லிட்டாரா ?நீ என்ன செஞ்சே ?''
''ஜெராக்ஸ் காப்பியையும்  ஒரிஜினலையும் படிச்சு , செக் பண்ணிட்டு காசு தர்றேன்னு சொன்னேன் ,தப்பா ?''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

வாடி ,போடின்னு உரிமையாய் சொல்ல காரணம்...!

''உன் பெண்டாட்டியை நீ வாடி ,போடின்னு சொல்றது எனக்கு சரியாப்படலே !''
''சரி ,சொல்லிட்டுப்போடான்னு அவளே சொல்லும்போது உனக்கென்ன வந்தது ?''


வாழ்க்கை தத்துவமே வெங்காயத்தில்  இருக்கு!

உரிக்கும்போது கண்ணீரை வரவழைக்கும்  வெங்காயம்தான் ...
நாவிற்கு சுவை !
வாழ்க்கையும் அப்படித்தான் ...
கஷ்டத்தில் கண்ணீரும் 
கடந்த பின்  மகிழ்ச்சியும் தருகிறது !

30 comments:

  1. 01.இவரு வெவரமான ஆளா ? வெவகாரமான ஆளா ?

    02. புள்ளைய மருவாதையா ? வளர்த்து இருக்காங்க....

    03. தத்துவம் ஸூப்பர் பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1.நாட்டிலே அவனவன் ஜெராக்சில் கள்ள நோட்டையே பிரிண்ட் பண்ணிக்கிட்டிருக்கான் ,இவன் என்னடாவென்றால் ..........))
      2.கேட்டா இப்படி புருஷன் பெண்டாட்டிப் பேசிக்கிறதுதான் இப்போ பேஷன்னு வேற சொல்றாங்களே )))))))
      3.படிச்சிட்டு கண்ணீர் வீட்டிருப்பீங்களே)))))
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    நல்ல நகைச்சுயும் நல்ல தத்துவமும் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தத்துவம் கூட நமக்கு நகைச்சுவை தானுங்களே ))))))
      நன்றி

      Delete
  3. நகைச்சுவைப் பதிவுடன் தத்துவப்பதிவும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சிரித்தாலும் கண்ணீர் வரும் ,வெங்காயத்தை நறுக்கினாலும் கண்ணீர் வரும் என்பதற்காக ,நகைச்சுவை தத்துவத்தை ரசித்ததற்கு நன்றி !

      Delete
  4. காப்பியா ஒரிஜினலா
    சரியாப்படலயா சரியா
    துன்பத்தின் பின் மகிழ்ச்சியா
    எப்படியோ
    வெங்காயத் தத்துவம்
    எனக்குப் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. வெங்காயம் போட்டா எதுவும் ருசிக்கத்தானே செய்யும் ?தத்துவம் மட்டும் விதிவிலக்கா என்ன ?))))))))
      நன்றி

      Delete
  5. வெங்காயம் மூலம் சொன்ன தத்துவம்! மிக நன்று.

    ReplyDelete
    Replies
    1. வெங்காய பஜ்ஜி மாதிரி உங்களுக்கும் அது பிடித்ததா ,வெங்கட் ஜி ?
      நன்றி

      Delete
  6. ஹா ஹா ! உன்ன , உங்களுக்கு மூளையோ மூளைணே !!

    ReplyDelete
    Replies
    1. தினசரி பச்சை வெங்காயம் சாப்பிட்டுப் பாருங்க ,உங்க மூளையும் எப்படி வேலை செய்யும்னு தெரியும் !))))
      நன்றி

      Delete
  7. நகைச்சுவையும் தத்துவமும் அருமை..
    சிரிப்பும் சிந்தனையுமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. பொதுவா யாருக்கும் தத்துவம் என்றாலே பலருக்கும் பிடிக்காது ,இதில் வெங்காயம் இருப்பதால் எல்லோருக்கும் பிடிக்கிறதோ ?))))))
      நன்றி

      Delete
  8. ஹா...ஹா...ஹா...

    ஹா...ஹா...ஹா... அதானே.... சம உரிமை!

    உண்மைதாங்க...


    ReplyDelete
    Replies
    1. தம்பதிகள் நண்பர்கள் மாதிரி பழகணும்னு டா போட்டு பேசிக்கிட்டா தப்பில்லே தானே ?))))
      நன்றி

      Delete
  9. எல்லாமே சூப்பர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு சில நாட்களில் என்னை அறியாமல் இப்படி அமைந்து விடுகிறதே ))))
      நன்றி

      Delete
  10. Replies
    1. இது எனக்கு சூப்பர் டானிக் !
      நன்றி

      Delete
  11. அவரு போடின்னு சொல்ல....அவுக போடான்னு சொல்ல.... இரண்டு பேருமே சமமா இருக்கும்போது...ஊடால எதுக்கு நரி......!!

    ReplyDelete
    Replies
    1. நரி ஊளை இடத்தான் செய்யும் விடுங்க ,இப்படியாவது சமத்துவம் வரட்டுமே )))))
      நன்றி

      Delete
  12. மூன்றுமே அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது ,மூன்றுமேவா?
      நன்றி

      Delete
  13. உண்மையா சொல்லவா பாஸ் ,எனக்கு முதல் ஜோக் புரியலை:((
    ஆன ரெண்டாவது ஜோக் தம்பதியரின் அன்யோன்யம் அல்லவா தெரிகிறது:))

    ReplyDelete
    Replies
    1. நானும் உண்மையை சொல்லி விடுகிறேன் டீச்சர் ...அந்த பயபிள்ள நகலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்றனாமே)))))))))

      என்னங்க என்பதில் உள்ள அன்னியோன்யத்தை விட இதில் அதிகமா தெரியுதா ))))
      நன்றி

      Delete
    2. முதல் ஜோக் இப்போ புரியிது:)) மைதிலி இவ்ளோ ட்யுப் லைட்டா இருக்காளே??
      \என்னங்க எல்லாம் ஓல்ட் பேஷன் பாஸ்:)) வெளியில் வேணா அப்படி சொல்லிக்கலாம்:))

      Delete
    3. எனக்கு விருது கொடுத்த நீங்களா டியூப்லைட்?))அப்ப நான் அடிக்கடி அணையிற சோடியம் லைட்டா??
      மனைவியை 'வாடி போடி'ங்கிறதுதான் ஓல்ட் பேஷன் ,அப்படி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை !
      நன்றி

      Delete
  14. ஹாஹாஹா ஜோக்ஸ்!

    வெங்காயத்துக்குள் இவ்வளவு பெரிய தத்துவமா?!!!! ஜி? சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. கண்ணைக் கசக்கி யோசிச்சு கண்டு பிடிச்ச தததுவம்)))
      நன்றி

      Delete