9 September 2014

சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலம்!

-----------------------------------------------------------------------------------------------------------------------
இப்படியும் சின்னதா கடிக்கலாம் !

''தலைவரே ,அதுதாங்க பள்ளிவாசல் !''

''அப்படியா ,எந்த பள்ளிக்கு வாசல் ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


தம்பதிக்குள் 'குளுர்'விட்டுப் போகலாம் ,ஆனால் ...?

''இன்ஸ்பெக்டர் டிரஸ் மேலே ஜெர்கின் கோட் வேற போட்டிருக்கேன் ,அப்பவும்  எனக்கு குளிர்ற மாதிரி தோணுது ,உனக்கும் குளுருதா கபாலி ?''
''எனக்கு எப்பவோ குளுர் விட்டுப் போச்சு சார் !''
சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலம்!
சமந்தா ரெட்டி தான் உடுத்திய உடைகளை 
ஏலம் போட்டு வருகிற பணத்தில் 
ஏழைக் குழந்தைகளுக்கு உதவப் போகிறாராம் !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
உங்கள் உதவியை உங்கள் மாநிலக் குழந்தைகளுக்குக் கூட செய்துக் கொள்ளுங்கள் ... 
ஆனால் ...ஏலம் சென்னையில்தான் நடக்கணும் !
சிலுக்கு ஸ்மிதா கடித்த கொய்யாப்பழ எச் 'சிலுக்கு 'கொட்டிக் கொடுத்தவர்கள் இங்கேதான் ஏராளமாய் இருக்கிறார்கள் !
 உங்க பல் பதிந்த ரொட்டிக்கு கூட 
கோடிகளை கொட்ட ஜொள்ளர்கள் இங்கே 
காத்துக் கிடக்கிறார்கள் !

22 comments:

  1. 01.நேத்து மாதிரியே முடிச்சுப் போடுறீங்க போலயே....

    02. தராதரம் பார்த்து பழகியிருந்தா,,, குளிர் விட்டுப் போயிருக்குமா ?

    03. நிச்சயமா இந்த ரெட்டியோட ஜட்டிய,, ஸோரி ரொட்டிய வாங்குற கூட்டத்துல நான் இருக்க மாட்டேன் பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1.இந்த முடிச்சை ஈசியா அவிழ்க்கலாமே?))

      2 காசு வர்ற வழி அதுதானே ,தராதரம் பார்க்கமுடியுமா ?

      3 ஆடைன்னு சொன்னா நீங்க ஏன் இப்படி உள்ளாடை ஆராய்ச்சியில் இறங்குறீங்க ?))

      நன்றி

      Delete
  2. முதல் இரண்டும் ஹா...ஹா...ஹா...

    மூன்றாவது வேதனையான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை.மூன்றுமே உண்மையான வேதனை என்று சொல்லாமல் விட்டதற்கு !
      நன்றி

      Delete
  3. அந்த ஜொள்ளர்கள் கூட்டத்தின் தலைவருக்கு வாழ்த்துக்கள். (உங்களுக்கு தான் வாழ்த்து சொல்லணும்னு நினியச்சேன்....)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப குசும்பு சொக்ஸ்

      Delete
    2. சொக்கன் ஜி ,என் தள விளம்பரம் மூலம் ஒரு டாலர் சம்பாதிக்க வாழ்நாள் போதாது போலிருக்கு .எனக்கெங்கே தலைராகும் தகுதி ?
      நன்றி

      Delete
    3. மது ஜி ,குசும்பு எனக்கா ,எந்த பள்ளின்னு கேட்டவருக்கா என்று சொல்லாதது உங்க குசும்புதானே ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. ஜோக்காளி தளத்தை நீங்க வலம் வந்து ,நீங்க சொன்ன கருத்துக்கு நன்றி !

      Delete
  5. முதல் இரண்டும்...ஹாஹாஹ....செம...

    3 வது சே என்ன மக்கள் அப்படின்னு ஒரு கோபம்.....

    ReplyDelete
    Replies
    1. இப்படி குளிர் விட்டு போன குள்ளநரிக் கூட்டம் நாட்டிலே பெருகிடுச்சு ,இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  6. தெரியாத வாசலை...அதாங்க பள்ளி வாசலை காட்டிபிட்டிங்க ஜீ..

    ReplyDelete
    Replies
    1. நான்தான் பள்ளி வாசலை மிதிக்க வில்லை ,நீங்களுமா ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. சென்ற வாரம் ,லண்டனில் ஒரு நடிகை இப்படித்தான் உதவப் போகிறேன் என்று தன் முத்தத்தை பெற்றுக் கொள்ள ஏலம் விட்டாராம் ,49 லட்சம் கொடுத்து முத்தம் பெற்றுக் கொண்டவர் யார் தெரியுமா ?இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூலியன் பாரதி என்பவர்தான் !
      நமது பெருமையை நிலைநாட்டிய அவருக்கு பாராட்டுக்கள் !
      நன்றி

      Delete
  8. மழைக்குக்கூட பள்ளி பக்கம் நாங்க ஒதுங்க மாட்டோமில்ல, அதான் எந்த பள்ளி ?.

    ReplyDelete
    Replies
    1. பள்ளி வாசலையே மிதிக்க மாட்டோம் ,அப்புறமில்லே பள்ளியில் ஒதுங்குறது ?)))
      நன்றி

      Delete
  9. சம்ந்தா ரெட்டி - அட என்ன மனிதர்கள்..... :(

    பள்ளிவாசல் - பிரித்து விட்டீர்களே!

    ReplyDelete
    Replies
    1. மிக மிக ரசனை மிக்க மனிதர்களோ அவர்கள் ?

      பிரித்தால் பாவம் சிரித்தால் போச்சே ?

      நன்றி

      Delete
  10. மூன்று பதிவிலும்
    சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலம்!
    முன்னிலையில் இருக்கிறதே!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ரொட்டி மணம் அப்படி !
      நன்றி

      Delete