5 September 2014

மனைவியின் அர்ச்சனைக்கு 'அது' தேவையில்லைதானே ?

           ''குலம் கோத்திரம்  தெரியக்கூடாதுன்னு ஜாதகம்  கொடுக்காம கல்யாணம் பண்ணியும் புண்ணியமில்லாமப்  போச்சா ,ஏன் ?''
           ''வீட்டிலே எனக்கு தினசரி அர்ச்சனை நடந்துகிட்டுதானே இருக்கு ?''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
சர்க்கரை நோய் இருந்தா இப்படியும் ஒரு வாய்ப்பு !
''உங்க ஸ்வீட் ஸ்டால் கடைக்கு எப்படிப்பட்ட ஆட்கள்  வேலைக்கு வேணும் ?''
''அவங்களுக்கு கண்டிப்பா சர்க்கரை நோய் இருக்கணும் !''


திருமணம் நிற்க வலுவான காரணம் வேணும் !

அந்நிய செலாவணியை குறைப்பதற்கு ...
பெட்ரோல் நிலையங்களை இரவு மூடிவிடலாம் என்று
திருவாய் மலர்ந்து இருக்கிறார் பெட்ரோலிய மந்திரி !
அவர் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார் ...
ஏனென்றால்  ...
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்குமா என்ற பழமொழி 
செம்மொழி தமிழில் மட்டும்தானே இருக்கிறது ?

20 comments:

  1. வலைவுலக நண்பர்களான ஆசிரியர்களுக்கு ...ஜோக்காளி தள ஆசிரியரின் (படிக்கத்தான் மாணவர்கள் இல்லை )ஆசிரியர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. குலம் கோத்திரம், சர்க்கரை நோய் பார்ப்போர்
    சீப்பை ஒளித்து வைத்தால் என்ன ஆகும்?
    இன்றைய பதிவு இப்படிக் கலக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. கலக்கலான பதிவு போடலைன்னா ஆசிரியர்கள் கோபித்துக் கொள்வார்களே ,இன்று அவர்கள் தினம் ஆச்சே !
      நன்றி

      Delete
  3. சக்கரை நோயாளி! சுவை! இனித்தது

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,சர்க்கரை நோயாளிகளுக்கு இதைப் படிக்கும் போது கசக்குமோ ?
      நன்றி

      Delete
  4. 01. அவளோட பேரு அர்ச்சணாவோ ?

    02. ஸ்வீட் திங்காட்டாலும் மிக்சரை காலி பண்ணுவானே....

    03. இந்த மாதிரி அறிவாளியெல்லாம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

    ReplyDelete
    Replies
    1. அர்ச்சனா என்றால் அர்ச்சனைகுரியவள் ஆச்சே !

      மிக்சர் போடுற இடமே வேற ...அங்கே உப்பு சாப்பிடக்கூடாதவங்க மட்டும் வேலை செய்றாங்க !

      இந்திய நாட்டுக்கே கிடைத்த வரப் பிரசாதம்னு சொல்லணும் !
      நன்றி

      Delete
  5. அர்ச்சனையை இப்படியும் செய்யலாம் என்று வழிகாட்டியிருக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. நல்ல வழிகாட்டிய அவருக்கு நன்றி சொல்லும் நேரத்தில் உங்களுக்கும் நன்றி !

      Delete
  6. வீட்டம்மாவோட அர்ச்சனைக்கு குலம் கோத்திரமெல்லாம் தேவையில்லைதான்! ஸ்வீட் கடைக்காரர் சரியாத்தான் தேடறார்! அரசியல்வாதியின் உளறல் இது! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. குலம் கோத்திரம் தெரிஞ்சா மட்டும் ஆரத்தியா எடுக்கப் போறாங்க ?

      அவர் தேடுதல் நிறைவேறட்டும் என்று வாழ்த்தலாமா ?

      அவர் உளறுவதும் கூட தலைப்பு செய்தியாகி விடுகிறதே !

      நன்றி

      Delete
  7. எல்லோருடைய வீட்டிலும் அர்ச்சனை நடக்கிறது தான். இதையெல்லாம் வெளியே சொல்ல முடியுமா என்ன?
    ஸ்வீட் கடை முதலாளி - அறிவுள்ள முதலாளியாக அளவ இருக்கிறார்.

    வழுக்கைத் தலை மணமகனுக்கும், பாய்கட் மணமகளுக்கும் நடக்கும் திருமணத்தில் சீப்பை ஒளித்து வைத்தால், திருமணம் ஒன்றும் நிக்காது தான்.

    ReplyDelete
    Replies
    1. அர்ச்சனை நடப்பது நீங்கள் சொல்லித்தான் கேள்விப் படுகிறேன் ))))))))))

      அறிவுள்ள முதலாளியால் இனிப்பும் ,உப்பும் சாப்பிட முடியவில்லையே !

      திருமணம் ஒன்றும் நிக்காது என்று சொல்வதைவிட திருமணம் என்பது நிக்காஹ் என்றே சொல்லலாமோ ?
      நன்றி

      Delete
  8. எப்படியோ சிரிக்க வைச்சிடறிங்க......!
    வாழ்த்துகள்!
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ நீங்க சிரிக்கிறதுக்கு என் நன்றி !

      Delete
  9. ரசித்தேன்.....

    மேலும் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி !
      நீங்க பதிவு போட்டு நாளாச்சே,நீங்களே சொல்வது போல் ஆபீஸில்'ஆணி பிடுங்கிற 'வேலை அதிகமா இருக்கோ ?

      Delete
  10. Replies
    1. உங்களின் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி பால் பாண்டி !

      Delete
  11. ரசித்தமைக்கும்,தமிழன் குரல் தகவல் தந்தமைக்கும் நன்றி !

    ReplyDelete