11 September 2014

பொண்ணு பார்க்கும் போது முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது !

---------------------------------------------------------------------------------
பாரி முனையும் ,பாரிஸும் ஒன்றா ?            
                 
              ''ஹலோ ,நான் இப்போ விமானத்தில் பறந்துகிட்டு இருக்கேன் ,அதனாலே  நீ பேசுறது சரியா எனக்கு கேட்க மாட்டேங்குது !''
             '' எதிர்த்த  பிளாட்பாரம் பார்த்து பேசு ,சிக்னலும் கிடைக்கும் ,நான் நிற்கிறதும் தெரியும் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


பொண்ணு பார்க்கையில் முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது !

           ''புது பெண்டாட்டிகிட்டே ,நீ டெய்லி டைரி எழுதுவேன்னு சொன்னது தப்பா போச்சா , ஏண்டா ?''
           ''நான் கராத்தேயில்  ப்ளாக் பெல்ட் வாங்கினவ...என்னை அடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்ககூடாது ...அப்புறம் ,டைரியிலே 'இன்று திருப்பு முனை ஆன நாள் 'ன்னு எழுத வேண்டியிருக்கும்னு  சொல்றாளே !''


லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ ?

ஒரு சில கோவில்களில் ...
'பிற மதத்தினர் உள்ளே செல்ல அனுமதிஇல்லை 'என எழுதப்பட்டுள்ள வாசகங்களைப் படிக்கையில் மனதில் வலிக்கின்றது !
இதற்குப் பதிலாக ...
வழிபாடு ஸ்தலங்களில் எல்லாம் ...
'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் 'என்று
எழுதி வைத்தால் நன்றாயிருக்குமே !

25 comments:

  1. ஹாஹா....மொபைல் ஃபோனின் வசதி....சூப்பர்.....

    கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல பையன்....

    அன்நியன் அம்பி??!!!!

    ReplyDelete
    Replies
    1. 'காலிங் பெல்' லாக கூட மாறிவிட்டது ))))))))

      கொஞ்சமா ,நிறையவே !

      ஊருக்கு அந்நியன் அம்பி நேரில் வந்தால் நன்றாய் தானிருக்கும் !

      நன்றி !

      Delete
  2. மூன்றாவது நல்ல யோசனை!

    ReplyDelete
    Replies
    1. கல்லா நிறையாதே ,யார் இதை வரவேற்பார்கள் ?
      நன்றி

      Delete
  3. லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ ?

    வரணும் ..சீக்கிரம் வரணும்..

    ReplyDelete
    Replies
    1. வரணும்தான் ,எத்தனை தலைமுறை கழித்து வருமோ )))))
      நன்றி

      Delete
  4. மூன்றாவது சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நானும் சிந்தித்து என்னவாகப் போகிறது ?லஞ்சம் வாங்குறவன் இல்லே சிந்திக்கணும் ?)))))))
      நன்றி

      Delete
  5. முதல் இரண்டையும் மறக்கடிக்க வைத்து விட்டது மூன்றாவது. அருமையோ அருமை.

    ReplyDelete
    Replies
    1. காரணம் ,லஞ்சம் அந்த அளவிற்கு நம்மை நோகடிக்கிறது என்பதால் தானே ?
      நன்றி

      Delete
  6. 01. அவனுக்கு.... புரூடா விடுறதுக்கும் ஒரு அளவு தெரிய வேண்டாமா ?

    02. அப்படீனா... இந்த முன்யோசனைக்காரி எப்படியும் தப்பிச்சுகிருவாள்.

    03. அப்படீனா... கோயிலு காத்தாட கிடக்கணும்னு சொல்றீங்களா ? (பகவான்ஜி, நல்ல யோசனைதான் இதை நம்மைப்போன்ற வெளியாட்கள் எழுதிப்போட்டால் ? நம்மளை ‘’போட்டு’’விடுவார்களே...)

    ReplyDelete
    Replies
    1. 1.இப்ப அளவு தெரிந்து இருக்கும்னு நம்பலாம் )))))))

      2.தப்பிக்கிறதா ,திருப்பி அடிக்காம இருந்த சரிதான் )))

      3. இந்த யோசனையை சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுதான் ! லஞ்சம் கொடுத்து தரிசனம் செய்பவர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்தான் !
      நன்றி

      Delete
  7. மூன்றாவது நன்று! ஆனால் கோவிலில் கூட்டமிருக்காது!

    ReplyDelete
    Replies
    1. கூட்டம் இல்லாவிட்டால் கோவில் விளக்கு எண்ணைக்கும் லாட்டரிதான் !
      நன்றி

      Delete
  8. மொபைலை தோலுரித்த ஜோக் சூப்பர்! கணவன் உஷாராத்தான் இருக்கணும்போல! ஆலயங்கள் அனைவருக்கும் பொதுவன்றோ?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் , கொலைகாரனும் ,கொள்ளைக்காரனும் ,கற்பழிப்பவனும் ,நல்லவனும் சமம்தான் !
      நன்றி

      Delete
  9. மூன்றையும் ரசித்து த ம மூன்று போட்டதற்கு நன்றி !

    ReplyDelete
  10. ''..' எதிர்த்த பிளாட்பாரம் பார்த்து பேசு ,சிக்னலும் கிடைக்கும் ,நான் நிற்கிறதும் தெரியும் !''.........ha!..ha!.. ijo!.......konnuddeenka!...

    ''..'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் 'என்று
    எழுதி வைத்தால் நன்றாயிருக்குமே !..'' This is xactly right......

    good ..good...Book mark panniden..Thank you...Thank you. sir....
    Vetha.Elangathilakm.

    ReplyDelete
    Replies
    1. book mark பண்ணிகிட்டதுக்கு நன்றி !

      Delete
  11. எனக்கு அப்பவே தெரியாம போச்சே...பொண்ணு பாக்க போகும்போது.................

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேலை தப்பிச்சீங்க ,அப்போ பிளாக் பெல்ட் எல்லாம்தான் கிடையாதே !
      நன்றி

      Delete
  12. படித்துச் சுவைக்க
    சிறந்த நகைச்சுவை விருந்து
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி !

      Delete
  13. .மூன்றாவது நல்ல யோசனை
    ஆனால் கோவிலில் கூட்டம் குறையத் துவங்கிவிடாதா ?

    ReplyDelete
    Replies
    1. கூட்டம்தான் முக்கியம் என்றால் அயோக்கிய அரசியல்வாதிக்கும் ,கோவிலில் இருப்பதாக நம்பப் படும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் ?
      நன்றி

      Delete