8 September 2014

நடிகையோட கணவனுக்கு இது தெரிஞ்சா ...?

ஒரு குடிகாரனின் தத்துவம் !

         ''மச்சி ,நமக்கு பிராந்தி ,பீர் ,ரம் பிடிக்குது .ஒயின் பிடிக்காத காரணத்தை கண்டு பிடிச்சிட்டியா ?''
     ''ஓயின்னு  சொல்லிப் பாரு ,உதடுகள் கூட ஒட்ட மாட்டேங்குதே !''



சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


நடிகையோட கணவனுக்கு இது தெரிஞ்சா ...?

               '' உன்னை கதாநாயகியா நான்தான் அறிமுகப் படுத்தினேன் ...ஆனா, உன் கல்யாணத்திற்கு வர முடியலேன்னு வருத்தமா இருக்கு !''
           ''டோன்ட் ஒர்ரி ,அடுத்த தடவை கட்டாயம் வந்துடுங்க சார் !''

143 ன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு !


143ன்னு  சொன்னா ...
வாலிப அகராதியில் வேண்டுமானால் 
i love you என்றிருக்கலாம் !
ஆன்மீக அகராதியில்,
அது நேபாளில் உள்ள சிவன் சிலை 
உயரத்தைக் குறிக்கும் !

22 comments:

  1. ஹா... ஹா... ஹா... இதிலும் உதடுகள் ஒட்டணுமா?

    ஹா...ஹா..ஹா... ஆனா, இப்பல்லாம் இந்த வழக்கம் (கொஞ்சம்) குறைஞ்சிருக்குன்னு நினைக்கறேன்!

    நிஜமாகவ் இது எனக்கு புதிய தகவல்.

    ReplyDelete
    Replies
    1. ஜூஸ்ன்னா உதடு ஒட்ட மாட்டேங்குது ,அதுக்காக நாம அதைக் குடிக்காம இருக்க முடியுமா ?

      குறைஞ்சிருந்தாலும் கூட கட்டிகிட்டவன் அடி வயிற்றில் எப்பவும் கலக்கம் இருந்து கொண்டேதானே இருக்கும் ?

      ஒரு முறை நேபாள் சென்று உறுதிபடுத்திக்குங்க))))
      நன்றி

      Delete
  2. Replies
    1. தத்துவம் உங்களுக்கும் பிடித்து விட்டதா ?)))))
      நன்றி

      Delete
  3. 143 - க்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? புதிய தகவல்... :)

    ஒயின்.... அவங்க கவலை அவங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த டூர் நேபாளுக்கு தானா ?))))

      அது சரி ,அவங்களுக்கு எது பிடிச்சா நமக்கென்ன ?
      அவங்க உளறல் நமக்கு பிடிச்சா சரி )))))))))

      நன்றி




      Delete
  4. குடிகாரனுக்கு கூட தத்துவம் கண்டுபிடிச்சிட்டீங்களே! ஹாஹா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஊறுகாய் என்றாலும் உதடு ஓட்டலே ,ஆனால் தொட்டுக்காத குடிகாரன் உண்டா ?
      நன்றி

      Delete
  5. 01. விஸ்கி, சாராயம், கள்ளு இதையெல்லாம் விட்டுப்புட்டீங்களே....

    02. அப்படீனாக்கா ? இப்பவே கன்ஃபாம் ஆயிடுச்சா ? டைவேர்ஸ்...

    03. மொட்டைத்தலையவும், முழங்காலையும் முடிச்சுப் போட்டுடீங்களே பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1.சாம்பிளுக்கு மூணு போதாதா ?

      2.இத்தனை நாள் நீடிக்கும்னு அக்ரிமேண்டா இருக்கு ?

      3.இரண்டிலும் 143 இருக்கே !
      நன்றி

      Delete
  6. மூன்றும் முத்தானவைகளே

    ReplyDelete
    Replies
    1. எனவே ,மூன்று நன்றி ,நன்றி நன்றி !

      Delete
  7. Replies
    1. ரொம்ப சிக்கனமா குட் என்று மட்டும் போட்டு முடிச்சிக்கலாமா கிங் ராஜ் ?
      நன்றி

      Delete
  8. தலைப்பே இரசித்தது!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடித்த தலைப்பு எதுவாயிருக்கும்னு தலையைப் பிச்சுகிட்டேன் !
      நன்றி

      Delete
  9. இதுக்கு கூடவா உதடு ஒட்டனும்? யப்பா, எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க!!!

    நடிகை ஒரு கல்யாணம் மட்டும் பண்ணினால் தான் ஆச்சிரியம். அடுத்த கல்யாணத்துக்கு, உங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்போறாங்களாம்!!!

    அட! 143 -தெரியாத ஒரு ஆன்மிக விஷயத்தை சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் குடிக்கும் போது இதை நான் யோசிக்கலை,குடிகாரனைப் பார்த்து யோசித்தது !

      அழைப்பிதழ் வரட்டும் ,பதினாறு பேறு இல்லை இல்லை ..பேருடன் பல்லாண்டு வாழ்கன்னு வாழ்த்திடுகிறேன்!

      காதல் சொல்ல வந்தேன் ,ஆன்மிகம் வந்து விட்டது !
      நன்றி

      Delete
  10. ஹாஹாஹ்....ஜோக்ஸ்....143 புதிய தகவல் ஜி! நல்ல தகவல் சொன்னீங்க....

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ரொம்ப 'உயரமான' தகவல் ?
      நன்றி

      Delete
  11. அட, ஆமாங்க ஜீ ஒட்ட மாட்டேன்குது ஜீ..ஆனா குடல்ல ஒட்டிக்கிருதே..ஜீ

    ReplyDelete
    Replies
    1. குடல்லே ஒட்டிகிட்ட பலன் சீக்கிரம் கிடைச்சுரும் !
      நன்றி

      Delete